என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு வாகனம்
    X

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண்களுக்கான இலவச நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்த காட்சி.

    ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு வாகனம்

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • சிகிச்சைக்குப்பின் ஊக்கத்தொகையுடன் ரூ.5,100, ஒரு முட்டை அரிசி வழங்கப்படும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை மூலம் ஆண்களுக்கான இலவச நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வினை பொது மக்களிடையே ஏற்படுத்திடும் வா கனத்தினை கொடியசைத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    ஆண்களுக்கான இலவச புதிய, எளிய, நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம், வேலூர் மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பாக நேற்று முதல் வருகிற 4-ந்தேதி வரை அரசு மருத்துவமனை திருப்பத்தூர், அரசு மருத்துவமனை வாணி யம்பாடி மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும் ஆண்களுக்கான இலவச குடும்பநல புதிய எளிய நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளன.

    தகுதி வாய்ந்த ஆண்களுக்கு செய்யப்படும் இக்கருத்தடை சிகிச்சைக்குப்பின் அரசு வழங்கும் ஊக்கத்தொ கையுடன் சேர்த்து ரூ.5,100 மற்றும் ஒரு முட்டை அரிசி வழங்கப்படும்.

    மேலும், இக்கருத்தடை சிகிச்சை கத்தியின்றி, ரத்தமின்றி தையலின்றி, தழும்பின்றி புதிய எளிய நவீன முறையில் செய்யப்படும். மருத்துவ மனையில் தங்க வேண்டிய அவசியமும் இல்லை, கருத்தடைக்குப்பின் உடனே அனைத்து வேலைகளையும் செய்யலாம்.

    இந்த புதிய எளிய நவீன முறையில் செய்யப்படும் ஆண்களுக்கான இலவச குடும்பநல புதிய, எளிய, நவீன கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள விரும்பும் தகுதி வாய்ந்த ஆண்கள் கீழ்காணும் தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி/தொலைப்பேசி எண்கள்: 1) 94861 30650 2) 94436 61155 (3) 63691 88112 (4) 98947 95689 (5) 0416-2221322 மேலும் ஆண்களுக்கான இலவச குடும்பநல புதிய, எளிய, நவீன கருத்தடை சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து நாட்களிலும் இலவசமாக செய்யப்ப டுகிறது. மேலும் விவ ரங்களை அறிய அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி பெற்றுக் கொள்ளுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (குடும்ப நலம்) மருத்துவர் மணிமேகலை, துணை இயக்குநர் (பொது சுகாதார பணிகள்) மருத்துவர் மணிமாறன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ரகுராமன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×