என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயான பாதை இல்லாததால் சிறு பாலம் அமைக்க வேண்டும்
- கிராம மக்கள் வலியுறுத்தல்
- 80 ஆண்டுக்கும் மேலாக கடும் இன்னலுக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த பரவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னபரவத்தூர் கிராமத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு முறையான பாதை வசதி இல்லாமல் கிராம மக்கள் கடும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சின்னபரவத்தூர் கிராமத்தில் முதியவர் ஒருவர் இறந்துவிட்டார்.பாதை வசதி இல்லாததால், முட்புதர் மண் டிய நிலத்தின் வழியாக எடுத்து சென்றனர்.
பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறை சார்பில் மயான பாதை அமைக்க அளவீடு பணிகள் நடைபெற்றது.
ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகள் மயானத்திற்கான பாதையை சீரமைத்து, சாலை அமைத்துத்தர வேண்டும் எனவும், ஓடைக்கால்வாயை கடந்து செல்ல சிறுபாலம் அமைக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






