என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புள்ளி மான் சாவு"

    • நாய்கள் கடித்து பரிதாபம்
    • வனத்துறையினர் தீயிட்டு எரித்தனர்

    நெமிலி:

    பாணாவரம் காப்பு காடு பகுதியில் காட்டுப் பன்றி, முள்ளம்பன்றி, புள்ளி மான்கள் உள்ளிட்ட மிருகங்கள் உள்ளது. நேற்று மாலை காப்பு காடு பகுதியில் இருந்து வழி தவறி புள்ளிமான் ஒன்று நெமிலி அடுத்த கரியாக்குடல் என்ற ஊருக்குள் புகுந்தது.

    அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீரை அருந்திக்கொண்டு இருந்தது. இதனைக் கண்ட தெரு நாய்கள் மானை விரட்டி விரட்டி கடித்தது. இதில் மான் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக வருவாய் துறை கிராம அலுவ லருக்கும், பாணாவரம் வனத்துறை யினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புள்ளி மானை பிரேத பரிசோதனை செய்து அப்பகுதியிலேயே தீயிட்டு எரித்தனர்.

    ×