என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆலங்குடியில் சாமி சிலைகளை உடைத்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளங்குறிசி கடுக்காகாடு கிராமத்தில் தெற்கு பகுதியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது.

    அப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில் ஆகும். இக்கோயிலில் தற்போது சிலைகள் புதுப்பிக்கப்பட்டு விழா நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்தனர். அப்போது அங்கு இருந்த காளிசிலை, அய்யனார்சிலை, கருப்பர்சிலை அம்மணகாளி அனைத்து சிலைகளும் உடைக்கப்பட்டு சேதமாகி இருந்தது.

    இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த வடகாடு போலீசார், அப்பகுதியில் சுற்றித்திரிந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரசோழபுரம் பாலகுரு என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொலை வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசாருக்கு பாரட்டு
    புதுக்கோட்டை:
     
    புதுக்கோட்டையில் பழைய அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அலுவலர்களின் கூட்டுறவு சிக்கன நாணய சங்க அலுவலக கட்டிடத்தில் தங்கி கொண்டு அங்குள்ள பணிகளை செய்து வந்த நாகரெத்தினம் என்பவர் கடந்த மாதம் 19&ந் தேதியன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கொலை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், நகர காவல் ஆய்வாளர் குருநாதன் மற்றும் காவல் ஆளிநர்கள், சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர்களை மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஏ.பாலகிருஷ்ணன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நேரடியாக அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
    உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஆலங்குடி  உட்கோட்ட காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்தும், தேர்தல் நடத்தைவிதி முறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கியும், வாக்குசாவடிகளின் நிலை குறித்து அறிவுரைகளை   மாவட்ட எஸ்.பி.நிஷாபார்த்திபன் வழங்கினார்.

    கூட்டத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் வடிவேல் முன்னிலைவகித்தார்.கூட்டத்தில் ஆலங்குடி சரக காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து இன்ஸ்பெக்டர்கள், சப்& இன்ஸ்பெக்டர்கள் மற்றும்  ஆலங்குடி, வடகாடு, கீரமங் கலம், கறம்பக்குடி, ரெகுநாதபுரம், மழையூர், செம்பட்டி விடுதி காவல் நிலையங்களில் உள்ள போலீசார் கலந்து கொண்டனர்.
    அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் தொழிலாளர் நலத் துறையின் சார்பில் தேசிய அமைப்பு சாரா  தொழிலாளர் அடையாள அட்டை பெறுவதற்கான முகாம் நடந்தது.

    முகாமிற்கு ஊராட்சித்தலைவர் செல்வி முருகேசன் தலைமை   தாங்கினார். தொழிலாளர் நலத்துறையின் அலுவலர்கள்   முன்னிலையில் பொதுமக்களிடம் ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் செல் நம்பர் ஆகியவைகள் பெற்று தொழிலாளர் நலத்துறையின் பிரபாகர் இதற்கான தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்தார்.

    இதில் கண்டியாநத்தம், கேசராபட்டி, புதுப்பட்டி மற் றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கு பெற்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பறக்கும் படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை  மாவட்டத்தில்   நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத்தேர்தல்களில் மாதிரி நடத்தை விதிகள் கடைபிடிக்கப்படுவதை 24 மணி நேரமும் கண்காணித்திடும் பொருட்டு ஒவ்வொரு நகர்ப்புற  உள்ளாட்சி  அமைப்பிலும்  பறக்கும் படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    பறக்கும் படையிரின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திட மாவட்ட அளவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத்துறை  அலுவலர் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பறக்கும் படையினரால் வாகனத்தணிக்கையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும்  ரொக்கம்  மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்புடைய கருவூல அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். பறக்கும் படையினரால்  பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கம் குறித்த விபரங்களுக்கு பறக்கும் படை  தலைமை  அலுவலரால் தொடர்புடைய நபருக்கு உரிய அத்தாட்சி கடிதம் வழங்கப்படும்.

    இந்த அத்தாட்சி கடித நகலுடன்  பறிமுதல்  செய் யப்பட்ட  தொகை  மற்றும் பொருட்களை மீளப்பெற தொடர்புடைய   நபர்கள் விண்ணப்பத்திடலாம். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியினர்  நல  அலுவலர்  ஆகியோரை  உள்ளடக்கிய  ஒரு மேல்  முறையீட்டு  குழு இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கைப்பற்றப்பட்ட பொருட்களை மீள வழங்குதல் குறித்து முடிவு கள் மேற்கொள்ளும்.

