என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி அருகே 750 பவுன் நகை கொள்ளை போன சம்பவத்தில் உறவினர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோபாலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் புருனை நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 27-ந்தேதி இவரது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் 750 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்த மீமிசல் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் போலீஸ் எஸ்.பி. நிஷா பார்த்தீபன் நேரில் ஆய்வு மேற்க்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி. டி.வி. காட்சிகள், உறவினர்கள், பழைய குற்றவாளிகள் என பல கோணங்களில் விசாரித்து வந்தனர்.
அப்போது உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொள்ளைபோன வீட்டின் பின்பக்கத்தில் உள்ள கிணற்றில் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கிணற்றின் மேற்புறத்தில் மூடப்பட்டிருந்த கம்பி கதவு லேசாக திறந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார், உடனடியாக கிணற்றிலிருந்த தண்ணீரை வெளியேற்றிப் பார்த்தனர்.
இதில் காணாமல் போன தங்கநகைகள் மூட்டையாக கட்டி கிணற்றுக்குள் கிடந்தது தெரிய வந்தது. அதனை மீட்டு நகை மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் எடை போட்டதில் 559 சவரன் நகை இருப்பது தெரிய வந்தது.ஏற்கனவே 750 சவரன் கொள்ளை போனதாக புகார் அளித்துள்ள நிலையில் 559 சவரன் நகை மட்டுமே கிடைத்தது.
அந்த நகையை கைப்பற்றிய போலீசார் காணாமல் போன நகை எவ்வாறு கிணற்றுக்குள் வந்தது, மீதி நகை எங்குள்ளது என்ற பல்வேறு கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் ஜாபர் சாதிக்கின் உறவினரான கமருஜமான் மற்றும் அசாருதீன் ஆகியோர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருடர்கள் போலே உள்ளே நுழைந்து நகையை திருடியிருப்பது தெரிந்தது.
இது குறித்து போலீசாரிடம் கமருஜமான் அளித்த வாக்குமூலத்தில், தானும் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததாகவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஊருக்கு வந்தபோது, ஜாபர் சாதிக்கின் வீட்டில் நகைகள் இருப்பது தெரிந்து, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகையை திருடிச் சென்றேன்.
மேலும் திருடிய நகைகளை எடுத்துக்கொண்டு சென்னையில் 2 நாட்கள் தங்கிவிட்டு பின்பு வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருவதுபோல் வந்தேன். ஆனால் போலீசார் என்னை நெருங்குவதை உணர்ந்த நான், பயத்தில் திருடிய நகையை வீட்டின் பின் பக்கத்தில் உள்ள கிணற்றில் போட்டேன் என ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து கமருஜமான் மற்றும் உடந்தையாக இருந்த அசாருதீன் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 9 பவுன் நகை மீட்ட போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு இருவரையும் சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை அருகே 2500 ஆண்டிற்கும் முற்பட்ட ஈமச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தச்சம்பட்டி வெங்கலமேட்டில் இரும்பு மற்றும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இருப்பதாக புதுக்கோட்டை தொல்லியல் கழகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தினர் சென்று ஆய்வு நடத்தினர்.
இதில் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஈமச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஈரோடு மாவட்டம் கெடுமணலில் உள்ளதை போல பெருங்கற்கால பலகை கல்லில் துளையுடைய கற்கள், 20&க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள், 50&க்கும் மேற்பட்ட கற்குவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பழங்காலத்தில் இறந்தவர்கள் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மேல் கற்களை குவித்து வைப்பது கற்குவையாகும். இக்குவைகள் சில சேதமடைந்துள்ளன. மேலும் இப்பகுதியில் கிடைக்காத செம்புரான் கற்கள் கற்குகைகளை சுற்றி கல் வட்டம் அமைக்கப்பட்டுள்ளன.
கல்லறையில் பயன்படுத்தப்பட்ட கற்பலகைகள் நீளம் 9 அடியாகவும், அகலம் 7 அடியாகவும், தடிமன் முக்கால் அடிகளுக்கு உட்பட்டதாகவும் உள்ளது.
இங்கு அனைத்து வகையான ஈமச்சின்னங்களும் இருப்பது கண்டெடுக்கப்பட்டன. தற்போது அப்பகுதியில் விவசாய பணிகள் வருவாய்த்துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியை பாதுகாக்க உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன்லைன் பதிவேற்றத்தை தடுத்து நிறுத்தி பழைய முறையிலேயே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
வடகாடு சுற்று வட்டார பகுதியில் ஆழ்குழாய் மற்றும் ஆற்று பாசனம் மூலமாக, தாளடி சம்பா நெல் பயிரிட்டு இருந்தனர். தற்போது அறுவடைபணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 69 இடங்களில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதற்கான கொள்முதல் பணிகள் நடந்து வருகிறது.
ஆனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மணி களை ஆன்லைன் பதிவேற்றம் செய்த பிறகுதான் வாங்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளனர். ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் காலதாமதம் ஆவதால் நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடிகள் நடந்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
ஏற்கனவே ஆன்லைனில் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந் நிலையில் நெல் கொள்முதல் செய்வதில் மேலும் தாமதம் ஆவதால் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்திருக்கும் நெல் மணிகள் மழை மற்றும் பனியால் வீணாகும் சூழல் நிலவி வருகிறது.
மேலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இடைத்தரகர்கள் மூலமாக, தனியார் நெல்கொள்முதல் நிலைய முதலாளிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை கொள் முதல் செய்ய வாய்ப்பு உரு வாகும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிருப்தி அடைந்த நிலையில் இருந்து வருகின்றனர். இதனால் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆன்லைன் பதிவேற்றத்தை தடுத்து நிறுத்தி பழைய முறையிலேயே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள விராலிமலை முத்துக்கண்ணம்மாளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த 83 வயதான முத்துக்கண்ணம்மாள் சதிராட்ட கலைஞர். இவர் 2022-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
தலைநகர் புதுடெல்லியில் வருகிற ஏப்ரல் மாதம் ராஷ்ட்ரபதி பவனில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கி அவரை கவுரவிக்க உள்ளார். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாராட்டு விழா விராலிமலை முருகன் மலைக்கோவில் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் அறநிலையத்துறை தஞ்சை மண்டல இணை ஆணையர் தென்னரசு, அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், உதவி ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் சரவணன், இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன், இசை வேளாளர் அறக்கட்டளை தலைவர் பூபாலன், அறங்காவலர் குழு உறுப்பினர் ஜனனி ராமச்சந்திரன், கோவில் சூப்பிரண்டு மாரிமுத்து,
குருக்கள் கணேசன், சிவ மகாதேவன், மாமுண்டி உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்று பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள முத்துக்கண்ணம்மாளுக்கு பணமுடிப்பு மற்றும் சால்வை, மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சாலையை கடக்க தினமும் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் அரசு பள்ளி மாணவிகள். வேகக் கட்டுப்பாடு தடுப்புகள் அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் கல்வித்திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி இடைநிற்றலை தடுக்க இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிவித்து தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இருந்தபோதிலும் ஆர்வ முடன் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை ஊக்குவித்து, அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பணியில் பள்ளிக்கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது. கவுன்சிலிங் முறையும் கையாளப்பட்டு வரும் நிலையில் மாணவர்களின் நிலையை மேம்படுத்துவது ஒரு சவாலான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையோரமாக உள்ள இந்த பள்ளியில் 1,200 மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்வதில் பல்வேறு சிரமங்களையும், சவால்களையும் சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக்கு வந்து செல்லும் போது, சாலையை கடப்பதில் பெரும் சிரமம் நீடித்து வருகிறது.
கிழக்கு கடற்கரை சாலை என்பதால் அந்த வழியாக ஒரு வினாடி கூட இடைவெ ளியின்றி ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய வாகனங்கள் சென்ற வண்ணம் இருப்பதால் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் அந்த சாலையை கடப்பது கடினமாக உள்ளது. ஒரு சில சமயங்களில் மாணவிகள் புத்தக பையுடன் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக காத்துக் கிடக்கும் சூழ்நிலை யும் ஏற்பட்டுள்ளது.
பள்ளி அமைந்துள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட நிலையிலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதனை கண்டு கொள்வதில்லை. மின்னல் வேகத்தில் கடக்கும் வாகனங்களால் பல சமயங்களில் விபத்துகளும் நடந்துள்ளன.
எனவே மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்களின் நலன் கருதி மணமேல்குடி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி எதிரே அல்லது அருகில்வேகக்கட்டுப் பாட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும். பள்ளி வகுப்பு கள் முடியும் நேரங்களில் ஊர்க்காவல் படை, போக்கு வரத்து காவல் துறையினரை கொண்டு மாணவிகள் எளி தில் சாலையை கடக்க உதவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாளை மனு தாக்கல் செய்ய இறுதிநாள் என்பதால் நகராட்சி அலுவலகத்திற்கு கூட்டம் கூட்டமாக வேட்பாளர்கள் குவிகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகரா ட்சிக்கும், ஆலங்குடி, அன்ன வாசல், அரிமளம், இலுப்பூர், கறம்பகுடி, கீரனூர் மற் றும் கீரமங்கலம் ஆகிய பேரூராட்சிகளுக்கு என மொத்தம் 189 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளுக்கு நேற்று வரை 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பேரூராட்சிகளில் உள்ள 120 இடங்களுக்கு 48 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணி முடிவாகி வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் அ.தி.மு.க. வினர் மற்றும் தனியாக போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் என பலர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்யகூடும். வேட்பு மனு நாளையுடன் முடிவடைகிறது.
