என் மலர்
புதுக்கோட்டை
நெல் அறுவடை எந்திரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் கண்ணாத்தாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி இவரது மகன் மணிகண்டன் (வயது 27). இவர், கறம்பக்குடி அருகே உள்ள கீழாத்தூரை சேர்ந்த ஸ்ரீராம் என்பவரது நெல் அறுவடை எந்திரத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நெல் அறுவடை பணிக்கு செல்வதற்காக, ஸ்ரீராம் வீட்டில் இருந்து நெல் அறுவடை எந்திரத்தை எடுத்துச் சென்றுள்ளார். அவர் அருகே மணிகண்டன் அமர்ந்திருந்தார்.
கீழாத்தூர் பிரிவு சாலை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மணிகண்டன் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் ரெகுநாதபுரம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குளித்தலை நகராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போதும் காங்கிரசுக்கு குறைந்த வார்டு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி எம்.பி., அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
கரூர்:
கரூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கரூர் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வார்டு ஒதுக்கீடு குறித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி மற்றும் மாவட்ட தலைவர் சின்னசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
முதலில் அரவக்குறிச்சி பேரூராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போது ஒரு வார்டு மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து குளித்தலை நகராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போதும் காங்கிரசுக்கு குறைந்த வார்டு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி எம்.பி., அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு அரவக்குறிச்சி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணிவண்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஜோதிமணி எம்.பி.யை கண்டித்தார். ஒரு அமைச்சரை இப்படி பேசலாமா? என்று கேட்டார்.

அப்போது இந்த கூட்டத்தில் இருந்து ஜோதிமணி எம்.பி. வெளியேறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரிவாள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் வடமாநிலத்தினர்.
புதுக்கோட்டை:
உத்திரப்பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த கொல்லுப்பட்டறைத் தொழிலாளர்கள் பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு தொழில் செய்து வருகின்றனர்.
குறிப்பாக இவர்கள் அரிவாள், கோடாரி, கடப்பாரை, மண்வெட்டி, களை வெட்டி, சுத்தியல், உளி போன்றவைகளை தயாரித்து பொதுமக்கள் மத்தியில் அதனை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
தங்கள் மாநிலத்தில் போதிய வரவேற்பு கிடைக்கா ததையடுத்து, தமிழகம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வந்த கொல்லுப்பட்டறைத் தொழிலாளர்கள் 50&க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்று வட்டார பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
மேலும் வசிப்பதற்கென்று ஒரு இடத்தை தேர்வு செய்யாமல், பொது மக்கள் அதிகம் கூடுகின்ற சாலையோர பகுதிகளில் கொட்டகை அமைத்து அரிவாள் உள்ளிட்ட பொருட்களை செய்து குறைந்த விலைக்குவிற்பனை செய்து வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாது பொதுமக்கள் கேட்கின்ற வடிவத்தில், எடையில் உடனே செய்து கொடுப்பதால், பொது மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பொருட்களை தயார் செய்யக்கூறி ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
திருவரங்குளம் பாப்பான்விடுதி கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் பாச்சிக்கோட்டை ஊராட்சி பாப்பான்விடுதி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் 450க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம், செயற்கை முறையில் கருவூட்டல் முறையில் பரிசோதனை, மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆண்மை நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
கறவை பசுக்களுக்கு தடுப்பு கலவை வழங்கப்பட்டது. மேலும் சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகளுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முகாமில் மருத்துவர் குழுவினர் டாக்டர் செல்வ விநாயகி கால்நடை ஆய்வாளர்கள் சங்கீதா மற்றும் ஆனந்தன் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அரங்குளவன், ரெங்கசாமி, மீனாட்சி ஆகியோர் பணியாற்றினர்.

புதுக்கோட்டை நகரின் மத்திய பகுதியான பழனியப்பா கார்னரில் முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு சரமாரியாக அருவாள் வெட்டு விழுந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மச்சுவாடி வண்டிபேட்டை குடியிருப்பு காலணியை சேர்ந்தவன் நாகராஜ் மகன் அஜித்குமார்(20). இவர் மீது கணேஷ்நகர் காவல் நிலையத்தில் 2020-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.இந்த கொலை தொடர்பாக, இவருக்கும், காமராஜபுரம் 31-ம் வீதியை சேர்ந்த குருமூர்த்தி, மணி, ஆகாஷ் உட்பட 4 பேருக்கும் முன்விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு பழனியப்பா கார்னர் பகுதியில் அஜித்குமார் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த குருமூர்த்தி, மணி, ஆகாஷ் உட்பட 4 பேர் கொண்ட கும்பல், அஜித்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளாள் உடம்பு முழுவதும் 10 இடங்களுக்கும் மேல் வெட்டினர். இதனை பார்த்த அப்பகுதியினர் ஓடிவந்தனர். இதனைப்பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி தலைமறைவானார்கள். இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அஜித்குமாரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை வெட்டிய 4 பேரை வலை வீசி தேடிவருகின்றனர்.

