கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை அளவீடு பணி நடந்தது

100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது பொதுமக்கள் சாலை மறியல்
கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை அளவீடு பணி நடந்தது
Published on

அரக்கோணம்:

அரக்கோணத்தில் பொதுமக்கள் மறியல் காரணமாக கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற் றுவதற்கான அளவீடு பணி நடந்தது. அரக்கோணம்-திருத்தணி பிரதான சாலையில் மங்கம்மா பேட்டை மேம்பாலம் அருகே செந்தில் நகர் பகுதி யில் ஆக்கிரமிப்புகளால் கால்வாய் இருந்தஇடம் தெரியாத அளவுக்கு உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் வெளியேறாமல் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற் பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வெளியே றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கடந்த 13-ந் தேதி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் தாசில்தார் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்ட னர்.

இதனை தொடர்ந்து அப்ப குதிபொது மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் மனு மீதான நடவடிக்கை யாக அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு செய்யும் பணி நேற்று நடை பெற்றது.

அப்போது தலைமை நில அலுவலர் ரவி, கைனூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, பாரஞ்சிவரு வாய் ஆய்வாளர் குழந்தை தெரேசா, கைனூர் கிராம நிர்வாக அலுவலர் சேகர், ராஜு மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com