என் மலர்
ராணிப்பேட்டை
- முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
- கலெக்டர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ராணிப்பேட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் பொது வசதி மையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்ைத காணொலி காட்சி மூலம் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து பொது வசதி மையக் கட்டிடத்தினை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இந்த வளாகத்தில் சேமிப்பு கிடங்கு, கேண்டீன், பொது அலுவலகம், கூட்டரங்கம், கிளை மேலாளர் அமையப்பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன்,
கிளை மேலாளர் வெண்மணி செல்வம், உதவி செயற்பொறியாளர் மணி, சிப்காட் திட்ட அலுவலர் மகேஸ்வரி, தோல் பொது சுத்தகரிப்பு நிலைய இயக்குனர் ஜெயச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை, பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரசார் அரக்கோணத்தில் உள்ள பழைய பஸ் நிலையப் பகுதியில் நரேஷ், ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நிர்வாகிகள் மூர்த்தி, எட்வின் உட்பட காங்கிரஸ் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
- 270 பேருக்கு வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் புதிய பொறுப்பாளர்களுக்கு நியமனச் சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் சி.ஜி. ராமசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைதலைவர் தீனதயாளன், மாநில மாணவர் சங்க செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளரும் கைனூர் ஊராட்சி மன்ற தலைவ ருமான உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்
க.சரவணன்,மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் கலந்து கொண்டு மாவட்ட,நகர,ஒன்றிய புதிய பொறுப்பாளர்கள் 270 பேருக்கு நியமனச் சான்று வழங்கினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் கோ.ஏழுமலை, அரக்கோணம் தொகுதி ஒன்றிய செயலாளர்கள் ஜெயசங்கர், கிருஷ்ணன், அரிதாஸ், மணி, முத்து, பாலாஜி, தியாகு, மணிகண்டன், பரமேஸ்வரன், பெருமாள், ஏழுமலை, ஜோதிஸ்வரன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அரக்கோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடேசன் நன்றி கூறினார்.
- வேலை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் போர்டிங் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). இவர் சோளிங்கர் பஜாரில் எண்ணெய் செக்கில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஜெயபாரதி என்ற மகளும், மோகித் என்ற மகனும் உள்ளனர்.
ஜெயபாரதி அங்குள்ள அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். மோகித் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல சுரேஷ் இன்று காலை பஜாரில் உள்ள எண்ணெய் செக்கில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக செக்கில் கை சிக்கியது அவர் சுதாரிப்பதற்குள் அவரை முழுவதுமாக செக் இழுத்துக் கொண்டது. இதில் அவரது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் சுரேஷ் உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர்
- ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது
அரக்கோணம்:
மும்பையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 2.30 மணியளவில் அரக் கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
அப்போது ரெயில் என்ஜினுக்கு அடுத்து உள்ள பொது பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் பயணிகள் அல றியடித்து வெளியே ஓடி வந்தனர்.
அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் புகை வந்த பெட்டியில் சோதனை செய்தனர்.
அப்போது ரெயில் பெட்டியில் தீ விபத்தின் போது பயன்படுத்தப்படும் தீயணைப்பான் கருவி மீது பயணியின் கை தவறுதலாக பட்டதால் அதிலிருந்து புகை வெளியானது தெரியவந்தது. ரெயிலில் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை என தெரிந்ததையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
இதனால் ரெயில் சுமார் 5 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ராகுல்காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர் தலைமை தாங்கி னார்.மாநில பொதுச்செயலாளர் டி.செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாநில அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவர் விநாயகமூர்த்தி, மாநில செயலாளர்கள் ஜெயபிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் பிரேமா, கல்பனா இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் பஞ்சாட்சரம் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், நகர தலைவர்கள் உத்த மன் (ராணிப்பேட்டை), பியாரேஜான் (ஆற்காடு), மாவட்ட நிர்வாகி பிஞ்சி மோகன், வாலாஜா ஒன்றிய தலைவர் வி.சி.மோட்டூர் கணேசன் உட்பட காங்கிரஸ் நிரவாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பன்னியூர் கூட்டு சாலை பகுதியில் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் காந்தி, அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு 110 மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய், முன்னோடி 25 பேருக்கு ஐந்தாயிரம், 5 ஏழைப் பெண்களுக்கு தையல் எந்திரம், 5 சலவை தொழிலாளர்களுக்கு சலவை பெட்டி, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி பேசினார்.
இதில் ஜெகத்ரட்சகன் எம்.பி. மாவட்ட துணைச் செயலாளர்கள் சிவானந்தம், துரை மஸ்தான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நெல் விதைத்தபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிபேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 58) விவசாயி.இவர் விவசாய நிலங்களில் விதை நெல்லை விதைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
ஞானராஜ் நேற்று மதியம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி மணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தனது மகனுடன் விதை நெல்லை விதைத்து கொண்டிருந்தார்.
