என் மலர்
ராணிப்பேட்டை
- 3,156 விவசாயிகள் பாதிப்பு
- அதிகாரி தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த புயல் மழை காரணமாக 1,912 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நாசமாகின.
இதனால் 2,814 விவசாயிகள் பாதிப்படைந்தனர். 76 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பருப்பு வகை பயிர்கள் நாசமாகின.
இதனால் 116 விவசாயிகள் பாதிப்படைந்தனர். 170.91 ஹெக்டேர் பரப்பள வில் பயிரிடப்பட்ட நிலக்கடலை பயிரும் நாசமாகின, 225 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேபோன்று தினை வகை பயிர்களும் பாதிப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 2,160 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமானது.
மேலும் 24.1 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிர்கள், 31.31 ஹெக்டேர் பரப்பளவில் வாழை மரங்கள், 28.15 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி பயிர்கள் நாசமாகின ஆக மொத்தம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,243 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமானது. 3,259 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் சராசரியை விட கூடுதலாக மழை பெய்துள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை 967 மில்லி மீட்டர் ஆகும். இந்த ஆண்டு இதுவரை 1,159.71 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவத்தில் சராசரி மழை அளவான 373.8 மில்லி மீட்டருக்கு இந்த ஆண்டு 402.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாண்டஸ் புயலின் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 122.8 மி.மீ. மழை பெய்துள்ளது.
இதனால் இந்த பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் 1912ஹெக் டேர், திலக்கடலை 170.1 ஹெக் டேர், பயறுவகை பயிர்கள் 76 ஹெக்டேர் நீரில் முழ்கியுள்ளன. பெரும்பாலான பயிர்கள் வளர்ச்சி பருவத்தில் உள்ளன.
நீரில் முழ்கியுள்ள பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் கீழ்கண்ட நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள். தாழ்வான நிலங்களில் மழைநீர் வெளியேர ஏதுவாக வடிகால் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மேலுரமாக தழை சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 25 சதவீதம் கூடுதலாக இட வேண்டும்.தழை சத்து மற்றும் நுண்ணூட்டசத்து குறைபாடு காணப்பட்டால் இலை வழியாக தெளிக்கப்பட வேண்டும். பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கத்தை கூர்ந்து கண்காணித்தல் வேண்டும்.
நெல் பயிரிடப்பட்ட வயலில் உள்ள கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும். நெற்பயிர் துரிதமாக வளர்ச்சி அடைந்திட ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் டிஏபி மற்றும் 10 கிராம் பொட்டாசியம் குளோரைடை இலைவழியாக தெளிக்கலாம். தொடர்ந்து ஒரு வார கால இடைவெளியில், ஒருலிட்டர் தண்ணீரில் 3 கிராம் போரிக் அமிலம் மற்றும் 5 கிராம் ஜிங்க் சல்பேட், 5 கிராம் பெரஸ்சல்றார்கள்.
பேட், மற்றும் 10 கிராம் யூரியா என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசல் தயாரித்து இலைவழியாக தெளிக்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள வயல்களில் நீரை வடித்த பின்பு மேலுரமாக ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருந்து மறு நாள் தெளிக்கும் போது அதனுடன் பொட்டாஷ் 17கிலோ கலந்து மேலுரமாக இட வேண்டும். ஒருவாரம் கழித்து இலைவழி உரமாக ஏக்கருக்கு யூரியா 2 கிலோ, துத்தநாக சல்பேட் ஒரு கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
தூர் கட்டும் தருணத்தில் ஊட்டச்சத்து" பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய உடனடியாக தழைச்சத்து கிடைப்பதற்கு ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு அம்மோனியம் சல்பேட் 50 கிலோ அல்லது ஏக்கருக்கு அம்மோனியம் குளாரைடு 42 கிலோ என்ற அளவில் மேலுரமாகவும், பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிர்களை பாதுகாக்க ஏக்கர் ஒன்றுக்கு டிஏபி 4 கிலோவை 10 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் தெளிந்த நீரை வடிகட்டி இந்த கரைசலுடன் பொட்டாஷ் உரம் 2 கிலோ சேர்த்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைவழி உரமாக தெளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துத்தநாக சத்து பற்றாக் குறை உள்ள நெல் வயல்களில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ சிங்க் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸை 20 கிலோ மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். மேற்கண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றி மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாத்து அதிக மகசூல் பெற வேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- தொடர் மழையால் நடவடிக்கை
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரக்கோணம் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல சிரமம் அடைய கூடாது என்பதற்காக நெமிலி மற்றும் அரக்கோணம் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
- அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை
- அதிகாரிகள் ஆய்வு
அரக்கோணம்:
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. அதன்படி அரக்கோணம் அடுத்த அரிகிலபாடி கிராமத்தில் ரமேஷ் என்பவரது வீடு அரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ளது. நேற்று மழையின்போது புளிய மரம் ஒன்று அவரது வீட்டின் மீது விழுந்தது.
ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் அருகில் உள்ள தந்தை வீட்டில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாகயாருக்கும் எவ்வித பாதிப் பும் ஏற்படவில்லை. சேதம் அடைந்த வீட்டினை அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் பார்வையிட்டார்.
