என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணாபுரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்ட போது எடுத்த படம்.
கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை
- ரூ.6.75 லட்சத்தில் அமைக்கப்படுகிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 30ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் இல்லாமல் அவதிப்படுவதாக மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நாகராஜிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
மனுவை ஏற்றுக்கொண்டு கழிவுநீர் கால்வாய் அமைப்ப தாக உறுதியளித்தார். அதனை தொடர்ந்து கிருஷ்ணா புரம் கிரா மத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நிதியில் இருந்து 6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணசந்திர் தலைமையில் நடைபெற்றது.
இந்த பணிக்கான பூமி பூஜை போட்டு பணியை துவக்கி வைத்தார். பணியை விரைந்து முடிக்க வேண்டும் கட்டுமான பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளி, விதவை, முதியோருக்கு உதவித்தொ கை வழங்கினார்.30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றி தந்த மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நாகராஜிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
அப்போது ஒன்றிய குழு துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், புலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் திருமலை, புலிவலம் ஒன்றிய குழு உறுப்பினர் நதியாமதன்குமார், மத்திய ஒன்றிய நிர்வாகிகள் மணி, லோகநாதன், பார்த்திபன், தங்கதுரை, பாபு, பூபாலன், எத்திராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






