என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ரெட்டை குளம் பகுதியில் பதுங்கி இருந்தவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்
    • ஜெயிலில் அடைப்பு

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 50). விவசாயி. இவருக்கும் இவரது சகோ தரி மகன் அஜித் (22) என் பவருக்கும் நிலம் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஜோதி மீது அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜோதியை, அஜித் வெட்டி கொலைசெய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

    இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ரெட்டை குளம் பகுதியில் பதுங்கி இருந்த அஜித்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

    • திருப்பத்தூரில் முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள்.

    திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் தர்மபுரி கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள காந்தி சிலை அருகே பிபின் ராவத் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முப்படை வீரர்கள் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கி மாலை அணிவித்தார்.

    துணைத் தலைவர் கே.அருள் செயலாளர் ஆர்.மோகன் முன்னிலை வகித்தனர். முன்னாள் முப்படையை சேர்ந்த வீரர்கள் முனியப்பன், கனகராஜ் லோகநாதன் உட்பட மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    • கிராம மக்கள் வலியுறுத்தல்
    • 80 ஆண்டுக்கும் மேலாக கடும் இன்னலுக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த பரவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னபரவத்தூர் கிராமத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு முறையான பாதை வசதி இல்லாமல் கிராம மக்கள் கடும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சின்னபரவத்தூர் கிராமத்தில் முதியவர் ஒருவர் இறந்துவிட்டார்.பாதை வசதி இல்லாததால், முட்புதர் மண் டிய நிலத்தின் வழியாக எடுத்து சென்றனர்.

    பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறை சார்பில் மயான பாதை அமைக்க அளவீடு பணிகள் நடைபெற்றது.

    ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகள் மயானத்திற்கான பாதையை சீரமைத்து, சாலை அமைத்துத்தர வேண்டும் எனவும், ஓடைக்கால்வாயை கடந்து செல்ல சிறுபாலம் அமைக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 290-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
    • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தொடங்கி வைத்தார்

    சோளிங்கர்:

    சோளிங்கரில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாமிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க சோளிங்கர் வட்டார மேலாளர் அலமேலு தலைமை தாங்கினார்.

    உதவி திட்ட அலுவலர் சாகுல் அமீது முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட இயக்குனர் நானிலதாசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    வேலை வாய்ப்பு முகாமில் 290-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 102 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெங்குப்பட்டு ராமன், நதியா மதன்குமார், மாரிமுத்து, சுப்பிரமணி மற்றும் வட் டார இயக்க அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • ரூ.380 தினக் கூலியாக வழங்க வலியுறுத்தல்
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் அருகே மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை, பல ஆண்டுகளாக பணியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் காண வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக் கூலியாக வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கியது
    • வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று ரேசன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ஆற்காடு மற்றும் விஷாரம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப் போது கீழ் விஷாரம் பகுதியைச் சேர்ந்த அகமத் பாஷா (வயது 61) என்பவர் அவரது வீட்டின் அருகில் தலா 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் சுமார் 1 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    அதைத்தொ டர்ந்து அகமத் பாஷாவை போலீசார் கைது செய்தனர். அரிசியை பறிமுதல் செய்து வாலாஜா நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    • நிலம் சம்பந்தமான பிரச்சினையால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 50). விவசாயம் செய்து வந்தார். இவருக்கும் இவரது சகோதரி மகன் அஜித் (22) என்பவருக்கும் ஏற்கனவே நிலம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக ஜோதி மீது அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஜோதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது அவரை அஜித் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியை வெட்டினார். பின்னர் ஜோதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அஜித் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அஜித்தை தேடி வருகின்றனர்.

    சொத்திற்காக மாமா என்று கூட பார்க்காமல் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பலருக்கு காயம் ஏற்பட்டது
    • துப்புரவு பணியாளர்கள் பிடித்தனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட தக்கான்குளக்கரை அருகில் நேற்று காலை வழக்கம் போல் பொதுமக்கள் அவர்களின் அன்றாட பணிகளுக்காக வாகனங்களிலும், நடந்தும் சென்றனர்.

