search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்ேகாட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா
    X

    புதுக்ேகாட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா

    • புதுக்ேகாட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
    • விழாவில் அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை - திருமயம் சாலையில், வெள்ளாற்றின் அருகில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நட்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில், கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை முதலமைச்சர் கடந்த 7-ந் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும், புளி, நாவல், அரசு, ஆல், புங்கன், பாதாம், இலுப்பை உள்ளிட்ட 15,000 மரக்க ன்றுகள் நெடுஞ்சாலைத்து றையின் மூலம் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் திருச்சி - ராமநாதபுரம் சாலையில், புதுக்கோட்டையிலிருந்து திருமயம் செல்லும் சாலையில் வெள்ளாற்றின் அருகில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்படவுள்ள சுமார் 75 மரக்கன்றுகளுக்கு இணையாக 750 மரக்கன்றுகள் நடும்விதமாக, மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும். இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் வேல்ராஜ், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவார் பொன். ராமலிங்கம், உதவி கோட்டப் பொறியாளர் சண்முகசுந்தரபூபதி, உதவிப் பொறியாளர்கள் கார்த்திகேயன், செந்தில்குமரன், ரவீந்திரன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்

    Next Story
    ×