என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
புதுக்கோட்டையில் வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்பாபோன ஆவின் பால் விநியோகத்தால் வாக்குவாதம்
வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்பாபோன பால் விநியோகம் செய்ததால் பரபரப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஆவின் பால் பண்ணையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மாவட்ட தேவைக்கு மட்டுமின்றி, பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை ஆவின் பால் பண்ணையில் இருந்து, ஏஜெண்டுடுகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பால் பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டது.
இதில் இளஞ்சிவப்பு நிற பாக்கெட்டில் (இரு நிலை சமன்படுத்திய பால்) நிரப்பப்பட்டிருந்த பால் தரமின்றி இருப்பதாகவும், அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறும் ஏஜெண்டுட்டை தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்கள் பலர் முறையிட்டனர்.
இதனால் சில பகுதிகளில் ஏஜன்ட்டுகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாலின் தர மற்ற நிலை குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தி பரவத் தொடங்கியது. இது ஆவின் நிர்வாகத்துக்கும், பால்வளத்துறை அமைச்சர் நாசர் கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து அந்த பால் பாக்கெட்டுகளை திரும்பப்பெற உத்தரவிடப்பட்டதும், வாடிக்கையாளர்களிடம் இருந்து பால் பாக்கெட்டுகளை ஏஜெண்டுகள் திரும்ப பெற்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு புதிய பால்பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டது. சுமார் 10 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பால் தரமின்றி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவின் பொது மேலாளரிடம் கேட்டபோது, வாடிக்கையாளர்கள் பலரிடம் இருந்து புகார்கள் வந்தன. அதனடிப்படையில் அவை திரும்ப பெறப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புதிய பால்பாக்கெட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது என்றார்.

Next Story