மழையால் தணிகைபோளூர் பெரிய ஏரி நிரம்பி கடவாசல் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் கடவாசலில் மீன்களை பிடித்து வருகின்றனர். அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் மேம்பாலம் அருகே உள்ள செந்தில் நகரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
- காப்பகத்தில் ஒப்படைத்தனர்
- பெற்றோர், ஊர் விவரம் தெரியவில்லை
கலவை:
கலவையை அடுத்த பாத்திக்காரன் பட்டி கிராமம் அருகே வழி தெரியாமல் சிறுமி தவித்துக்கொண்டிருந்தாள். பொது மக்கள் அளித்த தகவலின்பேரில் சிறுமியை திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மீட்டு வேலூர் அல்லாபுரம் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்ல காப்பகத்தில் ஒப்படைத் தார்.
அந்த சிறுமி தனது பெயர் ரேணுகா என கூறினாள். ஆனால் பெற்றோர், ஊர் விவரம் தெரியவில்லை.
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் - சித்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே காட்பாடி ரெயில் மார்க்கத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ் பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பிணத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.
- அமைச்சர் காந்தி நலதிட்ட உதவிகளை வழங்கினார்
- சாலையில் தேங்கிய மழை நீரை அகற்ற உத்தரவு
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்தமேலபுலம் கிராமத்தில் சாலையில் மழை நீர் தேங்கியது. மழைநீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழை நீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கியது.
அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
மேலபுலம் ஏரிக்கரையோரம் புயலால் பாதிக்கப்பட்ட 70 பேைர மீட்டு அங்குள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போர்வை மற்றும் நலதிட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
- மின் கம்பி அறுந்து விழுந்து பரிதாபம்
- அதிகாரிகள் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகு தியை சேர்ந்தவர் துரைக்கண்ணு (53). விவசாயியான இவர் மாடுகளையும் மேய்த்து வருகிறார்.
நேற்று வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 2 பசுமாடுகள் மீது மின்சார கம்பி விழுந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து 2 மாடுகளும் பரிதாபமாக இறந்தன.
இதேபோல புளிய மங்கலம் ஸ்ரீராம் நகர் அறுந்து பகுதியை சேர்ந்த குமார சாமி என்பவரது பசுமாடும் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் பரிதாபமாக இறந்தது.
அரக்கோணம் அடுத்த அணைக்கட்டாபுதூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் 2 செம்மறி ஆடுகள் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்குள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சென்ற 2 ஆடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன.
இதுகுறித்து அந்தந்த பகுதி விஏஓகள் அளித்த தகவலின் பேரில் அரக் கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் நேரில் சென்று விசாரித்து வருகிறார்.
- 62 வகை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது
- ஆரோக்யலஷ்மிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது
வாலாஜா:
வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 18-வது ஆண்டு வருஷாபிஷேக விழா, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 62-வது ஜெயந்தி விழா, தீர்த்தக்குளம் திறப்பு விழா, ஸ்தல வரலாறு நூல் வெளியீட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா நேற்று தொடங்கி வருகிற 11-ம் தேதி முடிய நடைபெறுகிறது.
விழாவில் முதல் நாளான நேற்று மங்கள இசையுடன் கோ பூஜை, விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி, மஹா கணபதி, நட்சத்திர நவக்கிரக பூஜை, ஸ்ரீ தன்வந்திரி, ஏகாதச ருத்ர ஹோமம் உள்பட 62 வகை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனையுடன் ஸ்வாமிகளுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் 62 சுமங்கலிகள், 62 கன்னி பெண்கள் பங்கேற்ற சுமங்கலி, கன்யா பூஜைகள் நடைபெற்றது.விழாவில் ஸ்தல வரலாறு நூல் வெளியிடப்பட்டு சாதுக்களுக்கு வஸ்திரம், 5கிலோ அரிசி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.பின்னர் மூலவர் ஸ்ரீ தன்வந்திரிக்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
மாலையில் வாலாஜா ஸ்ரீ நடராஜ பெருமான் நாட்டிய பள்ளி எம்.ஷன்மதி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தவத்திரு.கூனம்பட்டி ஆதினம், கலவை சச்சிதானந்த சுவாமிகள், நங்க நல்லூர் காமாட்சி ஸ்வாமிகள், பெலாகுப்பம் ஸ்ரீலஸ்ரீ ரகுராம அடிகளார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சிப்காட் நவசபரி ஐயப்பன் கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் ஸ்வாமிகள், வாலாஜா தாசில்தார் நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 9 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசினர்
- பாதுகாப்பு நிதி ஒரு லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்
வாலாஜா:
ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க ராணிப்பேட்டை மாவட்ட முதல் மாநாடு நேற்று வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் டி.வி.எத்துராஜ் தலைமை தாங்கினார். முனைவர் கலைநேசன் வரவேற்றார். அறிக்கையை குறித்து மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் பேசினார்.
