என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெட்டுப்பட்ட வாலிபர் அஜித்குமார்
முன்விரோதத்தில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
புதுக்கோட்டை நகரின் மத்திய பகுதியான பழனியப்பா கார்னரில் முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு சரமாரியாக அருவாள் வெட்டு விழுந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மச்சுவாடி வண்டிபேட்டை குடியிருப்பு காலணியை சேர்ந்தவன் நாகராஜ் மகன் அஜித்குமார்(20). இவர் மீது கணேஷ்நகர் காவல் நிலையத்தில் 2020-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.இந்த கொலை தொடர்பாக, இவருக்கும், காமராஜபுரம் 31-ம் வீதியை சேர்ந்த குருமூர்த்தி, மணி, ஆகாஷ் உட்பட 4 பேருக்கும் முன்விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு பழனியப்பா கார்னர் பகுதியில் அஜித்குமார் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த குருமூர்த்தி, மணி, ஆகாஷ் உட்பட 4 பேர் கொண்ட கும்பல், அஜித்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளாள் உடம்பு முழுவதும் 10 இடங்களுக்கும் மேல் வெட்டினர். இதனை பார்த்த அப்பகுதியினர் ஓடிவந்தனர். இதனைப்பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி தலைமறைவானார்கள். இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அஜித்குமாரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை வெட்டிய 4 பேரை வலை வீசி தேடிவருகின்றனர்.

Next Story