என் மலர்
நீங்கள் தேடியது "The snake lurking in the bike"
- கைப்பிடி முன் பகுதியில் பதுங்கியிருந்தது
- ஏராளமான கூட்டம் கூடியது
அரக்கோணம்:
அரக்கோணம் அம்மனூர் பகுதியை சேந்தவர் சிவா. இவரது நண்பர் ரகு. இவர்கள் இருவரும் பைக்கில் நேற்று இரவு எஸ் ஆர் கேட் பகுதிக்கு வீட்டு தேவையான பொருட்களை வாங்க சென்றனர்.
பொருட்களை வாங்கிக் கொண்டு பைக்கில் ஏற முயன்றனர். அப்போது பைக்கிற்குள் பாம்பு ஒன்று புகுந்து சென்றது. இதனை பார்த்து அவர்கள் கூச்சலிட்டனர்.
பைக்கை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அப்போது பாம்பு திடீரென பைக்கின் உள்பகுதிக்குள் புகுந்தது. அதற்குள் அங்கு ஏராளமான கூட்டம் கூடியது.
கம்பு மற்றும் சில பொருட்களைக் கொண்டு பைக்கை சுற்றி தேடிப் பார்த்தனர்.
பாம்பை பிடிக்க முடியாததால் அந்தப் பகுதியில் இருந்த மெக்கானிக்கை வரவழைத்து பைக்கின் பாகங்களை ஒவ்வொன்றாய் கழற்றினர். ஆனால் பாம்பு அவர்களிடம் சிக்காமல் ஆட்டம் காட்டியது.
பின்னர் முன் பகுதியில் உள்ள கைப்பிடி நடுவில் உள்ள மேல் பாகத்தை கழட்டிய போது 2 அடி நீளமுள்ள பாம்பு அங்கு பதுங்கி இருந்தது. அதனை பிடித்து வெளியில் எடுத்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






