என் மலர்
நீங்கள் தேடியது "வீட்டை நோட்டமிட்ட திருடன்"
- போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- விசாரணையின் போது திருடன் தப்பி ஓட்டம்
நெமிலி:
பாணாவரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள பாறைமேடு பகுதியில் சுமாா் 20 -க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் கூலி வேலை செய்யும் ஏழுமலை என்பவரின் வீட்டில் மா்மநபா் ஒருவர் நேற்று வீட்டின் வாசற்படியில் நுழைந்து வீட்டை நோட்டமிட்டார். வீட்டில் இருந்த ஏழுமலையின் பிளஸ்-2 படிக்கும் மகள் மா்மநபரை நீங்கள் யார்? என்ன வேண்டும் என கேட்டுள்ளாா்.
அதற்கு அந்த மா்மநபா் எதையும் கூறாமல் நின்றார் பக்கத்து வீட்டின் அருகே இருந்த ஏழுமலையின் மனைவிஅங்கு வந்தார். அவரை கண்டதும் மர்ம நபர் தப்பி ஓடி அருகில் இருந்த குளத்தில் குதித்து புதரில் மறைந்துள்ளாா்.
அப்பகுதி மக்கள் ஓடிவந்து மறைந்த மா்ம நபரை தேடினார். நீண்ட நேரத்திற்கு பிறகு மக்கள் அவனை பிடித்து கைகால்களை கட்டி போட்டனர். இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
ஆனால் ஒரு மணிநேரம் கழித்து போலீசார் வந்து மா்மநபரை கைகால்கள் கட்டவிழ்து விசாரித்தனர். அப்போது மா்மநபா் மீண்டும் தப்பி தலைமறைவாகி விட்டார்.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இதுகுறித்து முறையிட்டுள்ளனா்.
ஆனால் போலீசார் முறையான பதில் அளிக்காமல் அவர்களை வெளியேற்றினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.






