என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்த அவரது தாயார் மாணவியிடம் விசாரித்தார்.
    • சிறுமியை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்ததில் மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அருகே வசிப்பவர் சலீம் (21 வயது) கூலி தொழிலாளி. இவரது மனைவி கடந்த ஆண்டு பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். இதன் காரணமாக சலீமுக்கு உறவினர் குடும்பத்தினர் தினமும் சாப்பாடு வழங்கி வந்தனர்.

    இந்த நிலையில் சலீமுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்த 9ம் வகுப்பு மாணவியை கடந்த ஜூன் மாதம் மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் இந்த சம்பவத்தை அடிக்கடி சொல்லி சிறுமியை பயமுறுத்தி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்த அவரது தாயார் மாணவியிடம் விசாரித்தார். அப்போது நடந்ததை சிறுமி கூறியுள்ளார்.

    பின்னர் சிறுமியை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வாசுகி வழக்கு பதிவு செய்து சலீமை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒன்றிய குழு தலைவர் வடிவேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பனப்பாக்கம் அடுத்த ரெட்டிவலம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.29 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சிமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    ரெட்டிவலம் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி ரமேஷ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், வேதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் வடிவேலு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி வெங்கடேசன், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரூபிணி, மேற்கு ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சதீஷ்குமார், ஊராட்சி செயலர் விஜயகுமார், ரமேஷ். உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் தகவல்
    • டோக்கன்கள் வினியோகம் தீவிரம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3,44,679 மொத்த அரிசி குடும்ப அட்டைதாரர்களும், முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் குடும்ப அட்டை 376 குடும்பங்களும், சிறப்பாகக் கொண்டாட பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரூ.1,000 வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தினை 9.01.2023 முதல் - அமைச்சர் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு பொங்கல் திருநாளுக்கு முன்னர் வரை வழங்கப்படும்.

    மேலும் ரேசன் கடைகளில் சுழற்சி முறையில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 3.1.2023 முதல் 8.1.2023 வரை வீடு தோறும் சென்று ரேசன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.

    குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவர் வந்தாலும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருட்கள் வாங்கச் செல்ல வேண்டும்.

    மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் உடன் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04172-2271766-க்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • இரட்டை கொலை வழக்கு சம்பவத்தில் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட் டம் வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 35). சரக்கு ஆட்டோ டிரைவர். தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35), லாரி எலக்ட்ரிஷியன். நண் பர்களான இவர்கள் இருவ ரும்.நேற்று முன்தினம் மாலை புத்தாண்டை முன்னிட்டு வி.சி.மோட்டூரில் உள்ள லாரி பழுது பார்க்கும் நிலையத்தில் மது அருந்தியதாக கூறப்படு கிறது.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் குழந்தை வேலுவை கத்தியால் குத்தி யுள்ளார். இதனை தடுக்க சென்ற சரவணனையும் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கத்தி குத்தில் காயம டைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    அந்த சம்பவம் குறித்து துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் காண் டீபன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அங்கிருந்த கண்கா ணிப்பு கேமராவில் பதிவான ஒரு நபரை பிடித்து விசா ரணை நடத்தினர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தீபா சத்யன் உத்தர வின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசா ரணை மேற்கொண்டனர். விசாரணையில் வி.சி. மோட்டூரில் லாரி பழுது பார்க்கும் நிலையம் உள்ளது. இங்கு புத்தாண்டு விடுமுறை யையொட்டிலாரியை பழுது பார்ப்பதற்காக திருத்தணியை அடுத்த டி.புதூர் பெரிய தெருவை சேர்ந்த நிர்மல்கு மார் (25) என்றலாரிடிரைவர் தனது லாரியை பழுது பார்க்க கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

    அப்போது நிர்மல்குமாருக் கும், மெக்கானிக் சரவணனுக் கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிசரவணன் மற்றும் குழந் தைவேலு ஆகிய இருவரும் நிர்மல்குமார் லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்த தாக கூறப்படுகிறது. மேலும் நிர்மல் குமாரை தாக்க முயன்றதாகவும் தெரிகிறது. தொடர்ந்து குழந்தைவேலு யாருக்கோ போன் செய்துள்ளார்.

