என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smoke in the train compartment"

    • பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர்
    • ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது

    அரக்கோணம்:

    மும்பையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 2.30 மணியளவில் அரக் கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

    அப்போது ரெயில் என்ஜினுக்கு அடுத்து உள்ள பொது பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் பயணிகள் அல றியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் புகை வந்த பெட்டியில் சோதனை செய்தனர்.

    அப்போது ரெயில் பெட்டியில் தீ விபத்தின் போது பயன்படுத்தப்படும் தீயணைப்பான் கருவி மீது பயணியின் கை தவறுதலாக பட்டதால் அதிலிருந்து புகை வெளியானது தெரியவந்தது. ரெயிலில் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை என தெரிந்ததையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

    இதனால் ரெயில் சுமார் 5 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×