என் மலர்
ராணிப்பேட்டை
- சோளிங்கர் மின்வாரிய அலு வலகத்தில் நடந்தது
- மின் பணியாளர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்
சோளிங்கர்:
சோளிங்கர் மின்வாரிய அலு வலகத்தில் மின் இணைப்பு டன், ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சோளிங்கர் உதவி செயற் பொறியாளர் சங்கர் தொடங்கி வைத்தார். முகாமில் வீடு, கைத்தறி, விசைத் தறி, வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளுக்கான மின் இணைப்புதாரர்கள் தங்கள் மின் இணைப்புடன், ஆதார் எண்களை இணைத்தனர்.
ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்கட்டன அட்டை, ஆதார் அட்டை, செல்போன் எடுத்துவர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இளநிலை மின் பொறியாளர் மோகன் ராஜ், ஜெயபாரதி, முகவர்கள் ரமேஷ், சரவணப் பெருமாள் மற்றும் மின் பணியாளர்கள் உடனிருந்தனர்.
- மங்கல வாத்தியங்களுடன் அருள் பாலித்தார்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
சோளிங்கர்:
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமங்கைமன்னன் பத்து நாள் உற்சவம் நேற்று தொடங்கியது.
முதல் நாளான நேற்று திருமங்கை மன்னனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்ட தங்க கேடயத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்களு டன் சுவாமி சன்னதி தெருகோடி வரை சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- நெல் கொள்முதல் செய்ததில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன.
- வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 30 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில், அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இங்கு, நெல் கொள்முதல் செய்ததில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன.
வேலூர் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம், உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விசாரணை நடத்தினர்.
அதில், தனியார் வியாபாரிகள், எவ்வித நிலம் மற்றும் ஆவணங்களின்றி, ரூ.8 கோடி ரூபாய் மதிப்புக்கு மேல் நெல் கொள்முதல் செய்துள்ளனர்.
இதனால் அரசின் ஊக்கத்தொகையை தனியார் வியாபாரிகளும், அரசு அதிகாரிகளும் சேர்ந்து விவசாயிகளுக்கு கிடைக்கவிடாமல், பங்கு போட்டுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் இதுவரை வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 30 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி அரக்கோணம் அடுத்த சிறுகரும்பூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் குமரவேல் பாண்டியன், மேல்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
குமரவேல் பாண்டியன் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்ததாக போலியாக அடங்கல் சீட்டு கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் வழங்கியுள்ளார்.
இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
- ராணிப்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடந்தது
ராணிப்பேட்டை:
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டையில் 11,12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் 1,000 பேருக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் 45 ஆயிரம் பழ மரக்கன்று செடிகள், விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி தலைமை தாங்கினார்.மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பேனா, ஸ்கெட்ச், பேட், ரப்பர், பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கல்வி உபகரணங்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கி பேசியதாவது:-
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.உதயநிதி போல் ஒரு எளிமையான மனிதரை பார்க்க முடியாது. கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் கல்வியில் தமிழகம் முக்கியத்துவம் பெற்றது.
முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கு பல்வேறு திட்டங்களை வழங்கினார்.இல்லம் தேடி கல்வி, ஸ்மார்ட் வகுப்புகள், தாய்மார்கள் கஷ்டத்தை அறிந்து அனைவருக்கும் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் சலுகை கொடுத்திருக்கிறார். அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து விட்டு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 திட்டத்தையும் கொண்டு வந்தார்.
பள்ளிகளில் சிறப்பாக படித்து அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு மாடர்ன் பள்ளிகளை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார்.அந்த பள்ளியில் அனைத்து வசதிகளுடன் மாணவர்கள் தங்கி படிக்கலாம்.
இந்த அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. நான் சமீபத்தில் ஜப்பான் போனேன் அந்த நாடு போல நம் நாட்டை கொண்டு வரும் பொறுப்பு மாணவர்கள் ஆகிய உங்களிடம் இருக்கிறது நீங்கள் நன்றாக படித்து வீட்டையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
இதனை தொடர்ந்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் 45 ஆயிரம் பழச்செடிகள் மற்றும் விதைகள் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாளையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார்.இதில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மரக்கன்றுகள் மற்றும் விதைகள் வழங்கினார்.