    இதனால் நிர்மல்குமார் அச்சமடைந்துள்ளார். திடீரென அவர் லாரியில் வைத்தி ருந்த கத்தியை எடுத்து குழந்தை வேலு மற்றும் சரவணன் ஆகியோரை சாலையில் ஓட ஓட விரட்டி சரமாரியாக குத்தி உள்ளார்.

    நிர்மல்குமாருக்கு ஏற்கனவே கொலை முயற்சி கொள்ளை, அடிதடி, உள்ளிட்ட பல்வேறு வழக்கு களில் தொடர்புடையதும், அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள தாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிர் மல்குமாரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    • நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
    • கலெக்டர் தலைமையில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குறைகளை கேட்டறிந்தார்.

    மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப் பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 180 மனுக்களை கலெக்டர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டார்.

    தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் துறை தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபானைமை யினர் நல அலுவலர் முரளி, உதவி ஆணையாளர் கலால் சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) மணிமேகலை, மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடந்தது
    • பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்

    திருப்பாற்கடல்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சொர்க்கவாசல் வழியாக வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சோளிங்கர்:

    108 திவ்யதேசங்களில் ஒன்றான சோளிங்கர் பகுதி அமைந்துள்ள யோக லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

    பக்த்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக வெளிவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் அனைவரும் சுவாமி சொர்க்கவாசல் வழியாக வெளியே வரும் போது கோவிந்தா என கோஷம் எழுப்பினர்.

    இதனைத் தொடர்ந்து பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தோசித்த பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாட்டை திருக்கோயில் இந்து அறநிலைத்துறை உதவி ஆணையாளர் ஜெயா செய்திருந்தார்.

    • சிறப்பு பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றது.வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில இன்று காலை 5.30 மணிக்கு மங்கல வாத்தியத்துடன் கோ பூஜை உள்பட மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்தார். பின்னர் பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்கி தன்வந்திரி பீட வளாகத்திற்குள் உற்சவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வளாகத்தில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • சிறப்பு ஆராதனை நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    நெமிலி:

    நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. அன்னை பாலா அபிஷேகமும், ஆராதனையையும் ஸ்ரீ பாலா பீட நிர்வாகி மோகன்ஜி செய்தார்.

    சந்தோ'ஷ பாலா. என்னும் அன்னை பாலாவின்வண்ண படத்தை பீடாதிபதி கவிஞர் நெமிலி ஏழில்மணி வெளியிட, சென்னை சூர்யா மருத்துவமனை இதய நோய் பிரிவு தலைமை மருத்துவர் ஜெய ராஜா தனது குடும்பத்துடன் பெற்றுக்கொண்டார்.

    குருஜி பாபாஜியின் தலைமையில் ஆத்மீக குடும்பங்கள் பாலா பாராயண பாடல்களை பாடினார்கள். திரைப்பட பின்னணி பாடகி சுதா இன் னிசை வழங்கினார். பாலா பீட செயலாளர் முரளிதரன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை நெமிலி இறைப்பணி மன்றத்தார் மற்றும் அன்னை பாலா ஆத்மீக குடும்பங்கள் செய்தனர்.

    • கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • புத்தாண்டு அன்று ஒரே ஊரை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (35) பைக் மெக்கானிக் மற்றும் லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரேமா. இவருக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். வி.சி.மோட்டூர் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35) லாரி எலக்ட்ரிஷியன். இவரது மனைவி ரேகா.இவருக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் குழந்தைவேல் மற்றும் சரவணன் ஆகியோர் நேற்று மாலை புத்தாண்டை முன்னிட்டு விசி.மோட்டூரில் உள்ள லாரி மெக்கானிக் செட்டில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது மர்ம நபர் ஒருவர் குழந்தைவேலுவை கத்தியால் குத்தினார். இதனை தடுக்க சென்ற சரவணனையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து மர்ம நபர் தப்பி சென்றார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைவேல் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சரவணன் தீவிர சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.