இதனால் தற்போது நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலங்கள் திருவிழா நடைபெறும் இடங்கள் போல் காட்சியளிக்கிறது. வேட்பாளர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிகமாக களம் காண்கின்றனர். மேலும் நகராட்சி வார்டுகளின் எல்லைகளை மாற்றி அமைத்துள்ளாதால் தற்போது வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை வார்டுகளில் மாறுபட்டுள்ளது.
சிறிய வார்டாக இருந்த வார்டுகள் அதிக வாக்காளர்களை கொண்டு பெரிய வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இது வேட்பாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எது இருப்பினும் முன்பு போல் மக்களிடையே தேர்தல் நடவடிக்கை இல்லை என கூறலாம்.
பிரச்சாரத்திற்கு மேளம், தாளம், நடனம் என பலவகைகளில் வேட்பாளர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அமைதியாக சென்று வாக்குகள் சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள அதிக நாட்கள் இல்லை. சின்னத்துடன் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபின் பிரச்சாரத்தில் சூடு பறக்கும் என்றால் மிகையல்ல.

கந்தர்வக்கோட்டையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிக்கியது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கந்தர்வகோட்டை பகுதிகள் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பறக்கும் படையினர் கந்தர்வகோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது அநத வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.
சோதனையில் காரில் தடை செய்யப்பட்ட ரூ. 3லட்சம் மதிப்புள்ள 170 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக காரை ஓட்டி வந்த பிசானத்தூர்கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரனை கைது செய்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை யும், விற்பனை செய்த ஞானசேகரணையும் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மீனவர் வலையில் சிக்கிய அரியவை கடல் வாழ் பச்சையாமை மீண்டும் கடலில் விடப்பட்டது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா தெற்கு புதுக்குடியிருப்பு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். மீனவரான இவர் தனக்கு சொந்தமான படகில் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு வந்தபோது மீன்பிடி வலையில் அரிய வகை கடல் வாழ் உயிரினமான பச்சையாமை ஒன்று சிக்கியிருந்தது.
இதுபற்றி மாதவன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் ஆகியோரின் உத்தரவுப்படி வனசரக அலுவலர் சதாசிவம் மணமேல்குடி பிரிவு ராஜேந்திரன், அந்தோணிசாமி, அன்புமணி, தற்காலிக பாதுகாப்பு காவலர் முத்துராமன் ஆகியோர் வலையில் சிக்கிய அரியவகை பச்சை ஆமையினை மீட்டு பாதுகாப்பாக மீனவர்கள் செல்வமணி, மாரியப்பன் ஆகியோர் உதவியுடன் கடலில் விட்டனர்.
பாதுகாப்பாக விடப்பட்ட பச்சையாமனை நீர் நிலையில் நீந்தி தனது வாழ்வை நோக்கி சென்றதை அனைவரும் உறுதி செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்த போதிலும் இந்த பகுதிக்கு வந்தது இதுவே முதல் முறையாகும்.
வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி பச்சையாமை பாதுகாக்கப்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினம் ஆகும். அதனை வேட்டையாடுவது அல்லது தீங்கு விளைவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1988 பிரிவு 51-ன்படி மூன்று வருடத்திற்கு குறையாமல் 7 வருடம் வரை சிறை தண்டனையும் மற்றும் ரூ.10 ஆயி ரத்துக்கும் குறையாத அபராதமும் விதிக்கவும் வழி வகை உள்ளது.
எனவே கடல் பசு, கடல் குதிரை, கடல் பல்லி, கடல் அட்டை, சித்தாமை, பச்சை யாமை, டால்பின், திமிங்கலம் போன்ற கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க மீனவர்கள் மற்றும் பொது மக்கள் பணத்தை வைத்து முழு ஒத்துழைப்பு வழங்க கோரி வனத்துறையினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
சரக்கு ஆட்டோவிற்கு தீவைத்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பல்லவராயன்பத்தை ஊராட்சி குலப்பெண்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவர் சரக்கு ஆட்டோ சொந்தமாக வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவர் காலையில் ஆட்டோவை எடுத்துக் கொண்டு தொழிலுக்கு சென்றால் மாலையில் தான் வீடுதிரும்புவார். அப்போது வாகனத்தை தன் வீட்டின் அருகில் உள்ள பழைய அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிட வளாகம் எதிரில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
இந்நிலையில் இதே போல் நேற்றிரவு வாகனத்தை நிறுத்தி விட்டு, அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் இவரது சரக்கு ஆட்டோவிற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். தீ மளமளவென எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர், தெய்வேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வீட்டிலிருந்து விரைந்து வந்து பார்ப்பதற்குள் சரக்கு ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக கறம்பக்குடி போலீசில் தெய்வேந்திரன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரக்கு ஆட்டோவிற்கு தீவைத்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
எஸ்.குளவாய்பட்டி ஊராட்சியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் இயங்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சியில். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்தது.
