என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • கிராம பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை விரைவில் உருவாகும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
    • முதுகுளத்தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மேல்நிலைப்பள்ளி, நீராவி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமசாமி பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    அமைச்சர் ராஜ கன்ணப்பன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிராமப்பகுதிகளி குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை விரைவில் உருவாகும். கிராமங்கள் தோறும் பைப்லைன் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும். அதற்கான பணிகளை முதலமைச்சர் முடுக்கிவிட்டுள்ளார். தமிழுக்கு களங்கம் ஏற்படுத்தினால் கடுமையாக திராவிட இயக்கம் எதிர்க்கும்.

    திராவிட தலைவர்களில் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு பிறகு மு.க.ஸ்டாலின் மட்டுமே உள்ளார். தமிழ்மக்களில் 88 சதவீதம் பேர் திராவிட இயக்கத்தில் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. மந்திரி, எம்.எல்.ஏ. பதவி வரும்-போகும். எந்த பதவியில் இருந்தாலும் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

    முதுகுளத்தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கமுதியில் மில் தொடங்கப்பட உள்ளது. நான் படிக்கும் காலத்தில் கிராமங்களுக்கு பஸ் வராது. 8 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்கு செல்வோம். இப்போது அப்படி இல்லை. கிராமங்களுக்கே பஸ் வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், பெருநாழி போஸ், முதுகுளத்தூர் பூபதி மணி, கடலாடி ஆறுமுகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான மாடுகள் திரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான மாடுகள் திரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி பலர் விவசாயப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆடு, மாடுகள் வயல் வெளிகளில் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் கிழக்கு கடற்கரை சாலையிலேயே இரவு, பகலாக திரிகின்றன. பெரும்பாலும் மாடுகளே அதிகளவில் கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்துக்கொள்கிறது.

    நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளும், குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் இந்த மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிறார்கள். இது குறித்து தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாடுகளின் உரிமையாளர்கள் நாளை (10-ந் தேதி)-க்குள் தங்களது மாடுகளை பிடித்து கட்ட வேண்டும். தவறினால் 11-ந் தேதி முதல் சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    • 7 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விசைப்படகுகள் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.
    • ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கிளிண்டன், வினிஸ்டன், அயான், மரியான், தானி, ஆனஸ்ட், பேதுகை ஆகிய 7 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விசைப்படகுகள் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.

    ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 7 மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி இனிமேல் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அவர்களை விடுதலை செய்ததோடு, விசைப்படகு உரிமையாளர் மைக்கேல்ராஜ் உரிய ஆவணங்களுடன் ஜனவரி மாதம் 9-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஒரு வாரத்திற்குள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பரமக்குடி அருகே உள்ள நகரகுடி கிராமத்தில் கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம் நடந்தது.
    • மரக்கன்று நடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே உள்ள நகரகுடி கிராமத்தில் கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நடந்தது. தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கீழமுஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கத்அலி கான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் வரவேற்றார். ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    7 நாட்கள் நடந்த முகாமில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களை சுத்தம் செய்தல், சாலைகளை தூய்மைப்படுத்துதல், டெங்கு விழிப்புணர்வு பேரணி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு, யோகாசன பயிற்சி, மரக்கன்று நடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. முகாமிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் இந்திரஜித் தலைமையில் ஆசிரியர் குழுவினர் செய்தனர். உதவித்தலைமை ஆசிரியர் புரோஸ்கான் நன்றி கூறினார்.

    • சந்திர கிரகணத்தையொட்டிராமேசுவரம் கோவிலில் இன்று பகல் நடை அடைக்கப்படும்.
    • இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    ராமேசுவரம்

    சந்திர கிரகணத்தை ஒட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது.

    ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் வழக்கமான கால பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதனை யடுத்து வழக்கம்போல் பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணத்தை யொட்டி கோவில் நடை மாலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு அர்த்த ஜாம பூஜைகள் நடந்த பிறகு நடை அடைக்கப்படும்.

