ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Published on

ராணிப்பேட்டை:

அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியைச் சேர்ந்தவர் சாருமதி (வயது 20). அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (21) இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.

சாருமதியின் பெற்றோருக்கு இது தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த 20-ந்தேதி வீட்டில் இருந்து சாருமதி வெளியேறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

அதை தொடர்ந்து சாருமதி ராணிப்பேட்டை எஸ்.பி. ஆபீசில் பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com