என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 மாணவர்கள் சேர்க்கை தீவிரம்
- புதுக்கோட்டை மாவட்டம் மாதிரி பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது
- மாணவர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக் கூடத்தில், மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 11 -ம் வகுப்பு சேர்க்கைக்கு தேர்வாகியுள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அவர் பேசும் போது, தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவ, மாணவிக ளுக்கு பல்வேறு கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்கால கல்வி சவால்களை எதிர்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 2021-2022-ம் கல்வியாண்டில் 10 மாவட்டங்களில் 10 அரசு மாதிரிப்பள்ளிகள் அரசால் ஏற்படுத்தப்பட்டது. 2022-2023 -ம் கல்வியாண்டில் 2-ம் கட்டமாக 16 மாதிரிப்பள்ளிகள் ஏற்படு த்தப்ப ட்டது. இப்பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2023-2024-ம் கல்விரண்டில் 13 மாவட்டங்களில் 13 மாதிரிப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு 9 முதல் 11 -ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.அரசு மாதிரிப்ப ள்ளிகளில் பயிலும் மாணவ ர்களுக்கு உண்டு உறைவிட முறையில் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு சிறப்பான பயிற்சி வழங்கப்படுகிறது.அரசு மாதிரிப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அகில இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வாய்ப்பை பெறுகின்றனர் என மாவட்ட வருவாய் அலுவலா; மா.செல்வி பேசினார்.இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆர்.முருகேசன், ரமேஷ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், ராஜு, உதவித் திட்ட அலுவலர்கள் சுதந்திரன், தங்கமணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ், உதவி இயக்குநர் (தேர்வுகள்) தமிழரசன், பள்ளித் துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குருமாரிமுத்து, இளையராஜா, அரசு மாதிரி ப்பள்ளி தலைமையாசிரியர் பெ.பாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.






