என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொக்லைன் எந்திரம் மூலம் மதகை உடைத்து தண்ணீரை வெளியேற்றிய காட்சி.
ஏரி மதகை உடைத்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- சென்னை -பெங்களூர் அதிவிரைவு சாலை பணிக்காக உடைத்தனர்
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த செங்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் குடிநீர் மற்றும் விவசாயத் திற்கு நீர் ஆதாரமாக விளங் கும் ஏரி தற்போது நிரம்பியுள்ளது. இந்த நிலையில் சென்னை-பெங்களூரு அதி விரைவு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளுக்கு ஏரி நிரம்பியது இடையூறாக உள்ளதாக, சாலை அமைக்கும் பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்தை கொண்டு, ஏரி உபரிநீர் வெளியேறும் மதகை உடைத்து தண்ணீரை வெளி யேற்றியுள்ளனர்.
இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்தை விரட்டி அடித்தனர்.
பின்னர் பொக்லைன் எந்திரத்தால் உடைக்கப்பட்ட மதகு பகுதியை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மண்ணைக் கொண்டு அடைத்து தண்ணீர் வெளியேறுவதை தடுத்தனர்.
கிராமத்திற்கு குடிநீர் மற்றும் 300 ஏக்கர் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஏரியை உடைத்த சென்னை பெங்களூர் அதிவிரைவு சாலை கட்டுமான பணியாளர்கள் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