    இந்த மேல்முறையீட்டுக் குழுவின் குழுக்கூட்டுபவராக மாவட்ட   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செயல்படுவார். அவரது அலைபேசி எண் 94420 56878 ஆகும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மருத்துவர் விவேக்ராஜ்  முன்னிலை வகித்தார். இதில் மருத்துவர்கள் கார்த்திக்குமார், மணிவண்ணன், கீதா,செவிலியர்கள், ராணிசெல்வகுமாரி, திவ்யா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மருத்துவர் பெரியசாமி கூறியதாவது:
     ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் நாள்  உலகபுற்று நோய் தினம் அனுசரிக்கப் படுகிறது, ஆய்வுகளின் படி தற்போது இந்தியாவில் சுமார் 14 லட்சம் பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்களே 52.4 சதவீதம்  பாதிக்கப்பட்டுள்ளனர்,

    இது புகையிலை மற்றும் புகையிலை பொருட்களால்  49 சதவீதம் உண்டாகிறது. புற்றுநோய் உண்டாவதற்கான காரணங்கள்புகையிலை பொருட்கள்,புகை பிடித்தல், மது அருந்துதல், உடல் உழைப்பு இல்லாமல் அதிக உடல் பருமன்போன்ற வைகளே ஆகும்.

    இவற்றை தடுப்பதன் மூலமாகவும், நார்சத்து மிகுந்த காய்கறிகளை உட்கொள்வதாலும் புற்றுநோய் வராமல் தடுக்க லாம். மற்றொ ஆய்வின்படி வெள்ளை நிறகாய்கறிகள் முள்ளங்கி, முட்டைகோஸ், காலி பிளவர், உருளை கிழங்கு, முறுங்கைகாய் போன்றவை அதிக அளவில் புற்றுநோய் எதிர்ப்புதன்மை கொண்டுள்ளதாக தெரிகிறது.

    தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் பரிசோதனை முறைகள்தினமும் செய்யப்படுகின்றன. அதற்கான சிகிச்சை முறைகளும் உள்ளன.

    ஆகவே ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சைபெறுவதன் மூலம், முழு நிவாரணமும், பாதிப்பில்லா உடல்நலமும் பேணிகாக்கப்படுகிறது. ஆகவே  பொதுமக்கள் இச் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

    இதனை தொடர்ந்து பெண்களுக்கு மார்பக பரிசோதனை முகாம்நடைபெற்றது.  இதில் சுமார் 50 பெண்கள்  கலந்து கொண்டனர்.   முடிவில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.
    காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி, பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் நெம்புனேஸ்வரம் சேர்ந்தவர் வீரப்பன் (வயது32-). இவரும்  அதே பகுதியை சேர்ந்த ரோகினி (வயது 21) என்பவரும் சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் காதல் ஜோடிகள் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் பாதுகாப்பு கேட்டு  ஆலங்குடி காவல் நிலையத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

    இச்சம்பவம்  தொடர்பாக ஆலங்குடி காவல் இன்ஸ்பெக்டர் அழகம்மை  இருதரப்பு குடும்பத்தினரை அழைத்து சமரச பேச்சில் ஈடுபட்டார்.

    ஆனால் இருதரப்பிலும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.  காதலர்கள் இருவருக்கும் திருமண வயதை எட்டியதால் இருவரையும் இணைத்து வைப்பதாக இன்ஸ்பெக்டர் அழகம்மை அவர்களிடம் தெரிவித்தார்.

    பின்னர் காதலர்கள் இருவரையும் போலீஸ் காவல் இன்ஸ்பெக்டர் அழகம்மை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

    விராலிமலை அருகே புதிய நூலகத்தை மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா வடுகப்பட்டி ஊராட்சி தேத்தாம் பட்டியில் காவல் துறை சார்பில் நூலக திறப்பு விழா நடைபெற்றது.  

    இதில்  மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ள நூலகமானது இப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இதேபோல் மத்திய மண்டலம் முழுவதும் நூலகங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று 20 இடங்களில் இதேபோல் நூலகங்களை திறந்து வைக்கிறோம்.

    இங்கு சிறியவர்கள் படிக்கக்கூடிய வகையில் படங்களுடன் கூடிய கதை புத்தகங்கள்  கொடுத்துள்ளோம். கதைகளை படிக்கும்போது கற்பனை வளம் அதிகமாகும்.

    இதனால் பிரச்சினைகளுக் குரிய தீர்வுகளை எடுப்பதற்கு மிகவும் எளிமையானதாகவும், எண்ணங்கள் மேம்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் வடுகப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி குமார், இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மொழி அரசு, ஒன்றிய கவுன்சிலர் மதியழகன் உட்பட  பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

    வாக்கு மையங்களில் அடிப்படை வசதிகள் கண்டிப்பாக செய்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தல்
    புதுக்கோட்டை:
     
    புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் டாக்டர்.மோனிகா ராணா, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துதல் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர்,  மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மற்றும் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் டாக்டர்.மோனிகா ராணா, அரிமளம் பேரூராட்சியில் பறக்கும்படையினர் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள்,
     
    அரிமளம் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு விண்ணப்பப் படிவங்கள், அதற்கான பதிவேட்டினையும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும், அரிமளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அறைகள் மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர், தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும், அடிப்படை வசதிகள் வாக்கா ளர்களுக்கு தவறாமல் செய்யப்பட வேண்டும்  என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் பிரவினாமேரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்
    புதுக்கோட்டை:
     
    புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் இதர தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களில் தகுதியானவர்களுக்கு அஞ்சல் வாக்குகள் வழங்கப்படும்.

    தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அஞ்சல் வாக்குகள் பெற படிவம் 15-ல் தங்களது பெயர் எந்த நகர்ப்புற உள்ளாட்சி  அமைப்பின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதோ  அந்த நகர்புற உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  வாக்குப்பதிவு நாளுக்கு 7-தினங்களுக்கு முன்னர் சென்றடையும் படி விண்ணப்பித்திட வேண்டும்.

     இந்த விண்ணப்பத்துடன் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணிக்கான உத்தரவு நகல் ஒன்றினையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

    இந்த விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து தகுதியான அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்குவார்கள்.

    அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை பெற விண்ணப்ப படிவங்கள் (படிவம் 15) மாவட்ட ஆட்சியரக உள்ளாட்சி தேர்தல் பிரிவு, நகராட்சி, மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
    இல்லம் தேடி கல்வி பயிலும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி  அலுவலரின் வழிகாட்டுதலின்படி திருவரங்குளம் அணவயல் அடுத்த சுக்கிரன் குண்டுவில் கல்வி&சுகாதாரவிழிப்புணர்வும், இல்லம் தேடிக் கல்வியில் பயிலும் மாணவ& மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழாவும் நடைபெற்றது.

    விழாவிற்கு  திருவரங்குளம் வட்டாரக்கல்வி  அலுவலர் கருணாகரன் தலைமை தாங்கினார். அணவயல் ஊராட்சி   மன்றத்தலைவர் புஸ்பராணி  சின்னத்துரை, துணைத்தலைவர்   லெட்சுமி முத்துச்சாமி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்  ராஜாக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், மாவட்ட மனநல மருத்துவ அலுவலர் கார்த்திக்தெய்வநாயகம் ஆகியோர் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு, பேனா, புத்தகப் பை,சீருடைகள், காலணிகளை வழங்கினர்.

    விழாவில்  ஆசிரியர்கள் மணியன், பழனியப்பன், பஷீர்அலி, செந்தில்குமார், முனியசாமி, சசிகுமார், சையது  இப்ராம் ஷா, கிராம நிர்வாக அலுவலர் ராஜா மற்றும் சுரேஷ், பகத்சிங்  ராஜேந்திரன், காசிம் புதுப்பேட்டை பள்ளி தலைமையாசிரியர் செந்தில்வடிவு பலர் கலந்து கொண்டனர்.
    மண்வள பாதுகாப்பு குறித்து பேரணி நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    தேசிய நீடித்த நிலைக்கத் தக்க வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்வள அட்டை இயக்கம், மண்வள பாதுகாப்பு தொடர்பான விவசாயிகள் பயிற்சி கந்தர்வகோட்டை  புதுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

    பயிற்சியில் புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மதியழகன் கலந்து கொண்டு மண்வளத்தினை பாதுகாத்திடும் முக்கிய தொழில்நுட்பங்களான பசுந்தாள் உரப் பயிர்கள் சாகுபடி, மாற்றுப்பயிர் விவசாயம், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

    மேலும் விதைநேர்த்தி செய்வதன் அவசியம், இயற்கை உரம் பயன்படுத்துதல், மண்வள அட்டை பரிந்துரையின்படி  உரமிடுதல் தொடர்பாக விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப அலுவலர் கருப்பசாமி, மண்வளம் பாதுகாப்பில் பயிர் சுழற்சி முறையின் அவசியம் குறித்து மாற்று பயிர் சாகுபடிசெய்வ தால் ஏற்படும் நன்மைகள், இயற்கை உரங்கள் பயன் படுத்துவதால்   ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.

    வேளாண்மை உதவிஇயக் குனர் அன்பரசன் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலமாக தற்போது செயல் பாட்டில் உள்ள திட்டங்கள் மற்றும் அதன் மானிய விவரங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.

    பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து  கொண்ட மண்வளம் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உதவி வேளாண்மை அலுவலர் சுப்பிரமணியன் புதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பன்னீர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட முன்னோடி விவ சாயிகள் கலந்து கொண்டனர். 

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் காளிதாஸ் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் மகேந்திரன், கவியரசன் செய்திருந்தனர்.
    ×