என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் காலை உணவுத்திட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம்
    X

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் காலை உணவுத்திட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம்

    • புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் காலை உணவுத்திட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது
    • கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பாக, கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் காலை உணவுத்திட்டத்தினை பல கட்டங்களாக நகராட்சி, மாநகராட்சி, ஊரக பகுதிகள் மற்றும் மலைப்பகுதியில் செயல்படுத்தும் வகையில், தற்பொழுது கடந்த நிதிநிலை அறிக்கையின்போது அனைத்து பள்ளிகளுக்கும் 'முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்" விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.

    அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்கள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கு 'முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்" செயல்படுத்திட ஏதுவாக தொடர்புடைய மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அலுவலர்களுக்கு முதல் கண்காணிப்புக்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி நடத்தப்பட்டது. மேலும், கடந்த 12-ந் தேதி அன்று மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு மெர்சி ரம்யா, தலைமையில் மே 2023 மாதத்திற்கான கூட்டம் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட சமூக நல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×