என் மலர்
ராணிப்பேட்டை
- வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுவது குறித்து விளக்கம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கட்டளை ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர்.
மேலும் வாழை மரத்திற்கு ஏற்படும் நோய் மற்றும் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி கையாள வேண்டும் என ஆதிபராசக்தி கல்லூரி மாணவிகள் தர்ஷினி, டில்லி வந்தனா, திவ்யபாரதி, திவ்யஸ்ரீ, ஹரிணி, செ.ஹரிணி.
அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வாழை மரத்துக்கு ஊசி செலுத்தி நோய் தாக்கத்திலிருந்து எப்படி காப்பாற்ற வேண்டுமென செய்முறை விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் விவசாயிகள் முருகேசன் முனுசாமி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
- தண்டவாள பராமரிப்பாளர்கள் மற்றும் சீரமைப்பு பணியாளர்கள் உடனடியாக புளியமங்கலத்திற்கு விரைந்து வந்தனர்.
- ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அவர்கள் உரிய நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்வே ஊழியர்கள் கோபால், மரியம்தாஸ் இன்று காலை தண்டவாள பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது புளியமங்கலம் என்ற இடத்தில் பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்து அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கிருந்து தண்டவாள பராமரிப்பாளர்கள் மற்றும் சீரமைப்பு பணியாளர்கள் உடனடியாக புளியமங்கலத்திற்கு விரைந்து வந்தனர்.
அந்த நேரத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக அந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
சென்னை நோக்கி வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வேலூர் கண்ட்டோன்மென்ட் மின்சார ரெயில் மற்றும் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
புளியமங்கலம் பகுதியில் தண்டவாள விரிசல் ஏற்பட்ட இடத்தில் ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு செய்ததால் மறுபுறமும் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த நேரத்தில் சென்னையில் இருந்து சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ், சப்தகிரி எக்ஸ்பிரஸ், திருத்தணி மின்சார ரெயில்கள் ஆகியவை நடுவழியில் நிறுத்தப்பட்டன.
ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஜோலார்பேட்டையில் இருந்து செல்லக்கூடிய ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மின்சார ரெயில்களில் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஊழியர்கள் சென்னைக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர்.
ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அவர்கள் உரிய நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். சுமார் 10 ஆயிரம் பயணிகள் வரை ரெயில் தாமதத்தால் அவதியடைந்துள்ளனர்.
சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு ரெயில்கள் புறப்பட்டு சென்றன.
வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடும்பனி மூட்டம் நிலவுகிறது.
அதன் காரணமாக அதிகாலை நேரத்தில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது ஒருபுறம் இருக்க அடிக்கடி தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
- தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மோசூர் ரெயில் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் (வயது 73) என்பவர் தண்டவாளத்தை கடந்த போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற புறநகர் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத் துக்கு சென்று ராதாகிருஷ்ண னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக் கோணம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- 500 பேருக்கு அன்னதானம்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அமரர் வி.ராஜகோபால் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. சுவால்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு நகர த.மா.கா. தலைவரும் முன்னாள் துணை சேர்மனுமான கே.வி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
சமூக ஆர்வலர்கள் ஆர்.வெங்கட்ராமன் த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஜி. மோகன் காந்தி ஆகியோர் முன்னிலையில் தியாகி ராஜகோபால் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் த.மா.கா. மாவட்ட தலைவர் ஆர்.ஹரிதாஸ் தியாகி ராஜகோபால் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொதுமக்கள் சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் த.மா.கா. நிர்வாகிகள் ஸ்ரீதரணி, முன்னாள் கவுன்சிலர் பி.உத்தமன், ஆறுமுகம், பாலகிருஷ்ணன், முனுசாமி, தேவேந்திரன், ரவி, அனந்தராமன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பிரதிநிதி சாமிதுரை, காங்கிரஸ் நகர தலைவர் பார்த்தசாரதி, காவேரிப்பாக்கம் நகர தலைவர் உதயகுமார், முன்னாள் திமுக கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம், உள்ளிட்ட ஏராளமான நகர பிரமுகர்கள் கலந்து கொண்டு தியாகி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- நாளை நடக்கிறது
- மின் அதிகாரி தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் ஆர்.குமரேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டி ருப்பதாவது:-
ராணிப்பேட்டை மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் நுகர்வோர் கள் தங்களுடைய மின் இணைப்பு பெயர் மாற்றம், ஆதார் எண் இணைப்பு ஆகி யவற்றிற்கான சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாலாஜா திரு மலை தெருவில் உள்ள மாஸ் திருமண மண்டபத்தில் நடை பெற உள்ளது.
ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதி நகர், பெரி யார் நகர், சிப்காட், சிட்கோ, பெல், புளியந்தாங்கல், அக் ராவரம், வானாபாடி, செட் டித்தாங்கல், தண்டலம், அம் மூர் பஜார், வேலம், அண்ணா நகர், எடப்பாளையம், முத்துக் கடை, ஆட்டோ நகர், வீ.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந் திநகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்ன தகரகுப்பம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வன்னிமேடு, அம்மணந்தாங் கல், பெல்லியப்பா நகர், டி.கே. தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாக வெளி, முசிறி, வள்ளுவம் பாக் கம், அனந்தலை, அனந்தாங்கல், ஒழுகூர், வாங்கூர், கரடி குப்பம்,ஜி.சி.குப்பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங் காடு, லாலாபேட்டை, தக் காம்பாளையம், நெல்லிக்குப் பம், ஏகாம்பரநல்லூர், கத் தாரி குப்பம், பிள்ளையார் குப்பம், பேஸ் -3, சிப்காட், கல்மேல் குப்பம், கிருஷ்ணாவ ரம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுடைய மின் இணைப் பினை பெயர் மாற்றம், ஆதார் எண் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட் டிருந்தது.
- கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியன் தலைமை தாங்கினார்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு கலந்துகொண்டு வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனசேகர், பிடிஓக்கள் சிவராமன், வேதமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் ரகு, மருத்துவ அலுவலர் வெற்றிச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாளை மறுநாள் நடக்கிறது
- மின்கோட்ட அதிகாரி தகவல்
ஆற்காடு:
ஆற்காடு மின்கோட்ட செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு அறிவித்துள்ள மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த நாளை மறுதாள் (திங்கட்கிழமை) சிறப்பு. முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
அதன்படி,ரத்தினகிரி மின் பிரிவில் பூட்டுத்தாக்கு ரேஷன் கடை அருகில், மாங் குப்பம் பள்ளி, மேலகுப்பம் ஊராட்சி அலுவலகம், பெரு முகை கிராம நிர்வாக அலு வலகம், அங்கன்வாடி, சம் பங்கி நல்லூர், செங்காநத்தம் பகுதிகளிலும், காவனூர் மின் பிரிவில் பட்டணம். புங்க னூர்,சாம்பசிவபுரம், குப்பம், வெங்கடாவரம், பாலமதி ஆகிய ஊராட்சி அலுவலகங் கள், கத்தியவாடிமின் பிரிவில் தாழனூர், கத்தியவாடி, கீழ் குப்பம், ஆயிலம், அருங்குன் றம் ஆகிய ஊராட்சி அலுவல கங்கள், விஷாரம் மின் பிரி வில் வேப்பூர் கிராம நிர்வாக அலுவலகம், நந்தியாலம் ஊராட்சி அலுவலகம், தென் நந்தியாலம் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.
பொது மக்கள் மின் இணைப்பு எண், ஆதார் எண், செல்போன் எண் போன்ற விவரங்களுடன் வந்து இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
- மின் கசிவுவால் அசம்பாவிதம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி ஜி.எம். நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40), கூலித் தொழிலாளி. இவரது வீடு ஓலையினால் கட்டப்ப ட்டுள்ளது. இந்த நிலை யில் நேற்று ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்பு துறையி னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.
இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- சென்னை -பெங்களூர் அதிவிரைவு சாலை பணிக்காக உடைத்தனர்
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த செங்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் குடிநீர் மற்றும் விவசாயத் திற்கு நீர் ஆதாரமாக விளங் கும் ஏரி தற்போது நிரம்பியுள்ளது. இந்த நிலையில் சென்னை-பெங்களூரு அதி விரைவு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளுக்கு ஏரி நிரம்பியது இடையூறாக உள்ளதாக, சாலை அமைக்கும் பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்தை கொண்டு, ஏரி உபரிநீர் வெளியேறும் மதகை உடைத்து தண்ணீரை வெளி யேற்றியுள்ளனர்.
இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்தை விரட்டி அடித்தனர்.
பின்னர் பொக்லைன் எந்திரத்தால் உடைக்கப்பட்ட மதகு பகுதியை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மண்ணைக் கொண்டு அடைத்து தண்ணீர் வெளியேறுவதை தடுத்தனர்.
கிராமத்திற்கு குடிநீர் மற்றும் 300 ஏக்கர் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஏரியை உடைத்த சென்னை பெங்களூர் அதிவிரைவு சாலை கட்டுமான பணியாளர்கள் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது
- நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, திரு வள்ளூர், செங்கல்பட்டு, காட்பாடி மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், பல மாநிலங்களுக்கும் அதிக அளவில் பயணிகள் செல்கின்றனர்.
இதனால் அலுவலக நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் பயணிகள் கூட்ட நெரிசல் அதிக மாக இருந்து வருகிறது. இதன் காரணமாக டிக்கெட் கவுண்ட் டர்களில் டிக்கெட் எடுப்பதில் நெரிசல் ஏற்பட்டு பயணிகளி டையே அவ்வப்போது சண்டைகள் ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் விதமாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் நிரந்தர தடுப்பை அமைத்துள்ளனர்.
டிக்கெட் கவுண்ட்டர் முன்பு பயணிகள் வரிசையாக வந்து டிக்கெட் எடுக்கும் வகையில் ஸ்டீல் கம்பிகளை கொண்டு ரெயில் நிலையம் அருகே உள்ள இரட்டை கண் பாலத்தில், ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் பழனிபேட்டை பகுதியில் இருந்து ரெயில் நிலையம், பஜார் மற்றும் பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள், மோட்டார் சைக்கிளில் வருபவர்களும் பாலத் தில் தேங்கி நிற்கும் நீரால் விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.
எனவே, இதனை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு ரெயில்வே துறை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- ரோந்து பணியின்போது சிக்கினர்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி களில் சட்ட விரோத செயல்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து தடுக்கும் பணியில் அரக்கோ ணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையிலான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவர் கள் நேற்று மோசூர், செய்யூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது செய்யூர் கல்குவாரி அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசா ரித்தனர்.
அதில் அவர்கள் அரக்கோணத்தை அடுத்த மோசூர் பகுதியை சேர்ந்த காமேஷ் (வயது 23), செய்யூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (23) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தது. தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
அதேபோன்று தக்கோலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் தக்கோலம், அனந்தாபுரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அனந்தாபுரம் ஆற்று பாலம் அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவர் போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் தக்கோலம் பகுதியை சேர்ந்த மணி கண்டன் (22) என்பதும்.
கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கொண்டாபுரத்தில் இயங்கிவரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உறுப்பினர்க ளுக்கு பொங்கல்போன ஸ்மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் குமார் வரவேற்றார்.பேரூராட்சி வார்டு மன்ற உறுப்பினர் நரசிம்மன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பா ளர்களாக பேரூராட்சி தலைவர் லதாநரசிம்மன், துணை தலைவர் தீபிகாமுருகன் கலந்து கொண்டு மேற்படி சங்கத்திலுள்ள பால் உற்பத்தியாளர்ளுக்கு ஊக்கத்தொகையினை போனசாக வழங்கினர்.
போனஸ்தொகை யானது பால் உற்பத்தியில் லிட்டருக்கு ரூ. 1 என கணக்கிடப்பட்டு ரூ, 7-லட்சத்து 94-ஆயிரத்து 370-ரூபாய் 429 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஆய்வாளர் கீதா, நிர்வாக குழு உறுப்பினர்கள், முன்னாள் செயலாளர் குமார் மற்றும் ஈராளச்சேரி, பெருகரும்பூர், துறைபெரும்பாக்கம், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.






