என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்துணவு ஊழியர்கள் பேரணி
- ஓய்வு வயதை உயர்த்த வலியுறுத்தல்
- கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ராணிப்பேட்டையில் நேற்று கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர்.பேரணிக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இந்த பேரணியானது காரை கூட்ரோட்டில் தொடங்கி சென்னை மும்பை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
பேரணியில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு பணியாளர்களை வைத்து நடத்த வேண்டும், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும், தேர்தல் வாக்குறுதியான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாபுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிர்வாகிகள் அளித்தனர்.






