மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 180 மனுக்கள் குவிந்தன

நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு கலெக்டர் தலைமையில் நடந்தது
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குறைகளை கேட்டறிந்தார்.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப் பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 180 மனுக்களை கலெக்டர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டார்.

தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் துறை தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபானைமை யினர் நல அலுவலர் முரளி, உதவி ஆணையாளர் கலால் சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) மணிமேகலை, மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com