அப்போது, நிலத்தின் ஒரு பகுதியில் இருந்து மின்மோட்டாருக்காக மின்சாரம் கொண்டு செல்ல அமைக்கப்பட்டு இருந்த சேதமடைந்த மின்ஒயரில் எதிர்பாராதவிதமாக ஞானராஜ் தவறி விழுந்துள்ளார்.
இதனால் மின்சாரம் பாய்ந்து ஞானராஜ் கீழே விழுந்தார். அவரது மகன் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஞானராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டார்
- சிறப்பான சேவை அளிக்க அறிவுரை
ராணிப்பேட்டை:
வாலாஜா தலைமை மருத்துவமனையில் 24 மணிநேர பிரசவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தை கள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மன நல பிரிவு, சித்தா, நேச்சுரோபதி, பல் மருத்துவம், தோல் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அரசு மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான பேர் புறநோயாளிகள் பிரிவிலும், உள்நோயாளிகள் பிரிவிலும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் வளர்மதி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டு கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மக்களுக்கு சிறப்பான சேவை அளிக்க வேண்டும் என்று டாக்டரிடம் தெரிவித்தார்.
- அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
- கருணாநிதி நூற்றாண்டு விழா ஆலோசனை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு துவக்க விழா குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்தும் மற்றும் தி.மு.க. ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், சட்டத்திட்ட திருத்தத்துறை இணை செயலாளர் ஞானசேகரன், தலைமை கழக வழக்கறிஞர் கணேசன், செய்தி தொடர்புக்குழு துணை செயலாளர் சையத் ஹபீல், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், குமுதா, துரைமஸ்தான், மாவட்ட பொருளாளர் சாரதி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய செயலாளர்கள் சேஷா வெங்கட், மாணவர் அணி அமைப்பாளர் வினோத் உள்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தொடர் திருட்டில் ஈடுபட்டனர்
- ஜெயிலில் அடைப்பு
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசி என் கிறசசிகுமார் (வயது 46), திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சின்னநோம்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற மாடு ரமேஷ் (51) ஆகிய இருவரையும் திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேலும் இவர்களின் குற்ற ச்செயல்களை கட்டுப்ப டுத்தும் பொருட்டு, ராணிப் பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தர விட்டார்.
- 2100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி அமைச்சர் காந்தி பேச்சு
- ராணிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம் நடந்தது
ராணிபேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட மாணவரணி மற்றும் நகர திமுக இணைந்து ராணிப்பேட்டை முத்துக்கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா முன்னிட்டு ரூ.10லட்சம் மதிப்பீட்டில் 2,100 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூங்காவனம் வரவேற்றார்.இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகள் வழங்கி பேசினார்கள்.
கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் நம்பர்.1 முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தியாவில் 7 மாநிலத்திற்கு தான் மித்ரா பார்க் திட்டம் வழங்கியுள்ளனர்.அதில் ஒன்று தமிழ்நாடு. அதுவும் அந்த 7மாநிலத்தில் முதலில் தமிழ்நாட்டில் தான் அடிக்கல் நாட்ட போகிறார்கள்.
மத்திய மந்திரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் பி.எம். மித்ரா மெகா பார்க் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு பிரதமரை அழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் பிரதமரை அழைப்போம் என தெரிவித்தார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் இது தேர்தல் வாக்குறுதி இல்லை. உயிர் காக்கும் திட்டம் ஒரு விபத்து ஏற்பட்டால் அரசு மருத்துவ மனைக்கு போவோம் அவங்க உடனே சிகிச்சை பார்க்கமாட்டார்கள். போலீஸ் ரிப்போர்ட் வர வரைக்கும் காத்திருப்பாங்க இப்போ விபத்து ஏற்பட்டால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி 48 மணி நேரம் ஏற்படும் மருத்துவ செலவு ரூ.1லட்சம் வரை அரசு ஏற்றுக்கொள்கிறது. இதுமட்டுமில்லாமல் விபத்து ஏற்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.5000 வழங்குறாங்க.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு திட்டம்.அதிகமாக வேலைக்கு செல்வபவர்கள் பெண்கள் தான். அவர்களின் துயரம் போக்கவே அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கினார். குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.முதல்வரை உலகமே பாராட்டுகிறது. கைத்தறி துறையை ஒரு முன்மாதிரி துறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றிவிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர்.வினோத்காந்தி, ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் நகர துணை செயலாளர் துரைகுமார் நன்றி கூறினார்.