ஆலங்குடி அருகே உண்டு உறைவிடப் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சுக்கிரன் குண்டு கிராமத்தில் மாவட்ட கலெக்டரின் அனும தியைப் பெற்று உண்டு உறை விடப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் எல்.என் புரம் ஊராட்சி சுக்கிரன்குண்டில் சுமார் 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஓரிரு வீடுகளைத் தவிர அனைவருமே சுவரில்லாத கீற்றுக் கொட்டகைகளுக்குள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இவர்களது குழந்தைகள் 50-க்கும் மேற்பட்டோர் புளிச்சங்காடு, பட்டிபுஞ்சை, காசிம்புதுப்பேட்டை, எல்.என் புரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்கிறபோது, வீட்டில் தனியே விட்டுவிட முடியாமல் குழந்தைகளையும் அழைத்து சென்றுவிடுகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, சுக்கிரன்குண்டு கிராமத்துக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள பெற்றோர்களிடம் இப்பகுதி குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் உயர என்னாலான உதவிகளை செய்வேன் என்று கூறியதோடு,
மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று இப்பகுதியில் உண்டு உறைவிடப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கற்றல் உபகரணங்கள் வழங்கி, இல்லம்தேடி கல்வித் திட்டம் மூலம் குழந்தைகளின் கற்றல் பணி வலுப்படுத்தப்படும் என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் வந்து பேசியது, இங்குள்ள பொதுமக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆய்வின்போது, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, அறந்தாங்கி பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா, இல்லம்தேடிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, நாணயவியல் கழகத் தலைவர் எஸ்.டி.பஷீர்அலி, செரியலூர் இனாம் அரசு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்பாபோன பால் விநியோகம் செய்ததால் பரபரப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஆவின் பால் பண்ணையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மாவட்ட தேவைக்கு மட்டுமின்றி, பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை ஆவின் பால் பண்ணையில் இருந்து, ஏஜெண்டுடுகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பால் பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டது.
இதில் இளஞ்சிவப்பு நிற பாக்கெட்டில் (இரு நிலை சமன்படுத்திய பால்) நிரப்பப்பட்டிருந்த பால் தரமின்றி இருப்பதாகவும், அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறும் ஏஜெண்டுட்டை தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்கள் பலர் முறையிட்டனர்.
இதனால் சில பகுதிகளில் ஏஜன்ட்டுகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாலின் தர மற்ற நிலை குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தி பரவத் தொடங்கியது. இது ஆவின் நிர்வாகத்துக்கும், பால்வளத்துறை அமைச்சர் நாசர் கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து அந்த பால் பாக்கெட்டுகளை திரும்பப்பெற உத்தரவிடப்பட்டதும், வாடிக்கையாளர்களிடம் இருந்து பால் பாக்கெட்டுகளை ஏஜெண்டுகள் திரும்ப பெற்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு புதிய பால்பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டது. சுமார் 10 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பால் தரமின்றி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவின் பொது மேலாளரிடம் கேட்டபோது, வாடிக்கையாளர்கள் பலரிடம் இருந்து புகார்கள் வந்தன. அதனடிப்படையில் அவை திரும்ப பெறப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புதிய பால்பாக்கெட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது என்றார்.

விராலிமலை அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கைதானதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது தொடர்பாக 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள இருந்திராபட்டியை சேர்ந்தவர் கணேஷ்பாபு. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் தற்போது ஆர்.எஸ்எஸ். புதுக்கோட்டை மாவட்ட செய்தி பிரிவு தொடர்பாளராக இருந்து வருகிறார்.
இலுப்பூர் அருகே உள்ள சமாதானபுரத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி ராணி (வயது 50). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலுப்பூர் தின்னியம்பட்டியில் மதம் மாற்றும் பிரசாரத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கணேஷ் பாபு சொந்த வேலை காரணமாக தின்னியம்பட்டிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு மதம் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ராணியிடம் இங்கு மாத மாற்றும் பணியில் ஈடுபடக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு ராணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ்பாபு, ராணியின் செல்போன் மற்றும் அவரது மொபட்டை பறிமுதல் செய்தார்.
இதுகுறித்து ராணி இலுப்பூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி வழக்குபதிவு செய்து கணேஷ் பாபுவை கைது செய்தார்.
இந்த தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை இலுப்பூர் பஸ் நிலையம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திரு மண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
புதுக்கோட்டையில் பிரதோச விழாவில் பங்கேற்ற பெண்ணிடம் மர்ம நபர் 5 பவுன் தாலி செயினை பறித்து சென்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகரின் மத்திய பகுதியில் உள்ளது இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் திருக்கோவில்.
இங்கு நேற்று மாலை சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கும், சிவனுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
அந்த சமயத்தில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் சிறப்பு வழிபாடு சமயத்தில் சின்னப்பா நகர் மூன்றாம் வீதியை சேர்ந்த ராஜரெத்தினம் மனைவி நீலாவதி (வயது 63) என்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துள்ளனர்.
இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இருப்பினும் அந்த மர்ம நபர் யார் என தெரியவில்லை. கோவிலில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து நகர காவல் நிலைய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் மற்றும் நடத்தை விதிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கவிதா ராமு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட, புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளிலும், 8 பேரூராட்சிகளிலும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் 2 நகராட்சிகளில் 69 வார்டுகளுக்கும், 8 பேரூராட்சிகளுக்குட்பட்ட 120 வார்டுகள் என மொத்தம் 189 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலை சுமூகமாகவும், எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையுமின்றி நடத்திடும் வகையில் 30 பறக்கும் படைகளும், 10 இடங்களில் சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு சட்டவிரோதமான செயல்கள் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இத்தேர்தல் காலத்தில் ரூ.50,000 க்கும் மேற்பட்ட தொகைகள் எடுத்தும் செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்களுடன் செல்லவேண்டும். 2 நகராட்சிகளில் 25 வாக்குப்பதிவு மையங்களும், 8 பேரூராட்சிகளில் 20 வாக்குப்பதிவு மையங்கள் என 45 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, மேற்கண்ட இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்தல் நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றும் வகையில் அனைத்து வகையான தேர்தல் நடவடிக்கைகளும் சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை கே.கே.சி. கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றி தேர்தலை சுமுகமாக நடத்திட ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் மன நோய் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்த பெண் மீட்கப்பட்டு குணமடைந்த நிலையில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட மனநல சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மன நோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் கண்டறியப்பட்ட ஒரு பெண் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஒருங்கிணைந்த மனநல சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்பட்டது.
அந்த பெண்ணுக்கு மாவட்ட மனநல சிகிச்சை மையத்தின் சிறப்பான சிகிச்சையின் மூலம் தற்பொழுது மன நோயிலிருந்து மீண்டு குணம்பெற்றுள்ள நிலையில் அவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாவூர்சத்திரம் என்றும் மற்றும் தனக்கு ஒரு மகன் உள்ளார் என்ற தகவல் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் சந்தன வடிவு என்பவர் அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.
மேலும் சந்தனவடிவு மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட கலெக்டருக்கு தங்களது நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மாவட்ட கலெக்டர் பயனாளிக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழை வழங்கி, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வின்போது மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, மனநல மருத்துவப் பணியாளர்கள் மெல்பா, யாழிசை, அஞ்சலிதேவி, ஹரிஹரன், தமீம் அன்சார் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிகளை அரசியல் கட்சியினர் மீறினால் புகார்கள் அளிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை, அறந்தாங்கி என இரு நகராட்சிகளும், அன்னவாசல், அரிமளம், ஆலங்குடி, இலுப்பூர், கறம்பக்குடி, கீரனூர், கீரமங்கலம் மற்றும் பொன்னமராவதி என 8 பேரூராட்சிகளும் ஆக மொத்தம் 10 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளது.
அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகளும், புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளும், ஆக மொத்தம் 69 வார்டுகள் உள்ளது. 8 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள் வீதம் 120 வார்டுகள் உள்ளது. ஆகக்கூடுதலாக 189 வார்டுகளில் எதிர்வரும் நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை நகராட்சி யில் மொத்தமுள்ள 42 வார் டுகளில், ஆதிதிராவிடர் (பொ) பிரிவிற்கு 2 வார்டுகளும், ஆதிதிராவிடர் (பெ) பிரிவிற்கு 3 வார்டுகளும், பெண் (பொ பிரிவிற்கு 18 வார்டுகளும் ஆக மொத்தம் 23 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 19 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறந்தாங்கி நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், ஆதிதிராவிடர் (பொ) பிரிவிற்கு 1 வார்டும், ஆதி திராவிடர் (பெ) பிரிவிற்கு 1 வார்டும், பெண் (பொ) பிரிவிற்கு 13 வார்டுகளும் ஆக மொத்தம் 15 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எட்டு பேரூராட்சிகளில் உள்ள 120 வார்டுகளில் ஆதி திராவிடர் (பெ) பிரிவிற்கு 11 வார்டுகளும், ஆதிதிராவிடர் (பொ) பிரிவிற்கு 6 வார்டுகளும், பெண் (பொ) பிரிவிற்கு 53 வார்டுகளும் ஆக மொத்தம் 70 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை நகராட்சியில் 63,739 ஆண் வாக்காளர்களும், 68,472 பெண் வாக்காளர்களும் 17 இதர வாக்காளர்களும், ஆக மொத்தம் 1,32,228 வாக்காளர்கள் உள்ளனர்.
அறந்தாங்கி நகராட்சியில் 17,090 ஆண் வாக்காளர்களும், 18,601 பெண் வாக்காளர்களும் 2 இதர வாக்காளர்களும், ஆக மொத்தம் 35,693 வாக்காளர்கள் உள்ளனர்.
8 பேரூராட்சிகளில் 39,663 ஆண் வாக்காளர்களும், 41,377 பெண் வாக்காளர்களும் 3 இதர வாக்காளர்களும், ஆக மொத்தம் 81,043 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 10 நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 1,20,492 ஆண் வாக்காளர்களும், 1,28,450 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர்களும், ஆக மொத்தம் 2,48,964 வாக்காளர்கள் உள்ளனர்.
26.01.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மாதிரி நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக புகார் அளிக்க ஏதுவாக 04322 221691 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மாதிரி நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக புகார்கள் ஏதுமிருப்பின் மேற்கூறிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.