என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது வசதி மையக் கட்டிடம்"

    • முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
    • கலெக்டர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ராணிப்பேட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் பொது வசதி மையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    புதிய கட்டிடத்ைத காணொலி காட்சி மூலம் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து பொது வசதி மையக் கட்டிடத்தினை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    இந்த வளாகத்தில் சேமிப்பு கிடங்கு, கேண்டீன், பொது அலுவலகம், கூட்டரங்கம், கிளை மேலாளர் அமையப்பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன்,

    கிளை மேலாளர் வெண்மணி செல்வம், உதவி செயற்பொறியாளர் மணி, சிப்காட் திட்ட அலுவலர் மகேஸ்வரி, தோல் பொது சுத்தகரிப்பு நிலைய இயக்குனர் ஜெயச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×