என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடை பெற்ற போது எடுத்த படம்.
கால்நடை மருத்துவமுகாம்
திருவரங்குளம் பாப்பான்விடுதி கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் பாச்சிக்கோட்டை ஊராட்சி பாப்பான்விடுதி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் 450க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம், செயற்கை முறையில் கருவூட்டல் முறையில் பரிசோதனை, மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆண்மை நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
கறவை பசுக்களுக்கு தடுப்பு கலவை வழங்கப்பட்டது. மேலும் சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகளுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முகாமில் மருத்துவர் குழுவினர் டாக்டர் செல்வ விநாயகி கால்நடை ஆய்வாளர்கள் சங்கீதா மற்றும் ஆனந்தன் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அரங்குளவன், ரெங்கசாமி, மீனாட்சி ஆகியோர் பணியாற்றினர்.

Next Story