இந்த பழமரக்கன்றுகள் மற்றும் விதைகள் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வீடுகள் தோறும் வழங்க அந்தந்த நகர செயலாளர்களிடம் அமைச்சர் காந்தி வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஜிகே உலக பள்ளி செயல் இயக்குனர் சந்தோஷ் காந்தி, மாவட்ட அவை தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தா, குமுதா, துரைமஸ்தான், மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- இன்று முதல் நடைமுறைக்கு வந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.21லட்சம் மதிப்பீட்டில் 73சிசிடிவி கேமராக்கள் பயன்பா ட்டிற்கு அமைச்சர் ஆர்.காந்தி இன்று தொடங்கிவைத்தார்.நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதியில் ரூ.7லட்சம் நகராட்சி நிதியில் ரூ.14லட்சம் என மொத்தம் ரூ.21லட்சம் மதிப்பீட்டில் நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலையான எம்.பி.டி ரோடு, அணைக்கட்டு ரோடு, சோளிங்கர் ரோடு போன்ற சாலைகளில் 73 சிசிடிவி கேராக்கள் பொருத்த ப்பட்டுள்ளதை அமைச்சர் ஆர்.காந்தி நகராட்சி வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றி பயன்பாடிற்கு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், வாலாஜா நகரமன்ற துணை தலைவர் கமலராகவன், நகராட்சி ஆணையாளர் குமரி அனந்தன், டி.எஸ்.பி பிரபு, தாசில்தார் நடராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சான்றிதழ் மற்றும் மரக்கன்று வழங்கப்பட்டது
- 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அசேன் முன்னிலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தௌபிக் பிர்கத் மாவட்ட செயலாளர் பாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் தொகுதி செயலாளர் தென்னரசு, தொகுதி பொறுப்பாளர்கள் பாஸ்கரன், கார்த்திகேயன், நரேந்திரன், முகம்மது காசிம், கண்மணி, ராஜா, லட்சுமிபதி, அய்யப்பன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குருதி நன்கொடை கொடுத்த தோழர்களுக்கு அரசு டாக்டர் ஷோபனா சான்றிதழ் மற்றும் மரக்கன்று வழங்கினார்.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.
- சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
- 35 பேர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள அல்ட்ராமரைன் மற்றும் பிக்மெண்ட்ஸ் நிறுவனத்தில் 2 நாட்கள் ரசாயன திறன் மேம்பாட்டு குழுமத்தின் சார்பாக பொறியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ராஜன் தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியில் அல்ட்ராமரைன், திருமலை, மல்லாடி, ஸ்டால், சுவிஸ் லேப் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து 35 பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் முடிவில் முன்னாள் இணை இயக்குனர் முகமது கனி கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அல்ட்ரா மரைன் நிறுவனத்தைச் சேர்ந்த வடிவேலன், திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த வெங்கட், ராகவன், மல்லாடி நிறுவனத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை அல்ட்ராமைரன் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ரவி செய்திருந்தார்.
- 100 பேருக்கு வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் தனியார் பள்ளியில் ஸ்ரீ காஞ்சி போதிதர்மர் சிடோரியு கராத்தே பள்ளியில் பயிற்சி பெற்ற 100 மாணவ மாணவிகளுக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் மாநில செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். பள்ளியின் மாநில பொருளாளர் மணி முன்னிலை வகித்தார்.
