ஆற்காட்டில் கடையில் திருட்டு

ரூ.40 ஆயிரம், மளிகை பொருட்களை அள்ளி சென்றனர் போலீசார் விசாரணை
ஆற்காட்டில் கடையில் திருட்டு
Published on

ஆற்காடு:

ஆற்காடு வீட்டு வசதி வாரிய பகுதி 2-ல் வசித்து வருபவர் நாகராஜன் (வயது 62). இவரது மனைவி வாணிஸ்ரீ. இவர்கள் மளிகை கடை நடத்தி வரு கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்ததும் நாகராஜன் மற்றும் வாணிஸ்ரீ ஆகியோர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். மீண்டும் நேற்று காலை கடையை திறக்க வந் துள்ளனர்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கடை யில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் மளிகை பொருட் கள் திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து நாகராஜன் ஆற்காடுடவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com