கூட்டத்தில் மாநிலத்தலைவர் கோ.முரளிதரன் 75 அகவை முடிந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
கூட்டத்தில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்துதல் அகவிலைப்படி உடனடியாக வழங்க்கோரியும், 70 வயதானவர்க்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் கேட்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சமாக உயர்த்தக் கோருதல், மருத்துவப்படி ரூ.1000 உயர்த்தக்கோருதல், மூத்த குடிமக்களுக்கு ெரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்க வேண்டும், நாடாளுமன்ற நிலைக்குழு அறிவித்துள்ள ஓய்வூதிய அறிக்கையை உடனே அமுல்படுத்த வேண்டும், கம்யூடேசன் பிடித்தம் தொகையை 12 ஆண்டுகளாக குறைத்தல் பற்றி வலியுறுத்தி 9அம்ச கோரிக்கைகளை குறித்து பேசினர்.
வரதன், சுந்தரேசன், கோவிந்தசாமி, ஜெயக்குமார், தேவநேசன், மோகன், கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டனர். மேலும் இயற்கை மருத்துவத்தைப் பற்றி ஆரோக்கியத்தின் சாவி என்ற தலைப்பில் அரசு மருத்துவர் எஸ்.சசிரேகா ஆலோசனை வழங்கினார்.
மாநில இணை செயலாளர் நிலவு குப்புசாமி நன்றி கூறினார்.
+2
- விஷாரம், அருங்குன்றம் கிராமத்தில் 3 மின் கம்பங்கள், தென்னை மரங்கள் சாய்ந்தன.
- ராணிப்பேட்டை மாவட்டத்தை மாண்டஸ் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் இடைவிடாமல் மிக கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
நேற்று நள்ளிரவு முதல் மாண்டஸ் புயல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோர தாண்டவம் ஆடியது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
மேல் வீராணம் அருகிலப்பாடி போலிப்பாக்கம் ஆகிய இடங்களில் சாலையோரம் நின்ற பெரிய புளிய மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரங்களை இன்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் வெட்டி அகற்றினர்.
வாலாஜா வீட்டு வசதிக்கு வாரிய குடியிருப்பு பகுதியில் பெரிய மரமொன்று சாய்ந்து விழுந்தது.
ஆரப்பாக்கத்தில் ஆயிரக்கணக்கான வாழைகள் புயல் காற்றில் சாய்ந்து நாசமானது. நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 குடிசை வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.
அரக்கோணம், மின்னல், பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், ஆற்காடு பகுதியில் மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக மாவட்டத்தில் மின்னலில் 197 மில்லி மீட்டர் காவேரிபாக்கத்தில் 109 பனப்பாக்கத்தில் 195 அரக்கோணத்தில் 141 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இந்த பகுதியில் உள்ள ஏரிகள் ஏற்கனவே நிரம்பி உள்ளதால் மழை வெள்ளம் காரணமாக ஏரிகளில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 369 ஏரிகள் உள்ளன.இதில் 178 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. மேலும் 5 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. 58 ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. புயல் மழை காரணமாக இந்த ஏரிகளும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளன.
நெமிலி அருகே உள்ள உத்திரம்பட்டு கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இது பற்றி தகவல் இருந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
விஷாரம், அருங்குன்றம் கிராமத்தில் 3 மின் கம்பங்கள், தென்னை மரங்கள் சாய்ந்தன. பரவத்தூர் சாலையில் புளியமரம் சாய்ந்தது. இதனை அகற்றும் பணி நடந்தது.
பாணாவரம் அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில் நேற்று இரவு வீட்டின் மீது பெரிய புளிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குமார் (வயது 69) அவரது மனைவி சத்யா மற்றும் மகன் சவுந்தர்ராஜன் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தை மாண்டஸ் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து கணக்கெடுத்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் விவரம்:
ராணிப்பேட்டை- 18.40, அரக்கோணம்- 141.50, மின்னல்-197.80, ஆற்காடு- 66, காவேரிப்பாக்கம்-109, பனப்பாக்கம்-195.80, வாலாஜா-41.2, அம்மூர்- 14, பாலாறு அனைக்கட்டு-53.4, சோளிங்கர்-60.8, கலவை- 42.60.
- அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் நடந்தது
- அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் 99- வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா மழையின் காரணமாக விமான தளத்தின் உள் அரங்கில் நடைபெற்றது.
விழாவுக்கு அரக்கோணம் ஐ. என். எஸ். ராஜாளி கடற்படை அதிகாரி வினோத்குமார் பார்வையிட்டார் .
சிறப்பு விருந்தினராக கோவா கடற்படை அதிகாரி விக்ரம் மேனன் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார் .
அதனைத் தொடர்ந்து பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட வீர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அனைத்து துறைகளிலும் சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட சதீஷ் ராஜ் பிரதீர்க்கு கேரள சுழற் கோப்பை வழங்கினர்.
இப்பயிற்சி 21 வாரங்களாக நடந்தது. இதில் துப்பாக்கி சுடுதல் ஹெலிகாப்டர் பராமரித்தல் இயக்குதல் தரை மற்றும் கடற் பகுதியில் சிறப்பாக இயக்குவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
விழாவில் ஐ என் எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தின் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