    இச்சம்பவம் குறித்து டி.எஸ்.பி பிரபு, இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் வழக்கு பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் ஏதேனும் முன்விரோத காரணமாக கொலை நடந்துள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லாரி செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியின் முன்பக்க கண்ணாடி உடைக்கபட்டு இருந்தது. அந்த லாரியை வாலாஜா போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

    கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதன் மூலம் சந்தேகத்தின் பேரில் லாரி டிரைவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் இரட்டை கொலையில் துப்பு துலங்கியுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    புத்தாண்டு அன்று ஒரே ஊரை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    • அடிக்கடி கவுதமி வீட்டுக்கு சென்று தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
    • சஞ்சீவிராயன் கவுதமியை வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கருங்கல்லால் தாக்கினார்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் ஒட்டனேரி கிராமத்தை சேர்ந்தவர் கவுதமி (வயது 32) இவருடைய கணவர் முனிசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இதனால் தனது மகன், மகளை காப்பாற்ற ராணிப்பேட்டையில் உள்ள ஷு கம்பெனியில் கவுதமி வேலை பார்த்து வந்தார்.

    கவுதமியின் தங்கை பிரியா என்பவரின் கணவர் சஞ்சீவிராயன் (35) கூலித் தொழிலாளி. இவருக்கு கவுதமி மீது ஆசை ஏற்பட்டது. அடிக்கடி கவுதமி வீட்டுக்கு சென்று தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    நேற்று முன்தினம் கவுதமியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இது குறித்து கவுதமி சோளிங்கர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதுடன் சஞ்சீவிராயனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் நேற்று கவுதமி மற்றும் அதே ஊரை சேர்ந்த சுகன்யா, கோமளா 3 பேரும் வேலை முடிந்து தகரகுப்பம் பஸ் நிலையத்தில் இருந்து ஒட்டனேரிக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது சஞ்சீவிராயன் அங்கு வந்தார். அவர் கவுதமியை வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கருங்கல்லால் தாக்கினார். இதில் கவுதமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனியா, கோமளா இருவரும் ஊருக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினர். பொதுமக்கள் அங்கு வந்தபோது கொலை செய்த சஞ்சீவிராயன் தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கவுதமியின் உறவினர்கள் சஞ்சீவிராயனை கைது செய்யாமல் பிணத்தை எடுக்கக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு வந்த அரக்கோணம் டி.எஸ்.பி. கிரேஸ் யாதவ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவார் என உறுதி அளித்தார்.

    இதையடுத்து போலீசார் கவுதமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சஞ்சீவிராயனை போலீசார் தேடி வருகின்றனர். 

    • ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்
    • பஸ்சின் முகப்பில் இளஞ்சிவப்பு வண்ணமிட்டு சுலபமாக அடையாளம் கண ஏற்பாடு

    ராணிப்பேட்டை:

    தமிழக முதலமைச்சர் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2.31 கோடி மகளிர்கள் பயனடைந்துள்ளதாக ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சோளிங்கர் பணிமனையில் 14 டவுன் பஸ்களும், ஆற்காடு பணிமனையில் 50 டவுன் பஸ்களும் என மொத்தமாக 64 டவுன் பஸ்களில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் என பிரத்யேகமான ஒட்டுவில்லைகளையும் ஒட்டி பஸ்சின் முகப்பில் இளஞ்சிவப்பு வண்ணமிட்டும் பெண்கள் சுலபமாக பஸ்களை அடையாளம் கண்டு பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

    இத்திட்டம் மூலம் தினசரி 48,312 பெண்களும், கடந்த 08.05.2021 முதல் தற்பொழுது வரை 2.31 கோடி மகளிர்கள் மற்றும் 26.000 திருநங்கைகள் நகரப் பஸ்களில் இலவசப் பயண சலுகை பெற்றுள்ளனர் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×