என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.
பெண்கள் அதிக அளவில் அரசியலில் ஈடுபட வேண்டும்
- ஓச்சேரியில் பா.ம.க. மகளிர் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
- கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட மகளிர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். க. சரவணன், மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிர் சங்க செயலாளரும் ஒன்றிய கவுன்சிலர் தீபா கார்த்திகேயன் வரவேற்புரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலம்மாள், மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராஜா ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
மேலும் வீடுகள் தோறும் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக அதிக இடங்களில் வெற்றி பெற உழைக்க வேண்டும். பெண்களை அதிகமாக கட்சியில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
இதில் மாநில இளைஞர் அணி செயலாளரும், நெமிலி ஒன்றிய துணை சேர்மன் எஸ். தீனதயாளன், மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சக்ரவர்த்தி, மூத்த நிர்வாகி இராமதாஸ், மாவட்ட துணை தலைவர் தட்சணாமூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர் கா.கி. சங்கர், காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர் கோ.வே.சங்கர், காவேரிப்பாக்கம் நகர செயலாளர் ராமு நாயக்கர், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் மாதவன், மருத்துவர் பாலாஜி, மகளிர் சங்கம் நிர்மலா முத்து, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.