    சந்திர கிரகணத்தையொட்டி சுவாமி புறப்பாடாகி அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரிக்கு செல்லும். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 4 ரத வீதி வழியாக வலம் வந்து கோவிலுக்கு 7 மணிக்கு சென்றடையும். கோவிலில் சந்திர கிரகண பூஜைகள் நடைபெற்ற பின் பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட குழந்தைகள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
    • உணவு சாப்பிட்ட 7 குழந்தைகள் உள்பட 9 பேரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சி பனையங்கால் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு நேற்று குழந்தைகள் தர்ஷன் (வயது 4), காவ்யா (4), ரெனீஸ் வருண் (3), பெத்ரு பாண்டியன் (2), ஜான்சன் (2), தன்சிகா (2), மிகாயான் (2) ஆகியோர் தக்காளி சாதம் சாப்பிட்டுள்ளனர். மேலும் அங்கு சென்றிருந்த பெற்றோர் தேவிகா (30), ஜென்சியா (27) ஆகியோரும் உணவை ருசித்துள்ளனர்.

    அப்போது உணவில் பல்லி இறந்து கிடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து குழந்தைகள் அதனை சாப்பிட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. உணவு சாப்பிட்ட 7 குழந்தைகள் உள்பட 9 பேரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தலைமை டாக்டர் ஜவாஹிர் உசேன் தலைமையில் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பனையங்கால் அங்க ன்வாடி மையத்தில் 10 குழந்தைகள் படித்து வருகின்றனர். இன்று 7 குழந்தைகள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் வகையில் 4 குழந்தைகளுக்கு உணவு பரிமாறி 5-வது குழந்தைக்கு உணவு பரிமாற செல்லும் போது உணவில் பல்லி இருப்பது கண்டறியப்பட்டு உணவு பரிமாறுவது நிறுத்தப்பட்டது.

    உணவு சாப்பிட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதுடன் அனைத்து குழந்தைகளும் நலமுடன் உள்ளார்கள். யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ஜவாஹீர் உசேன் கூறுகையில், அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 குழந்தைகள் உட்பட 9 பேர் நலமாக உள்ளனர் என்றார்.

    • ராமேசுவரம் மீனவர்கள் 21 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் ராமேசுவரம் அனைத்து மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க சென்றபோது 2 விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்த 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    ஏற்கனவே 6 ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து இன்று ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மீனவர் சங்கங்கள் அறிவித்திருந்தன. அதன்படி இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 21 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராமேசுவரம் அனைத்து மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர்களையும், கடந்த 5-ந்தேதி சிறைபிடிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உள்பட 15 மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 21 மீனவர்களையும் விடுவிக்க கோரியும், இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி மாதம் முதல் சிறை பிடித்து வைத்துள்ள 29 படகுகளையும் விடுவிக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இது தொடர்பாக மீனவர்கள் கூறும்போது, எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மேலும் பல போராட்டங்கள் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • அதிகாரிகள், கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவல கத்தில் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    நகராட்சி தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சுரேந்திரன் வரவேற்றார். இதில் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் பேசியதாவது:-

    வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் செல்லும் பாதைகளை சரி செய்து தேங்காமல் செல்லும் வகையில் உடனுக்குடன் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மழை, வெள்ள நீரை அகற்றுவதுடன் கொசுக்கள் அதிகரிப்பதை தடுத்து கவனம் செலுத்த வேண்டும். நகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்ப ளித்து செயல்பட வேண்டும்.

    தண்ணீர் செல்ல முடியாத பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.ஆபத்தான மின்கம்பங்கள் குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமாக செயலாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நகராட்சி கவுன்சி லர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தொண்டி அருகே கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 2-ம் நிகழ்ச்சியாக சந்தாதாரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் 99-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் நடந்தது. மஸ்தான் சாகிபு தர்காவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஊர்வலமாக கொடி கொண்டு செல்லப்பட்டு ஏற்றப்பட்டது.

    இதில் திரளாேனார் கலந்து கொண்டனர். 2-ம் நிகழ்ச்சியாக சந்தாதாரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. குர்ஆன் ஓதி மகான் பெயரால் தப்ரூக் என்னும் உணவு வழங்கப்படும். மகான் பெயரால் மவுலிது ஓதி கந்தூரி விழா நிறைவுபெறும்.

