என் மலர்
நீங்கள் தேடியது "It will be completed soon and will be open to the general public"
- 1.10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது
- ரூ.25 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த சூரை கிராம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் குடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்கள் பயண்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்பாண்டியன் மக்கள் நல பணியாளர் முருகேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
இந்த தரைமட்ட கிணறு செம்பேடு சூரை, ஆயல், போளிப்பாக்கம், தப்பூர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ரூ.25 கோடி மதிப்பில் 10 தரைமட்ட கிணறுகள் அமைக்க பணி நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.






