search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "damage to rice crops"

    • விவசாயிகள் வேதனை
    • நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் தாழ்வான பகுதிகள், குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

    மலைகளில் நீரூற்று ஏற்பட்டு, நீரோடிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி அருகே உள்ள தேன்பள்ளி ஊராட்சி, வெங்கடாபுரம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கரில் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.

    இந்த விவசாய நிலங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்து, அழுகிய நிலையில் காணப்படுகிறது.

    இதனால் நெற்பயிர்கள் றுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்துள்ளனர்.

    • அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.
    • நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது சேதமடைந்து உள்ளது.

    குறிப்பாக இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் 100 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்து தற்போது அறு வடைக்கு தயாராக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வயல்களில் உள்ள நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி நெற் பயிர்கள் அழுகியது. இத னால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    குறிப்பாக ஒருபோக சாகுபடி மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் என்ற சூழ்நிலையில் கிணற்று பாசனத்தில் நடவு செய்து அறுவடை காலத்தில் மழை பெய்ததால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆகையால் மாவட்ட கலெக்டர் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு சேதம் அடைந்த நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தகுதியான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை
    • அதிகாரி தகவல்

    நெமிலி:

    நெமிலி சுற்று வட்டார பகுதிகளான வேட்டாங்குளம், ரெட்டிவலம், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது.

    இதனால் அப்பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும்பொருட்டு நேற்று பயிர் சேதங்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வடமலை நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது 43 ஏக்கர் நெற்பயிர் மழையால் லேசாக சேதமடைந்துள்ளது. எனவே தகுதியான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், உதவி வேளாண்மை அலுவலர்கள் நவமணி, ஸ்ரீபிரியா, செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கன மழையினால் அணைகள் நிரம்பியதால் கூடுதலாக அளவுக்கு அதிகமான தண்ணீர் மதகு வழியாக திறக்கப்பட்டன.
    • இதனால் சிறு-குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.

    விழுப்புரம்:

    பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறு, குளங்கள் நிறைம்பின. தொடர்ந்து கொட்டி தீர்த்த கன மழையினால் அணைகள் நிரம்பியதால் கூடுதலாக அளவுக்கு அதிகமான தண்ணீர் மதகு வழியாக திறக்கப்பட்டன. இதனால் தென்பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, பம்பை ஆறு போன்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள சிறுவந்தாடு, அகரம், ஆண்டியார் பாளையம் மேடு, பஞ்சமாதேவி, மோட்சகுளம், பரிசுரெட்டி பாளையம், கள்ளி ப்பட்டு, வடவா ம்பலம், பூவரசன்குப்பம், கொங்கம்பட்டு, வீராணம், சொரப்பூர், மேல்பாதி, கீழ்பாதி, கலிஞ்சிக்குப்பம், கிருஷ்ணாபுரம், மேட்டுப்பாளையம், பட்ட ரைபாதி, பேரிச்சம்பாக்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையாலும் சூறைக்காற்றாலும் கீேழ சாய்ந்து சேதமாகி உள்ளது. மேலும் தற்போது உரு வாகியுள்ள குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டல த்தின் காரணமாக மழை பெய்தால் மடிந்த நெற்பயிர்கள் முளைக்கும் அவல நிலை ஏற்பட்டு ள்ளது. இதனால் சிறு-குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.

    • தொடர்மழையால் தண்ணீரில் மூழ்கி சேதம்
    • ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள பயிர்களை அகற்ற உத்தரவு

    ஆற்காடு:

    கலவை தாலுகாவில் பெய்த மழையால் கலவைபகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

    அதைத்தொடர்ந்து கலெக் டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவுப்படி, கலவை தாலுகாவில் உள்ள சென்ன சமுத்திரம் மாந்தாங்கல், மேட்டூர் போன்ற பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கலவை தாசில்தார் மதிவாணன் பார்வையிட்டார். மேலும் ஏரியின் அருகே உள்ள நீர் பிடிப்பு பகுதியில் உள்ள நிலங்களில் நெற்பயிர்களை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.

    வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம அதிகாரி விஜி, கிராம உதவியாளர் குப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மாடுகள் மேய்ந்ததில் 75 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின.
    • கடந்த ஆண்டும் இதேபோன்று மாடுகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காவல்துறைக்கு புகார் செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா பனிக்கனேந்தல் 3 கண்மாய் பாசனத்தில் உள்ள 75 ஏக்கர் விவசாயத்தில் 50 மாடுகள் மேய்ந்து நாசமானது. இது தொடர்பாக கிராம மக்களும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்களும் வட்டாட்சியர் சாந்தியிடம் புகார் செய்தனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி மற்றும் விவசாயிகள் இரவு நேரங்களில் மாடுகள் விவசாய நிலங்களில் புகுந்து நெற்பயிர்களை அழித்ததை விவசாயிகள் சுட்டிக் காண்பித்தனர்.

    இந்த கிராமத்தில் 3 கண்மாய்கள் உள்ளது. 3 கண்மாய்கள் மூலம் மொத்தம் 100 ஏக்கர் பாசன பாசனம் பெறுகிறது. வைகை கரையோரம் இருந்தாலும் வைகை தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    கண்மாயை நம்பித்தான் விவசாயம் நடைபெற்று வருகிறது. கண்மாயில் மழை தண்ணீர் நிரம்பி விவசாயம் நடைபெறுகிறது. இங்கு நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. 3 மாத காலம் நெல் விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் விவசாயிகளிடம் உள்ளது.

    பூச்சிகளில் இருந்து பாதுகாப்பு செய்ய வேண்டி உள்ளது. பன்றிகளால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டி உள்ளது. அதுபோக கடந்த 3 ஆண்டு காலமாக மானாமதுரை நகர் அழகர் கோவில் தெருவில் உள்ள சுமார் 75 மாடுகளால் விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது.

    மாடுகள் வளர்ப்போர் மாலையில் அவிழ்த்து விடுகிறார்கள். இந்த மாடுகள் வைகை கரை ஓரம் செல்கிற பாதையில் நல்ல நிலையில் இருக்கும் நெற்பயிர்களை மேய்ந்து அழித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் மானாமதுரை வட்டாட்சியர் சாந்தியிடம் புகார் தெரிவித்தனர் . கடந்த ஆண்டும் இதேபோன்று மாடுகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காவல்துறைக்கு புகார் செய்தனர். அதன் பின்பு ஓரளவுக்கு மாட்டின் உரிமையாளர்கள் கட்டுப்பட்டு இருந்தனர். தற்போது மீண்டும் மாடுகள் அவிழ்த்து விடப்படுகிறது.

    அந்த மாடுகள் கடந்த 4 நாட்களாக நெற்பயிர்களை அழித்து 75 ஏக்கர் விவசாயத்தை மேய்ந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.தற்போது விவசாயிகள் மும்முரமாக பாசன பணிகளில் இரவு, பகல் பாராமல்பணி செய்து வருகின்றனர்.

    ஆனால் கால்நடைகளில் இருந்து விவசாயத்தை காப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி மற்றும் விவசாயிகள் வட்டாட்சியரிடம் கேட்டுக் கொண்டனர்.

    • சாலைகளில் குதிரைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.
    • அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மேய்ந்து, நடப்பட்டிருக்கும் நாற்றுகளை சேதப்படுத்தி வருகின்றன.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதி சாலைகளில் குதிரைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மேய்ந்து, நடப்பட்டிருக்கும் நாற்றுகளை சேதப்படுத்தி வருகின்றன.

    ஆலாங்காட்டு வலசு பகுதியில் விவசாயி முருகன் என்பவரது வயலில் நுழைந்த குதிரைகள், அங்கு நட்டு வைக்கபட்டிருந்த நாற்றுகளை தின்றும், மிதித்தும் பெருமளவில் சேதப்படுத்தி உள்ளன.

    முருகன் வயலில் 2 ஏக்கர் அளவுக்கு நெற்பயிர்களை மேய்ந்துள்ளது. நடவு கூலி, ஏர் ஓட்ட, உரம் போட என ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது.

    மேலும் சாலைகளில் கூட்டம் கூட்டமாக திரியும் குதிரைகளை நகராட்சி நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×