என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • புகை மண்டலமாக மாறியது
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    சோளிங்கர்: 

    சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் மலைப்ப குதியில் தினசரி சேகரிக்கப்படும் 10 டன் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அதில் மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைத்து வருகின்றனர். 

    இந்த நிலையில் நேற்றும் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடந்தது
    • ஏராளமானேர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தலைமையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ / மாணவிகளை அருகாமையில் இருக்கின்ற கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று உயர்கல்வி வழிகாட்டலுக்கான கல்லூரி களப்பயணம் முன்னேற்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இந்த கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் நான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 66 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் 508 மாணவ மாணவிகளை உயர்கல்வி பயில ஆர்வமூட்டும் விதமாக அருகில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை அழைத்துச் சென்று உயர்கல்வி வழிகாட்டலுக்கான கல்லூரி களப்பயணம் முன்னேற்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், 12ம் வகுப்பு பயிலும் 508 மாணவ, மாணவிகளை நாளை (வெள்ளிக்கிழமை) கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினத்தில் மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல பஸ் வசதியும், உணவு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு உயர்கல்வி படிக்க ஆர்வமூட்டப்பட்டு உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, போக்குவரத்து துறை அலுவலர், அரசு கலைக் கல்லூரி முதல்வர்கள், அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வாலாஜா தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஏற்பாடு
    • 5 வாரங்கள் நடக்கிறது

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நாளை வெள்ளிக்கிழமை மாசி -12 பஞ்சமி திதி, அஸ்வினி நட்சத்திரம் 03.03.2023 வெள்ளிக்கிழமை மாசி – 19 ஏகாதசி திதி, புனர்பூசம் நட்சத்திரம் 10.03.2023 வெள்ளிக்கிழமை மாசி – 26 சதுர்த்தி திதி, சித்திரை நட்சத்திரம் 17.03.2023 வெள்ளிக்கிழமை பங்குனி – 3 ஏகாதசி திதி, உத்திராடம் நட்சத்திரம் 01.04.2023 சனிக்கிழமை பங்குனி - 18 ஏகாதசி திதி, ஆயில்யம் நட்சத்திரம் ஆகிய கிழமைகளில் தினமும் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாணவ, மாணவிகளின் நினைவாற்றல் அதிகரித்து உரையாடல் மற்றும் அறிவாற்றல் திறன் மேம்படவும், தேர்வுகளில் வெற்றி பெற்று கல்விப்பயணம் தொடரவும் ஏலக்காய் கொண்டு கல்வி மணம் கமழும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், வித்யா கணபதி ஹோமம், வித்யா லக்ஷ்மி ஹோமங்கள் நடைபெறவுள்ளது.

    இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    • 28-ந் தேதி கடைசி நாள்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    2023-24-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் தொடங்குதல், அங்கிகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகிறது.

    ஜனவரி 2ம் தேதி முதல் www.skilltraning.tn.govt.in, என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    2023- 24ம் கல்வி ஆண்டிற்கு அங்கிகாரம் பெற, ஒரு தொழிற்பள்ளி, ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது.

    விண்ணப்பிக்கவுள்ள அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ.5 ஆயிரம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28-ம் தேதியாகும்.

    அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் என்ற இணையதளம் மூலம் மேலும் விவரங்களுக்கு detischennai@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டும் விவரங்கள் பெறலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • படிக்கட்டில் தொங்கியபடி சென்றபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    திமிரியை அடுத்த மோசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கம லம். பஸ் டிரைவர். இவரது மகன் தினகரன் (வயது 17), ஆற் காட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பிளஸ்- 1 படித்து வருகிறார்.

    நேற்று காலை ஆரணியில் இருந்து விளாப்பாக்கம் வழியாக ஆற்காடு நோக்கி வரும் அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங் கியபடி பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.

    விளாப்பாக்கத்தை அடுத்த உப்புப்பேட்டை அருகே வரும் போது பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்த அவர் மீது பஸ்சின் சக்கரம் ஏறியதில் காலில் உள்ள கட்டை விரல் நசுங்கி உள்ளது.

