என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனநிலை பாதித்து குணமடைந்த பெண் அவரது குடும்பத்தினரிடம் கலெக்டர் கவிதா ராமு முன்னி¬யில் ஒப்படைக்கப்பட்டபோது எடு
    X
    மனநிலை பாதித்து குணமடைந்த பெண் அவரது குடும்பத்தினரிடம் கலெக்டர் கவிதா ராமு முன்னி¬யில் ஒப்படைக்கப்பட்டபோது எடு

    மன நோய் பாதித்த பெண் குணமடைந்து உறவினர்களிடம் ஒப்படைப்பு

    புதுக்கோட்டையில் மன நோய் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்த பெண் மீட்கப்பட்டு குணமடைந்த நிலையில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட மனநல சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. 

    இந்த மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மன நோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் கண்டறியப்பட்ட ஒரு பெண் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஒருங்கிணைந்த மனநல சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்பட்டது.

    அந்த பெண்ணுக்கு மாவட்ட மனநல சிகிச்சை மையத்தின் சிறப்பான சிகிச்சையின் மூலம் தற்பொழுது மன நோயிலிருந்து மீண்டு குணம்பெற்றுள்ள நிலையில் அவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாவூர்சத்திரம் என்றும் மற்றும் தனக்கு ஒரு மகன் உள்ளார் என்ற தகவல் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் சந்தன வடிவு என்பவர் அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.  

    மேலும் சந்தனவடிவு மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட கலெக்டருக்கு தங்களது நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    மாவட்ட கலெக்டர் பயனாளிக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழை வழங்கி, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினார்.

    இந்த நிகழ்வின்போது மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, மனநல மருத்துவப் பணியாளர்கள் மெல்பா, யாழிசை, அஞ்சலிதேவி, ஹரிஹரன், தமீம் அன்சார் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×