ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புக்கு பங்கு தொகை செலுத்த வேண்டும்

கலெக்டர் தகவல் 7 ஒன்றியங்களில் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது
ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புக்கு பங்கு தொகை செலுத்த வேண்டும்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் அனைத்து ஊரக குடியிருப்புகளுக்கும் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2020 21-ஆம் ஆண்டு திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 79 கிராம ஊராட்சிகள் (அரக்கோணம்-12. ஆற்காடு-13. காவேரிப்பாக்கம் -4. நெமிலி-18, சோளிங்கர்-11. திமிரி-12 மற்றும் வாலாஜா-9) தேர்வு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாய் இணைப்பிற்கு பொதுமக்கள் பங்குத் தொகையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு குக்கிராமங்களுக்கு ரூ.600 மற்றும் பொது பிரிவு குடியிருப்புகுக் கிராமங்களுக்கு ரூ.1200 தொகையும் செலுத்தப் படவேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் இதுநாள் வரையில் தங்களது பொதுமக்கள் பங்குத்தொகையினை செலுத்தாதவர்கள் அதற்கான தொகையினை தங்களது ஊராட்சியில் உள்ள ஊராட்சிகணக்கு ஜல் ஜீவன் கணக்கில் செலுத்தி அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் 2022-23-ம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 5 கிராம ஊராட்சிகள் (அரக்கோணம்- 17 பணிகள்) தேர்வு செய்யப்பட்டு வீடுதோறும் குடிநீர் வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே இதற்கான தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சியில் உள்ள பயனாளிகள் தங்களுக்கான பொதுமக்கள் பங்குத் தொகையினை உரியகணக்கில் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில் முன்கூட்டியே செலுத்தி அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ளவும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com