பள்ளியின் மாநிலத் துணைத் தலைவர் பிச்சாண்டி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சோளிங்கர் நகராட்சி துணைத் தலைவர் பழனி, பள்ளியின் மாநில தலைவர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 100 மாணவ, மாணவிகளுக்கு கருப்பு, பச்சை, மஞ்சள், ப்ளூ, ஆரஞ்சு உள்ளிட்ட பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
இந்தப் பள்ளியின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற மோகனப்பிரியா, சீனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பொழிலரசு, வெண்கல பதக்கம் வென்ற தாமரைச்செல்வன் ஆகியோரை பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இதில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
- நாளை முதல் தொடக்கம்
- கலெக்டர் அறிவிப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றையின் கீழ் திருநங்கைகள் மற்றும் திருநம்பி களுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டை வழங்கும் முகாம் நாளை 28ந் தேதி (திங்கட்கி ழமை) முதல் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை காலை 10 மணி முதல் 1 மணி வரை கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. 28ந்தேதி அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 29ந் தேதி நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகம், 30ம் தேதி காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம், டிசம்பர் மாதம் 1ந் தேதி சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகம், 2ந் தேதி வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம், 3ந் தேதி திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறும். எனவே, அனைத்து திருநங்கைகளும், திருநம்பிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
பாணாவரம் அடுத்த நிரஞ்சன் தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன் (வயது 54 ). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் குப்பன் பெங்களூரு செல்வதற்காக சோளிங்கர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். குப்பனால் ரெயில் நிலைய படி ஏறி நடைமேடைக்கு செல்ல முடியாத காரணத்தினால் முதல் நடைமேடையில் இருந்து 2-வது நடைமுறைக்கு செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் குப்பன் மீது மோதியது. இதில் அடிபட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து ரெயில்வே போலீசார் குப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- நரசிங்கபுரம் பள்ளி வளாகத்தில் நடந்தது
ராணிப்பேட்டை:
வாலாஜா ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சி புளியந்தாங்கல் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று ஊராட்சி ஒன்றிய தொடங்கி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு நரசிங்கபுரம் ஊராட்சிமன்ற தலைவர் வக்கீல் மனோகரன் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சபரி கிரிசன், ஒன்றியக்குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய குழு உறுப்பினர் புவனேஸ்வரி பாண்டியன் வரவேற்றார்.
இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக வாலாஜா ஒன்றியகுழு தலைவர் வெங்கட்ரமணன் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கு ஏற்று தொடங்கி வைத்தார்.
முகாமில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் மணிமாறன், லாலாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி விமலா, ஒன்றிக்குழு உறுப்பினர் பாப்பாத்தி ஜான் ஜெயபால், வட்டார மேற்பார்வையாளர் அண்ணாமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள். அனிதா, தேவி, அகிலாண்டேஸ்வரி, விஜயன், மணிகண்டன், ரம்யா, சுமதி, புவனேஸ்வரி, செல்வி, ஹேமலதா, செந்தாமரை, சித்ரா, சிவா, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆற்காடு நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
- பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
ஆற்காடு:
ஆற்காடு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலம் ஆற்காடு நகராட்சியில் எம்.ஜி.ஆர்சாலை தார்சாலை அமைக்கும்பணி வீட்டுவசதி வாரிய குடியிப்பு பகுதில்18 வது தெரு, அமீன் பீரான் தர்காதெரு, வேல்முருகேசன் தெரு, பூபதி நகர் 15 வது தெரு பகுதி உள்ளிட்டபல இடங்களில் தார்சாலை மற்றும் தண்டுகாரன் பகுதி6வது10 வதுதெரு மழைநீர் வடிகால்வாய், சிறுபாலம் மற்றும் பேவர்பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட 11 பணிகள் ரூ.188.4 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளுவது, தனலட்சுமி நகர் பகுதியில் ரூ 33 லட்சம், பார்த்தீபன் நகர் பகுதியில் 40 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மேம்படுத்தல், உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் பேசியாதவது-
ஆற்காடு நகரில் மின்சார தகன மேடை கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. அதை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தனர்.
30 வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை இனிவரும் காலத்தில் எனது வார்டுக்கு முன்னுரிமை தரவேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் கொசுமருந்து அடிக்க வேண்டும், ஆற்காடு பஸ் நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் சிலஇளைஞர்கள் பள்ளி மாணவிகளைகேலி கிண்டல் செய்கின்றனர் அவர்களை காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இடிக்கப்பட்டஅரசு மாதிரி பள்ளிக்கு பதிய கட்டிடங்கள் கட்டிதரவேண்டும்.
தலைவர் - உறுப்பினர்கள் குறைகளை நேரிலோ அல்லது தொலை பேசி மூலம் தெரிவித்தால்உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.