இந்த நெல் கொள்முதல் நிலையத்தால் எஸ்.குளவாய்பட்டி. வெண்ணாவல்குடி, சேந்தாக்குடி, கத்தக்குருச்சி, பாலையூர், வேங்கிடக்குளம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் விளைவித்த நெல் மணிகளை விற்பனை செய்து பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட வில்லை. இதனால் பல ஆயிரம் நெல் மூட்டைகள் நிலையத்தின் முன்பு விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர். மேலும் நெல் மூட்டைகளை விவசாயிகள் இரவும் பகலுமாக அங்கேயே தங்கி காவல் காத்து வருகின்றனர்.
உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் மற்றும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் அதிகாரிகளிடமும் பல முறை முறையிட்டும், மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கலெக்டர் கவிதாராமுவை, எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நளினி பாரதிராஜா சந்தித்து நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்க மனுகொடுத்தார். ஆனால் இது நாள் வரை கலெக்டர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், புதுக்கோட்டை அறந்தாங்கி எஸ்.குளவாய்ப்பட்டி சாலையில் நெல் மூட்டைகள் மற்றும் நெல்மணிகளை குவித்து சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, திருவரங்குளம் ஒன்றிய வட்டார ஆணையர் கோகுல கிருஷ்ணன், நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மற்றும் வல்லாத்திராக்கோட்டை காவல் ஆய்வாளர் ஆகியோர் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், தற்போதைய இடத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்காது என்றும், அதன் அருகே உள்ள முத்துப்பட்டினம் ஆதி திராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் தற்போது அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையமாக மாற்றப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொள்ளாத விவசாயிகள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்.பிரமுகரை சந்திக்க வந்த இந்து முன்னணி தலைவருக்கு அனுமதி மறுப்பு
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட் டம் இலுப்பூர் அருகே திம்மியம்பட்டியில் மதம் மாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 2 கிறிஸ்தவ பெண்களிடம் தகராறில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கணேஷ்பாபு கைது செய்யப்பட்டார். மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக இருந்து வரும் அவர் அறந்தாங்கிகிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கணேஷ் பாபுவை சந்திக்க வந்த, இந்து முன்னணி மாநிலதலைவர் காடேஸ்வர சுப்பிரமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இது குறித்து காடேஸ்வர சுப்பிரமணி நிருபர்களிடம் கூறுகையில், திம்மியம்பட்டி பகுதியில் இந்து மக்களை, கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்ற, இரண்டு பெண்கள் முயற்சித்து வந்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ஆர்.எஸ்.எஸ்.ன் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவர் கணேஷ் பாபுவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்,
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் மதம் மாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்க்கொள்ளாமல், அதனை தட்டி கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது வேதனைக்குறியது என்றார். தொடர்ந்து பேசிய அவர் அறந்தாங்கி கிளை சிறையில் உள்ள கணேஷ்பாபுவை சந்திக்க வந்தோம்.
ஆனால் காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இது தமிழக அரசு கிறிஸ்துவ மதத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை காட்டுகிறது.எனவே தமிழக அரசு உடனடியாக சிறையில் உள்ள கணேஷ் பாபுவை விடுவித்து, மதம் மாற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் பா.ஜ.க. நிர்வாகிகள், இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். நேற்று மாலை நீதிமன்ற உத்தரவுப்படி கணேஷ்பாபு ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சி ஏடி காலனியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன்கள் கர்ணன் (வயது27). கலையரசன் (24). ராமகிருஷ்ணன் (19). இவர்களுக்கும்,
பள்ளத்திவிடுதி காலனியைச் சேர்ந்த ஸ்ரீமான், பிரவீன், அன்பு ஆகியோருக்கும் இடையே ஜல்லிக்கட்டு காளையை கட்டியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு கல்லாலங்குடி ஆர்ச் பகுதியில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அரிவாளால் தாக்கி கொண்டனர்.
இதில், படுகாயம் அடைந்த கர்ணன், கலையரசன், ஸ்ரீமான், பிரவீன் ஆகியோரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.