    • ராமநாதபுரத்தில் மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டி நடந்தது.
    • 17-வது செஸ் போட்டியை முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடத்தியது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் ராமநாதபுரம் ரோட்டரி சங்க கோரல் சிட்டி இணைந்து மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியாக மாவட்ட அளவிலான 17-வது செஸ் போட்டியை முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடத்தியது.

    மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தேவி உலகராஜ், முன்னிலை வகித்தார். செயலாளர்- உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், ரோட்டரி சங்க கோரல் சிட்டி உதவி கவர்னர் செந்தில்குமார், தலைவர் சோமசுந்தரம், செயலாளர் ராஜேஷ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    6 பிரிவுகளாக 5 சுற்றுகள் நடைபெற்ற இந்த போட்டிகளில் 58 பள்ளிகளில் இருந்து 415 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு சிறப்பு போட்டி நடந்தது. 5 பிரிவுகளிலும் முதல் 5 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மாவட்ட செஸ் அசோசியேசன் செயலாளர் ரமேஷ், பொருளாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

    • பரமக்குடியில் உயர்குடி பெண் நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • இந்த நடுகல் சிற்பம் 2½ அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் வழிமறிச்சான் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், மீனாட்சிசுந்தரம் மற்றும் வழிமறிச்சானை சேர்ந்த சிவா, சக்தி, முருகன் ஆகியோர் பரமக்குடி அருகே உள்ள வழிமறிச்சான் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் உயர் குடியைச் சேர்ந்த மூதாட்டிக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பதை கண்டறிந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    பொதுவாக நடுகல் என்பது முற்காலங்களில் வீர, தீர செயல்களான போர்களில் ஈடுபடும் வீரர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கு எதிரான சண்டைகளில் வெற்றி பெறுபவர்களுக்கோ அல்லது சண்டையில் இறப்பவர்களுக்கோ அல்லது சமூகத்தில் பெரிதும் போற்றத்தக்க நபர்களுக்கோ நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்தது.

    தற்போது கண்டறிந்த சிற்பமும் அந்த வகையைச் சேர்ந்ததாகும். இந்த நடுகல் சிற்பம் 2½ அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் 2 கைகளிலும் காப்பும், கை வளையல்களும் அணிந்தபடியும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், ஆபரணங்களும் நீண்ட காதும் தெளிவாக செதுக்க ப்பட்டுள்ளன.

    இடையில் இடைக்கச்சை அணிந்த படியும், இரு கால்களிலும் கழலைகள் அணிந்தபடியும் சிற்பம் நேர்த்தியாக வடிக்க ப்பட்டுள்ளது. இடது கையில் ஊன்றுகோல் தடியை பிடித்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. நெற்றியில் திலகம் செதுக்கியிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

    இந்த புடைப்பு சிற்பம் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டியின் சிற்பமா கும். இந்த சிற்பத்தின் வடிவ மைப்பும், அணிந்துள்ள ஆபரணங்க ளையும் வைத்து பார்க்கும் போது உயர் குடியைச் சேர்ந்த பெண்ணாகவோ அல்லது சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க பெண்மணியாகவோ இருந்திருக்கலாம். இந்த நடுகல்லை பாட்டி கிழவி அம்மன் என்ற பெயரில் அந்தப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சாலையோரங்களில் அதிகரிக்கும் பிளக்ஸ் போர்டுகளால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் தினமும் ஏர்வாடி, சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேசுவரம் ஆகிய ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது.

    கீழக்கரை முக்கு ரோடு திருப்பத்தில் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அனுமதியின்றி பேனர்கள் வைக்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் அறிவித்த நிலையில் கீழக்கரையில் பிளக்ஸ் போர்டு ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

    சென்னையில் பிளக்ஸ் பேனர் விழுந்து பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனையும் பொருட்படுத்தாமல் பலரும் பிளக்ஸ் பேனர்களை வைத்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கா மல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

    விதிமுறை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×