என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரைப்பாலத்தில் தற்காலிகமாக போக்குவரத்து தடை"

    • போலீசார் பத்திரமாக மீட்டனர்
    • சமூக வலைதளங்களில் வீடியோ பரவல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கரியகுடல் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கள்ளாறு, சிறுணமல்லி தரைப்பாலத்தில் கனமழை காரணமாக அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் தரைப்பாலத்தில் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அரக்கோணத்தில் இருந்து நெமிலி நோக்கி அவ்வழியாக மது போதையில் வந்த நபர் தண்ணீரின் ஆபத்தை அறியாமல் தரைப்பாலத்தில் நடந்து சென்றார்.

    பாலத்தின் நடுவே வந்து நின்றுகொண்டு, செய்வது அறியாமல் தவித்தார்.

    நெமிலி தனிப்பிரிவு போலீசார் தங்கராஜ் மற்றும் காவலர்கள் பிலால் அகமது, முரளி ஆகியோர் சென்று அந்த நபரை பத்திரமாக மீட்டு வந்தனர். அவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    இந்த காட்சியை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வடிலைதளத்தில் பரவவிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

    ×