    அப்போது பசுமாடு ஒன்று திடீரென சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டி, விரட்டி முட்டியது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் தயக்கம் காட்டினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையர் பரந்தாமன் மற்றும் சுகாதார ஆய்வாளர் வடிவேல் ஆகியோர் சென்று நகராட்சி துப்புரவு பணியாளர்களைக் கொண்டு அந்த பசு மாட்டை பிடித்து, கால்களை கட்டி, நகராட்சி வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

    மாட்டின் உரிமையாளர் யார் என்று தெரியாததால் அவர் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.பொதுமக்களை மாடு விரட்டி, விரட்டி முட்டிய சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கலெக்டர் தகவல்
    • விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் கபடி பயிற்சி மையம் அமைக் கப்படவுள்ளது. இந்த பயிற்சி மையத்தின் பயிற்றுநர்களாக பணியாற்ற விருப்பம் உள்ளவர் கள் விண்ணப்பிக்கலாம்.

    குறைந்தபட்சம் தலா 30 ஆண்கள், பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். பயிற்றுநர் 11 மாதங்கள் மட்டும் பணிபுரிய வேண்டும். மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

    தகுதியுடைய விண்ணப்ப தாரர்கள் ஆண்கள், பெண்கள் விடுதி, நேருநகர், சத்து வாச்சாரி வேலூர் மாவட்டம் 632 009 என்ற முகவரிக்கு சென்று 10-ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017-03462 6760TM தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

    • 1 டன் சிக்கியது
    • தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது

    நெமிலி:

    சோளிங்கர் ரெயில் நிலையத்தில் ரேசன் அரிசி கடத்துவதாக அரக்கோணம் ெரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ெரயில்வே பாதுகாப்பு படை சப் - இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் வின்சன், ரைட்டர் பாஸ்கரன் ஆகியோர் சோளிங்கர் ெரயில்வே நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ெரயிலில் ஏற்ற வைத்திருந்த சுமார் ஒரு டன் ரேசன் அரிசியை 37 மூட்டைகளில் இருந்தது. அதனை பறிமுதல் செய்து பறக்கும் படை தாசில்தார் இளஞ்செழியன் அவர்களின் ஒப்படைத்தனர். 

    • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதாக புகார்
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தகவல்

    நெமிலி:

    நெமிலி அடுத்த பரமேஸ்வர மங்களத்தில் தென்றல் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    பல வருடங்களாக வசித்து வரும் இந்த பகுதியில் சிமெண்ட் சாலை வசதி இல்லை இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி இருக்கிறது.

    மேலும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா டெங்கு போன்ற விஷக் காய்ச்சல் பரவுகிறது. இந்த வழியாக ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி கல்லூரி வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்ப டுகின்றனர்.

    தென்றல் நகர் வரும் வழியில் நீர் நிலை கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் வழி குறுகலாக உள்ளது. எனவே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெமிலி பி.டி.ஓ. அலுவலகம் சென்று ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, துணை சேர்மன் தீனதயாளன் மற்றும் பி.டி.ஓ. சிவராமன் முன்னிலையில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • கலெக்டர் வழங்கினார்
    • 236 பேர் பயனடைந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மாதாந் திர மாற்றுத் திறனாளிகளுக் கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

    கலெக் டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, முகாமில் கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் 124 நபர்களுக்கும், காது கேளா தோர் 48 நபர்களுக்கும், கண் பாதிக்கபட்பட்ட 37 நபர்களுக் கும், பொது நல மருத்துவம் தொடர்பாக 12 நபர்களுக்கும் மற்றும் குழந்தை நல மருத்துவம் தொடர்பாக 15 நபர்களுக்கும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களால் மாற்றுத்தி றனாளிகள் என மொத்தம் 236 பேருக்கு தேசிய அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுடன் கூடிய அடையள அட்டைகளை வழங் கினார்.

    மேலும் 29 நபர்களுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட் டத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது. அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வேண்டி 12 நபர்களும், வங்கிக்கடன் வேண்டி 8 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 9 நபர்களும், சக்கர நாற்காலி வேண்டி 5 நபர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் வார செவ்வாய்க் கிழமை தோறும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் மாற்று த்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.

    முகாமில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முடநீக்கவியல்

    வல்லுநர் ஸ்டெல்லா மேரி, எலும்பியல் மருத்துவர் வெங்கடேஷ்

    மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×