என் மலர்
புதுக்கோட்டை
- அறந்தாங்கியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் பங்கேற்றன.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சோதனைச்சாவடி அருகே உள்ள முனீஸ்வரர் கோவிலில் கிடாவெட்டு பூஜையை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. 29-வது ஆண்டாக நடைபெறும் இப்பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் பங்கேற்றன. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 21 ஜோடி மாடுகளும், சிறிய குதிரை பிரிவில் 9 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டன.
பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ஒன்றரை லட்சம் ரொக்கப்பணம், கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு வீதி பொதுமக்கள், இளைஞர்கள்செய்திருந்தனர்.
- புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு துவக்கவிழா நடைபெற்றது
- புதியதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களும் ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திருக்கோகர்ணம்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் நாள் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை தாங்கினார். புதியதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களும் ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.
முதல்நாள் வகுப்பிற்கு வந்துள்ள மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களை பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலி தேவி தங்கம்மூர்த்தி, மேலாண்மை இயக்குனர் நிவேதிதா மூர்த்தி, பள்ளியின் சி.இ.ஓ. காவியா மூர்த்தி மற்றும் பேராசிரியர் அபிராமி கருப்பையா ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக ஆசிரியர் மனசுதிட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிகரம் சதீஷ்குமார் கலந்து கொண்டார்.
விழாவில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி மற்றும் மேல்நிலைவகுப்பு ஆசிரியர்கள் கமல்ராஜ், துர்காதேவி, ஜெயசுதா, தனம்பாலமுருகன், பால்ராஜ், சின்னையா, சத்தியராஜ், ஆறுமுகம், மேலாளர் ராஜா மற்றும் திரளான ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். முன்னதாக ஆசிரியர் கனியன் செல்வராஜ் வரவேற்றார். விழாவினை ஆசிரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார். முடிவில் அபிராம சுந்தரி நன்றி கூறினார்.
- திருமயம் அருகே மது அடைக்கலம் காத்த அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
புதுக்கோட்டை:
திருமயம் அருகே விராச்சிலையில் மது அடைக்கலம் காத்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து நேற்று அம்மனுக்கு பொங்கல் வைத்து, கிடாவெட்டி பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார்.
பின்னர் தப்பாட்டம், குதிரை ஆட்டம், செண்டை மேளம் முழங்க வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்களின் கூட்டத்தில் ஆடி அசைந்து வந்தது. இதையடுத்து தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் ஆங்காங்கே நின்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதையடுத்து கோவில் நிலையை தேர் வந்தடைந்ததையடுத்து பக்தர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
- மார்த்தாண்டபுரம் ஆரோக்கியா சிறுமியர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
- சிறுமியர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சி, மார்த்தாண்டபுரத்தில் செயல்பட்டுவரும் ஆரோக்கியா சிறுமியர் இல்லத்தில், கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், மாணவியர்களின் எண்ணிக்கைகள், அவர்கள் பயின்றுவரும் கல்வி நிலைகள், நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவியர்கள், அவர்களின் படிப்பிற்காக இல்லத்தில் வழங்கப்படும் வசதிகள், இல்லங்களில் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், அவை சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு அட்டவணைகளையும் பார்வையிட்டு, அதன்படி தரமான முறையில் உணவு சமைக்கப்படுகிறதா என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாணவியர்கள் தங்கும் அறை, உணவுக் கூடம், சமையலறை, கழிவறை உள்ளிட்டவைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றனவா, சிறுமியர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் கல்வி ஒன்றே உங்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதால், மாணவியர்கள் அனைவரும் தங்களது கல்வியில் முழு ஈடுபாட்டுடன் படித்து சமுதாயத்திற்கு நற்பெயரை ஈட்டித்தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- அதிக சேதம் உண்டாக்கும் தென்னையை தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது
- புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,584 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,584 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்னை மரங்களை தாக்கும் நோய்களில் தஞ்சாவூர் வாடர் நோய் அதிக சேதம் விளைவிக்கக் கூடியது. இது கடற்கரையை ஒட்டிய மணற்பாங்கான இடங்கள், மானாவாரி தோப்புகள், பராமரிப்பு இல்லாத தோப்புகள் ஆகிய இடங்களிலும் மற்றும் கோடைகாலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படும். எனவே விவசாயிகள் தென்னையினைத் தாக்கும் வாடல் நோயினைக் கண்டறிந்து கட்டுப்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நோய் தாக்கி இறந்த மரங்களையும், நோய் முற்றிய நிலையில் உள்ள மற்ற மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மரத்தைச் சுற்றி வட்டப் பாத்திகள் அமைத்து தனித்தனியே நீர் பாய்ச்ச வேண்டும். கோடையில் பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு சதவீதம் போர்டோ கலவையை 40 லிட்டர் என்ற அளவில் மரத்தைச் சுற்றி 2 மீட்டர் வட்டப்பாத்தியில் மண் நன்கு நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்ற வேண்டும். ஹெக்சாகோனசோல் இரண்டு மிலி மருந்தை 100 மிலி தண்ணீரில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை வேர் வழியாக உட்செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- அறந்தாங்கியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
- நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
அறந்தாங்கி,
தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அறந்தாங்கி மற்றும் ஜெயங்கொண்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறந்தாங்கியில் சாலையோரத்தில் 2500 மரக்கன்றுகள் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில், 2-ம் கட்டமாக விக்னேஷ்வரபுரம், ஆவுடையார்கோவில் ஆகிய பகுதிகளில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் தெற்கு நகர தலைவர் வீராச்சாமி, கூடலூர் முத்து, வட்டார தலைவர் முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் அசாருதீன், கிருபாகரன், ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் மோகன், சுந்தரராஜ், உதவிப் பொறியாளர்கள் சுபாஷினி, அருண்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- லாரியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யபட்டார்
- போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி- வாளரமாணிக்கம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியில் 3,948 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தப்பியோடிய டிரைவர் மீது புதுக்கோட்டை தனி வட்டாட்சியர் (பறக்கும் படை) கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று கல்லூர் நால்ரோடு அருகே நின்று கொண்டிருந்த லாரி டிரைவர் சிவகங்கை மாவட்டம் கொத்தரியை சேர்ந்த சிவலிங்கம் மகன் அருண்பிரசாத் (வயது 32 ) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.
- டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் குழந்தைத்தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது
- இதில் மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் துறை சார்பாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் துறையின் துணை ஆய்வாளர்கள் வி.கே.நடராஜன் மற்றும் பி.குணசீலன் முன்னிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதில் குழந்தைத் தொழிலாளர் எவரையும் பணியில் அமர்த்த மாட்டேன், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிட பாடுபடுவேன் என உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றுவோம், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பதாகையில் கையெழுத்திடப்பட்டது. இதில் மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் செய்திருந்தார்.
- திருவரங்குளம், பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியாா் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், பாரி நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லாத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிளக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை இயக்குதலும், காத்தலும் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொிவித்துள்ளார். கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கொப்பனாப்பட்டி, பொன்னமராவதி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, பிடாரம்பட்டி, தொட்டியம்பட்டி, மைலாப்பூர், அஞ்சுபுளிப்பட்டி, வலையப்பட்டி, வேகுப்பட்டி, செம்பூதி, கொன்னைப்பட்டி, சுந்தரசோழபுரம், மேக்கினிப்பட்டி, செவலூர், கோவனூர், வாழைக்குறிச்சி, நெய்வேலி, கூடலூர், மேலப்பனையூர், குழிபிறை, பணையப்பட்டி, ஆத்தூர், ராராபுரம், ஆலவயல், செம்மலாப்பட்டி, கண்டியாநத்தம், தூத்தூர், சொக்கநாதபட்டி, நகரப்பட்டி, அம்மாபட்டி, ஈச்சம்பட்டி, சங்கம்பட்டி, கல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
- ஆலங்குடி பகுதியில் மழை பெய்தது
- இந்த மழையால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆலங்குடி,
ஆலங்குடி பகுதியில் கலந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பருவமழையின் தொடக்கமாக நேற்று மாலை ஆலங்குடி பகுதியில் திடீரென கருமேகம் சூழ்ந்து மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கிராமப்புறங்களில் தண்ணீர் இன்றி வாடிய பயிர்களுக்கு இந்த மழை பெரிதும் உதவியாக இருந்தது. கடும் வெயிலால் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென பெய்த இந்த மழையால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- சுற்றுவட்ட சாலையை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்தனர்
- அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத்திய அரசின் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமான அறந்தாங்கியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புறவழிச்சாலை (ரிங் ரோட்) பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அறந்தாங்கி நகர் பகுதியை உள்ளடக்கி அதன் புறபகுதியான பாக்குடி, வைரிவயல், ரெத்தினக்கோட்டை, கூத்தாடிவயல் போன்ற கிராமங்களை தொட்டும், வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மீமிசல், கட்டுமாவட, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய நெடுஞ்சாலைகளை இணைத்தும் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.
11 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட புறவழிச்சாலையில் 7 கிலோ மீட்டர் வரை நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூத்தாடிவயல் பகுதியில் விளைநிலம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புறவழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துறை அதிகாரிகள் நில அளவை செய்து எல்லைகற்கள் பதிக்கும்போது அங்கே சென்ற பொதுமக்கள் விளை நிலத்தில் சாலை அமைக்கக் கூடாது, அதற்கு பதிலாக மாற்று வழியில் சாலை அமைக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் தலைமையில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.பேரணியின் போது மாற்றுப்பாதைமில் சாலை அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் பிரச்சனை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர்.
- விராலிமலை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யபட உள்ளது
- நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது
விராலிமலை,
விராலிமலை, வடுகபட்டி, பாக்குடி, மாத்தூர் துணை மின்நிலையங்களில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விராலிமலை துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான விராலிமலை,கோமங்களம், கல்குடி, பொருவாய், அத்திபள்ளம், ராஜளிபட்டி, நம்பம்பட்டி, வானதிராயன்பட்டி, விராலூர், ராமகவுண்டம்பட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, மாதுராப்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராப்பட்டி, கட்டகுடி, பாப்பாவயல், அகரபட்டி, கொடும்பாளூர் ஆகிய பகுதிகளிலும், வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி, வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி,முல்லையூர், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர்,கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி,சித்தாம்பூர் பகுதிகளிலும்,
பாக்குடி துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூர், ராப்பூசல் மற்றும் மாத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மாத்தூர் டவுன் மற்றும் அதற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர்,சாமிஊரணிபட்டி,மலையேறி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி ,செங்களாக்குடி, சீத்தப்பட்டி,குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி,சஞ்சீவிராயர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






