என் மலர்
ராணிப்பேட்டை
- மினிவேன் பறிமுதல்
- ஜெயிலில் அடைப்பு
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வேட்டாங்குளம் ஊராட்சி சில்வர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் விஜய் (வயது 25).
இவர் அதே பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மினிவேனில் ஒரு யூனிட்மணல் கடத்தி சென்றார். அப்போது நெமிலி போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து மினிவேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தது
- ஏராளானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆற்காட்டில் தாலுகா அலுவலகம் எதிரே மக்கள் சந்திப்பு அரசு ஊழியர் விழிப்புணர்வு பிரச்சார ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சாலை பணியாளர் சங்கத்தின் உட்கோட்ட தலைவர் பன்னீர்செல் வம் தலைமை தாங்கினார். மாவட்டதலைவர் வெங்கடேசன். மாவட்ட செயலாளர் சிவசங்கரன், மாநில செயற்குழு உறுப் பினர் சேட்டு உள்பட பலர் முன்னிலை வகித்தனர். உட் கோட்ட செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச் செய லாளர் பெருமாள் கலந்து கொண்டு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும்.
இறந்த 300-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் குடும்பங்களில் அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும். பொங்கல் போனஸ் ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 2021 ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்கி அவர்களது குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி பேசினார். முடிவில் உட்கோட்ட பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.
- விவசாயிகள் பயனடைய அறிவுரை
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்கவும், கால விரயத்தை தவிர்க்கவும், வேலை ஆட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், வேளாண் இயந்திரமயமாக்கல் இன்றியமையாததாகிறது.
அறுவடை காலங்களில் மாவட்டத்தில் உள்ள நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களிலுள்ள நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் தெரியாததால் விவசாயிகள் இயந்திரங்களை வாடகைக்கு பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்தது.தமிழகத்தில் உள்ள விவசாயிகள் குறித்தக் காலத்தில் நெல் அறுவடை செய்ய ஏதுவாக தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்தி ரங்களின் உரிமையாளர் பெயர், விலாசம், அலைபேசி எண் போன்ற விவரங்கள் வட்டாரம் மற்றும் மாவட்ட வாரியாக உழவன் செயலியில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான 324 சக்கர வகை அறுவடை இயந்திரங்களும் 1 டிராக் வகை அறுவடை இயந்திரங்களும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அறுவடை இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அறுவடை இயந்திர உரிமையாளர்களை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்களே வாடகை தொகை நிர்ணயம் செய்து பயன் அடையலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- அசோக் குமார் மனநிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- தீயில் எரிந்து கொண்டிருந்த 3 பேர் மீதும் மணல் மற்றும் ஈர கோணிப்பையை எடுத்து வந்து தீயை அணைத்து அவர்களை மீட்டனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள பாணாவரம் அடுத்த மேலேரி பகுதியை சேர்ந்தவர் பழனி. கூலி தொழிலாளி. இவரது மனைவி யசோதா. இவர்களுக்கு அசோக்குமார் (வயது 24) என்ற மகன் இருந்தார்.
இவர் ஐடிஐ முடித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அசோக் குமார் மனநிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அசோக் குமாரின் தாயார் யசோதா மற்றும் பாட்டி வள்ளியம்மாள் (80) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அசோக் குமார் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த தாய், பாட்டி மீது ஊற்றி தீ வைத்தார்.
பின்னர் அசோக்குமார் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீயை வைத்துக் கொண்டார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
தீயில் எரிந்து கொண்டிருந்த 3 பேர் மீதும் மணல் மற்றும் ஈர கோணிப்பையை எடுத்து வந்து தீயை அணைத்து அவர்களை மீட்டனர். 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மாற்றப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை அசோக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் யசோதா, வள்ளியம்மாள் ஆகியோர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற 1-ந் தேதி முதல் தொடங்குகிறது
- ஆவணங்களுடன் முன்பதிவு செய்து கொள்ள வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல் கொள்முதல் செய்வதற்காக 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்படுகிறது.
அதன்படி தப்பூர், மேல் வீராணம், கீழ் வீராணம், பாணாவரம், சூரை, கொடைக்கல், செங்காடு, கூராம்பாடி கரிக்கந்தாங்கல், அனந்தாங்கல், திருமால்பூர், ஜாகீர் தண்டலம், ரெட்டி வலம், அகவலம், நெமிலி, பனப்பாக்கம், கீழ்களத்தூர், சயனபுரம், மகேந்திரவாடி, கீழ்வீதி, சிறுகறும்பூர், பெரும்புலிபாக்கம், வேடந்தாங்கல், சிறுவளையம், எஸ்.கொத்தூர், அத்திப்பட்டு, துரைபெரும்பாக்கம், அருந்ததிபாளையம், செய்யூர், எஸ்.என்.கண்டிகை ஆகிய 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளன.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா, வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் அசல் அடங்கல் ஆவணங்களுடன் சென்று முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள்.
நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவு கள் மேற்கொள்வார்கள். பதிவு உறுதி செய்ததும் சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு செல்ல வேண்டும்.
நெல் விற்பனை செய்ய வரும் போது நேரடி கொள்முதல் மையத்தில் பதிவுகள் மேற்கொண்ட ஆவணங்களுடன் சென்று இதற்கான நியமனம் செய்யப்பட்டுள்ள நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சாலையை கடக்க முயன்ற பாது பரிதாபம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் விவசாயி. இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது64).
இவர் இன்று காலை காவேரிப்பாக்கத்தில் இருந்து வாலாஜாவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்ல சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்றார்.
