என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம்"
- வாலாஜா தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஏற்பாடு
- 5 வாரங்கள் நடக்கிறது
வாலாஜா:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நாளை வெள்ளிக்கிழமை மாசி -12 பஞ்சமி திதி, அஸ்வினி நட்சத்திரம் 03.03.2023 வெள்ளிக்கிழமை மாசி – 19 ஏகாதசி திதி, புனர்பூசம் நட்சத்திரம் 10.03.2023 வெள்ளிக்கிழமை மாசி – 26 சதுர்த்தி திதி, சித்திரை நட்சத்திரம் 17.03.2023 வெள்ளிக்கிழமை பங்குனி – 3 ஏகாதசி திதி, உத்திராடம் நட்சத்திரம் 01.04.2023 சனிக்கிழமை பங்குனி - 18 ஏகாதசி திதி, ஆயில்யம் நட்சத்திரம் ஆகிய கிழமைகளில் தினமும் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாணவ, மாணவிகளின் நினைவாற்றல் அதிகரித்து உரையாடல் மற்றும் அறிவாற்றல் திறன் மேம்படவும், தேர்வுகளில் வெற்றி பெற்று கல்விப்பயணம் தொடரவும் ஏலக்காய் கொண்டு கல்வி மணம் கமழும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், வித்யா கணபதி ஹோமம், வித்யா லக்ஷ்மி ஹோமங்கள் நடைபெறவுள்ளது.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