    உடனே பஸ் நிறுத்தப்பட்டு தினகரனை பயணிகள் மீட்டனர். உடனடியாக தினகரனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திமிரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோந்து பணியின் போது சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையிலான போலீசார் மோசூர் ரோடு, ஷா நகர், குறிஞ்சி நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஷா நகர் சுடுகாடு அருகே சந்தேகிக்கும் வகை யில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், குறிஞ்சி நகரை சேர்ந்த மோசஸ் (வயது 26) என்பதும், கஞ்சா, வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மோசஸ்சை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீடு, வீடாக நிலவேம்பு கசாயம் விநியோகம்
    • அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட் டம் பனப்பாக்கம் பேரூ ராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளுர் கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலியானான்.

    அதன் எதிரொலியாக பனப்பாக்கம் பேரூராட்சி யில் விஷக்காய்ச்சல்க ளான டெங்கு, டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி காசிகார தெரு, பெரிய தெரு, சுப்ரமணிய கோவில் தெரு, வேளாளர்தெரு, அண்ணா நகர், அருந்ததியர் பாளையம், ஆதி திராவிடர் காலனி, தென் மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    • போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
    • மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்

    அரக்கோணம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த வளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் ஷேக் மொய்தீன் (வயது 68). இவரது மகன் அபிசூர் ரஹ்மான் (37), மகள் ஷகிரா பானு (35) ஆகியோர் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து அரக்கோணத்திற்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருவதற்காகடிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

    இதில் அப்துல் காதர் ஷேக் மொய்தீன் மற்றும் அவரது மனை விக்கு டிக்கெட் உறுதியானது, மனநலம் குன்றிய மகன் அபிசூர் ரஹ்மான் மற்றும் மகள் ஷகிராபானுவை அதே ரெயிலில் பொது பெட்டியில் அமர வைத்துவிட்டு, அப்துல் காதர். அவரது மனைவி முன்பதிவு பெட்டியில் வந்ததாக கூறப்படுகிறது.

    ரெயில் நேற்று முன்தினம் அதிகாலை அரக்கோணம் ரெயில் நிலையத்தை வந்தடைந்த போது ரெயிலில் இருந்து இறங்கிய தம்பதியினர் தங்களது மகன் மற்றும் மகள் இருந்து பெட்டியில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட அபிசூர் ரஹ்மான், ஷகிரா பானு ஆகியோரை போலீசார் மீட்டு அவர் களை அப்துல் காதர் ஷேக் மொய்தீனிடம் ஒப்படைத்தனர்.

    • உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டம்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குடியானூரை சேர்ந்தவர் கோபால் (வயது 57). இவர் சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் வழக்கம் போல நிறுவனத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே கோபால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கணவரின் வேலையை தனது மகனுக்கு வழங்கக்கோரி கோபாலின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது நிறுவனத்தில் பேசிய போது கோபாலின் வேலையை அவரது மகனுக்கு வழங்குவ தாக உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் தெரிவித்தவுடன் அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு இறுதிச்ச டங்கு செய்ய உடலை பெற்றுக்கொண்டு சென்றனர்.

    • தேவாலயம் முன்பு பிணமாக கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    வாலாஜா அடுத்த தென்னிந்தியாலம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 69). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு தென்னிந்தியாலம் பகுதியில் உள்ள சர்ச் முன் மணி தூங்கி யுள்ளார்.

    நேற்று காலை அங்கிருந்தவர்கள் மணியை எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. அப்போது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 மாதமாக நடக்காததால் ஏமாற்றம்
    • ஏராளமானோர் தாலுகா அலுவலகம் வந்து திரும்பி சென்றனர்

    நெமிலி:

    நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங் களில் விவசாயமே பிரதானமாக இருந்து வருகிறது.

    நெமிலி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடத்த வேண்டும். 17 துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் கடந்த 2 மாதங்க ளாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறவில்லை.

    நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீ ரென கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் ஏராளமான விவசாயிகள் தாலுகா அலுவலகம் வந்து திரும்பி சென்றனர்.

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர் கிராமத்தில் எல்லை யம்மன் கோவில் உள்ளது. மர்ம நபர்கள் இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

    பின்னர் அங்கி ருந்த உண்டியலை உடைத்துள்ளனர். உண்டியல் உடைக்கப் பட்டிருப்பதை கண்ட பொது மக்கள் அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் இருந்த சுமார் ஒரு பவுன் தாலி சங்கிலி மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக் டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×