என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஏ.சி. வேலை செய்யாததால் பெங்களூர்-சென்னை ரெயிலை நடுவழியில் நிறுத்தி பயணிகள் போராட்டம்
- ரெயில் நள்ளிரவு 12 மணிக்கு அரக்கோணத்திற்கு வந்தது.
- பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி ரெயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர்.
அரக்கோணம்:
சென்னையில் இருந்து நேற்று இரவு பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் 10.50 மணிக்கு புறப்பட்டு சென்றது.
பி 5 ஏசி கோச்சில் பயணிகள் பயணம் செய்தனர். அந்த பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது.
அப்பெட்டியில் உள்ள பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் இது குறித்து கூறினர். டிக்கெட் பரிசோதகர் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் ரெயில் நள்ளிரவு 12 மணிக்கு அரக்கோணத்திற்கு வந்தது. முதல் நடை மேடைக்கு வந்து நின்றது. அப்போது பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி ரெயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர்.
இதனால் ரெயிலை அங்கிருந்து இயக்க முடியவில்லை. அதிகாரிகள் வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்த ஏசி மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு ஏசியை சரி செய்தனர். இதன் பின்னரே பயணிகள் ரெயிலில் ஏறினர்.
இதையடுத்து பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.






