என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விராலிமலை அருகே புதிய நூலகத்தை மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் திறந்து வைத்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி
    X
    விராலிமலை அருகே புதிய நூலகத்தை மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் திறந்து வைத்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி

    விராலிமலை அருகே நூலகத்தை திறந்து வைத்த ஐ.ஜி.

    விராலிமலை அருகே புதிய நூலகத்தை மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா வடுகப்பட்டி ஊராட்சி தேத்தாம் பட்டியில் காவல் துறை சார்பில் நூலக திறப்பு விழா நடைபெற்றது.  

    இதில்  மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ள நூலகமானது இப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இதேபோல் மத்திய மண்டலம் முழுவதும் நூலகங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று 20 இடங்களில் இதேபோல் நூலகங்களை திறந்து வைக்கிறோம்.

    இங்கு சிறியவர்கள் படிக்கக்கூடிய வகையில் படங்களுடன் கூடிய கதை புத்தகங்கள்  கொடுத்துள்ளோம். கதைகளை படிக்கும்போது கற்பனை வளம் அதிகமாகும்.

    இதனால் பிரச்சினைகளுக் குரிய தீர்வுகளை எடுப்பதற்கு மிகவும் எளிமையானதாகவும், எண்ணங்கள் மேம்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் வடுகப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி குமார், இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மொழி அரசு, ஒன்றிய கவுன்சிலர் மதியழகன் உட்பட  பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×