என் மலர்
ராணிப்பேட்டை
- ஓச்சேரி அருகே நடந்தது
- கொலையா? விசாரணை
நெமிலி:
நெமிலி அடுத்த ஒச்சேரியில் உள்ள மக்லின் கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று நேற்று மிதந்தது.
இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்கு அடைந்தனர். பின்னர் ஒச்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மிதந்து கிடந்த பிணத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீஸ் விசாரணையில் அவர் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் புதிய தெரு பகுதியை சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து இங்கு வீசி சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- கலெக்டர் அதிரடி நடவடிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 22). பிஞ்சி ஆத்துக்கால்வாய் தெருவை சேர்ந்தவர் அஜய் (21) இவர்கள் 2 பேரும் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
இது சம்பந்தமாக கடந்த மாதம் 13-ந்தேதி அன்று கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படி இருவரும் கஞ்சா சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் சாமுவேல் மற்றும் அஜய் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் 2 வாலிபர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து அவர்கள்குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
- தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜா ரெயில் நிலையம் அருகேரெயில்வே தண்டவா ளத்தை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் சம் பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் சோளிங் கரை அடுத்த பள்ளிப்பட்டு தாலுகா அத்திமான் சேரிப் பேட்டையை சேர்ந்த தர்ம லிங்கம் (வயது 73) எனத் தெரி யவந்தது.
இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப தகராறில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
காட்பாடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்பாபு (வயது 50) வியாபாரி. இவரது மனைவி மைதிலி. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
இதனால் மைதிலி ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் சதீஷ் பாபு தனது மனைவி மைதிலியை சேர்ந்து வாழ வரும்படி அடிக்கடி அரப்பாக்கம் வந்து அழைத்துள்ளார். அதற்கு மைதிலி சம்மதிக்கவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி அரப்பாக்கத்திற்கு வந்து தனது மனைவியை சேர்ந்து வாழ மீண்டும் அழைத்துள்ளார். அப்போதும் மைதிலி சம்ம திக்காததால் அவர் கண் முன்னே விஷத்தை குடித்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலை யில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குட் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விலை உயர்ந்த செல்போன் பறிமுதல்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீஸ்இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகத் திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முர ணாக பதில் தெரிவித்ததால் ரெயில்வே போலீஸ் நிலையத் திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் அரக்கோணம் புதுப்பேட்டை பகு தியை சேர்ந்தராகுல் (வயது 23) என்பதும், கடந்த 6மாதத்திற்கு முன்பு ரெயில் பயணி ஒருவரின் செல்போனை திருடிச்சென் றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- நீச்சல் தெரியாததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த தாமரைப் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கெஜராஜ் (வயது 43), அதேப் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.
இவர் சம்பவத்தன்று அருகில் இருந்த கிணற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கெஜராஜ் கிணற்றில் பிணமாக கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது
- பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே பள்ளுர் ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பள்ளுர் ஊராட்சி மன்றதலைவர் பிரதாப் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றிய துணை தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தார்.
இம்முகாம் சவீதா மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மற்றும் பள்ளுர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் ஏற்பாடு செய்யபட்டது. பொதுநலமருத்துவம், கண், எலும்பு, பல், தோல், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் நலம், பெண்கள் நலம், ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- குடும்ப தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த வேடல் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 39), விவசாயி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 31-ந்தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் சிவலிங்கம் விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் பிரத்யேக பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மைய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, நகரமன்ற தலைவர் ஹரிணி, துணை தலைவர் கமலராகவன், நகர செயலாளர் தில்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் உஷா நந்தினி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பிரத்யேக பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மைய கட்டிடத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மைய கட்டிடத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 28 நாட்கள் வரை உள்நோயா ளியாக இம்மையத்தில் அனுமதி பெற்று சிகிச்சை வழங்கப்படும். பச்சிளம் குழந்தைகள் உட்பிரிவுகள், 5 உள்பிரசவமான குழந்தை கள், 5 வெளி பிரசவமான குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள், தாய்மார்கள் அறை, செவிலியர்கள் பிரிவு போன்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் பிறந்தவுடன் அழாத குழந்தைகள், மூச்சு திணறல் ஏற்படும் குழந்தைகள், நோய் தொற்று ஏற்பட்ட குழந்தைகள், மஞ்சள் காமாலை பாதித்த குழந்தைகள், எடை குறைவான குழந்தைகள். குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் ஆகிய குழந்தைகள் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் வாம் மிஷின் பச்சிளம் குழந்தை களுக்கு சிகிச்சை அளிக்க 4 அமைக்கப்பட்டுள்ளது.
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த கனியன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம் மாள்(வயது 50), விவசாயி. இவருக்கு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகனுக்கும், மகளுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ராஜம்மாள் மற்றும் ராஜேஷ்சும் தனியாக வசித்து வருகின்றனர். ராஜேஷ் (26), பொக்லைன் டிரைவராக உள்ளார்.
இந்நிலையில் ராஜம்மாள் நேற்று காலை 7 மணியளவில் வீட் டில் இருந்த மாடுகளை தனது விவசாய நிலத் திற்கு அழைத்துச் சென் றதாக கூறப்படுகிறது. ராஜேஷ் பணிநிமித்தமாக காலை 8 மணியளவில் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
பின்னர், மாலை 5 மணி அளவில் ராஜம் மாள் விவசாய நிலத்தி லிருந்து வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந் துள்ளார்.
மேலும், வீட் டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ வில் இருந்த ரூ.50 ஆயிரம், மோதிரம், தாலி சரடு, செயின், தங்க வளையல்கள் உட் பட 15 பவுன் நகைகள் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கலவை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தக வல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.
பின்னர், வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்க ளை வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்
- அதிகாரிகள் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட திருமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்.இவரது மகன் சுகுமார் (41).
இவர் தனது வீட்டின் பின்புறம் விசைத்தறி பட்டறை வைத்து நெசவுத் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென விசைத்தறிக்கு செல்லும் மின்சாரலைனில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
இதில் தீ மளமளவென பரவி விசைத்தறி பாவுகள் மற்றும் நூல் கோன்கள் எரிந்து நாசம் அடைந்தது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் மின்சார இணைப்பை துண்டித்து விட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பனப்பாக்கம் விஏஓ பூபாலன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
- நாய்கள் கடித்து பரிதாபம்
- வனத்துறையினர் தீயிட்டு எரித்தனர்
நெமிலி:
பாணாவரம் காப்பு காடு பகுதியில் காட்டுப் பன்றி, முள்ளம்பன்றி, புள்ளி மான்கள் உள்ளிட்ட மிருகங்கள் உள்ளது. நேற்று மாலை காப்பு காடு பகுதியில் இருந்து வழி தவறி புள்ளிமான் ஒன்று நெமிலி அடுத்த கரியாக்குடல் என்ற ஊருக்குள் புகுந்தது.
அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீரை அருந்திக்கொண்டு இருந்தது. இதனைக் கண்ட தெரு நாய்கள் மானை விரட்டி விரட்டி கடித்தது. இதில் மான் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
இது குறித்து அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக வருவாய் துறை கிராம அலுவ லருக்கும், பாணாவரம் வனத்துறை யினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புள்ளி மானை பிரேத பரிசோதனை செய்து அப்பகுதியிலேயே தீயிட்டு எரித்தனர்.