அப்போது ஆற்காடு அடுத்த திமிரி பகுதியை சேர்ந்த தனுஷ் (20) என்பவர் ஓட்டி வந்த பைக் உமா மகேஸ்வரி மீது ேமாதியது. இதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயமடைந்தார்.அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உமா மகேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வங்கி ஊழியர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
- பின்பற்றாத வங்கிகள் மீது நடவடிக்கை
அரக்கோணம்:
அரக்கோணத்தில் இயங்கி வரும் ஏடிஎம் மையங்களில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் டவுன் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கோபால் தலை மையில் நடைபெற்றது.
அப்போது 15 நாட்களுக்குள் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அது செயல்பாட்டில் இருக்க வேண்டும், ஒவ்வொரு ஏடிஎம் மையங்களில் கண்டிப்பாக காவலாளிகள் அமர்த்தப்பட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை போலீசார் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை 15 நாட்களுக்குள் அமல் படுத்தப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
இதனால் ஏடிஎம் மையங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதோடு வங்கிகளில் ஏற்படும் கொள்ளை சம்பவங்க ளிலும் தடுக்க இது பெரும் உதவியாக இருக்கும் எனவும் கொள்ளை நடைபெறும் சம்பவங்கள் எளிதில் போலீசார் பிடிப்பதற்கும் இது உதவியாக இருக்கும்.
வங்கிகள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ரூ.30.20 லட்சத்தில் அமைகிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ஒன்றியம் தணிகை போளூர் ஊராட்சி அல்லியப்பன்தாங்கல் கிராமத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு மற்றும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்ட கட்டிடத்திற்கான பூமி பூஜை ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜீவா கிருஷ்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தனபால், தீனு பரந்தாமன், இளவரசன், ஆசிரியர் கீதாஞ்சலி, ஒப்பந்ததாரர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
- கழிவுநீர் ஏரியில் கலப்பதாக புகார்
- போலீசார் பேச்சுவார்த்தை
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த மகாணிப்பட்டு ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான லுங்கி தயாரிக்கும் கம்பெனி கடந்த 8-ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.
மேலும் இந்த கம்பெனியின் பின் பகுதியில் காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து கங்காதரநல்லூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது. இந்த ஏரியானது நிரம்பி பிள்ளையார்குப்பம், கங்காதரநல்லூர், புதூர், உள்ளிட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்நிலையில் இங்குள்ள கங்காதரநல்லூர் ஏரியில் நேற்று மீன்கள் செத்து மிதந்தன.
இதனைக் கண்ட பொதுமக்கள் இங்குள்ள தனியார் கம்பெனியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேற்றப்படும் கழிவுநீர் ஏரியில் கலப்பதாகவும் அதனால் ஏரியின் தண்ணீர் நிறம் மாறி காணப்படுவதாகவும் அதன் காரணத்தினால் தற்போது மீன்கள் இறந்து கிடப்பதால் பொது மக்கள் மீன்களை எடுத்து வந்து தனியார் கம்பெனியின் நுழைவு வாயிலில் கொட்டி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதனையறிந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பிரதம மந்திரி வீடு திட்டத்தில் வழங்க ஏற்பாடு
- தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்
நெமிலி:
நெமிலியை அடுத்த பனப்பாக்கம் அருகே துறையூர் கிராமத்தில் வசிக்கும் வீடற்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை நேற்றுராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது துறையூர் கிராமத்தை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு வழங்கவுள்ள இடத்தை ஆய்வு செய்து விரைந்து பணிகளை முடித்து இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அரக்கோணம் சப்- கலெக்டர் பாத்திமா, நெமிலி தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- அனைவருக்கும் பயிற்சி கையேடு வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள நகராட்சி மற்றும் வேலூர் மாநகராட்சியை சேர்ந்த 9 அனைத்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்களுக்கான பயிற்சி ராணிப்பேட்டை அன்-நூர் மஹாலில் நடந்தது. வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் - பெ.குபேந்திரன் தலைமை தாங்கினார்.
வேலூர் மண்டல செயற் பொறியாளர் பா.ரூபன் சுரேஷ் பொன்னையா, து ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ்,சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் அலுவலக ஆலோசகர்கள் சந்திரசேகர், எலிசபெத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீடித்த தொடர் வளர்ச்சி அமைப்பின் பொறுப்பாளர்கள் டாக்டர்கள் அருண் செந்தில், முரளி நாகராஜ் மற்றும் அன் பரசன் ஆகியோர் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பயிற்சி அளித்தனர்.
கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பயிற்சி கையேடு, மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் துப்புரவு அலுவலர் செல்வராஜ் நன்றி கூறினார்.
- மாத கட்டணம் சுமார் ரூ.300-லிருந்து 500 ரூபாய் வரை உயர உள்ளதாக குற்றச்சாட்டு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடையில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் கேபிள் டிவி கட்டணம் சேனல்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனவேல் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முழுவதும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் செயல்பட்டு வருகின்றோம்.சுமார் ஒரு கோடி கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
தற்போது அரசின் கீழ் செயல்படும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டண சேனல்களின் விலையை உயர்த்திக்கொள்ள சேனல் முதலாளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.ஏற்கனவே பல்வேறு விலை உயர்வின் காரணமாக மக்கள் துயரத்தில் இருக்கும் பொழுது உழைக்கின்ற மக்கள் பொழுது போக்கு சாதனமாக பயன்படுத்துகின்ற கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்துவது என்பது நியாயமற்ற செயலாகும். வருகின்ற மார்ச் 1 முதல் கேபிள் டிவி மாத கட்டணம் சுமார் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.எனவே விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த கோரி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்பாட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காவிலுள்ள கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.






