என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணமேல்குடி அரசு மகளிர் பள்ளி மாணவிகள் கடுமையான போக்குவரத்து நெரிச லுக்கிடையே ஆபத்தான நிலையில் சாலையை கடக்கும்
    X
    மணமேல்குடி அரசு மகளிர் பள்ளி மாணவிகள் கடுமையான போக்குவரத்து நெரிச லுக்கிடையே ஆபத்தான நிலையில் சாலையை கடக்கும்

    மணல்மேல்குடியில் சாலையை கடக்க தினமும் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் பள்ளி மாணவிகள் - வேகக் கட்டுப்பாடு தடுப்புகள் அமைக்க வேண்டுகோள்

    சாலையை கடக்க தினமும் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் அரசு பள்ளி மாணவிகள். வேகக் கட்டுப்பாடு தடுப்புகள் அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    கொரோனா  பரவல் காரணமாக  மாணவர்களின் கல்வித்திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி இடைநிற்றலை தடுக்க இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிவித்து தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    இருந்தபோதிலும்   ஆர்வ முடன்  பள்ளிக்கு  வரும் மாணவ, மாணவிகளை ஊக்குவித்து, அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பணியில் பள்ளிக்கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது. கவுன்சிலிங் முறையும் கையாளப்பட்டு வரும் நிலையில் மாணவர்களின் நிலையை மேம்படுத்துவது ஒரு சவாலான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையோரமாக உள்ள இந்த பள்ளியில் 1,200 மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

    இவர்கள்  அனைவரும் தினந்தோறும்  பள்ளிக்கு வந்து செல்வதில் பல்வேறு சிரமங்களையும், சவால்களையும் சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக்கு வந்து செல்லும் போது, சாலையை கடப்பதில் பெரும் சிரமம் நீடித்து வருகிறது.

    கிழக்கு கடற்கரை சாலை என்பதால் அந்த வழியாக ஒரு வினாடி கூட இடைவெ ளியின்றி ஆயிரக்கணக்கான  சிறிய, பெரிய வாகனங்கள் சென்ற வண்ணம் இருப்பதால் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் அந்த சாலையை கடப்பது கடினமாக உள்ளது. ஒரு சில சமயங்களில் மாணவிகள் புத்தக பையுடன் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக காத்துக்   கிடக்கும் சூழ்நிலை யும் ஏற்பட்டுள்ளது.

    பள்ளி அமைந்துள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட நிலையிலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதனை கண்டு கொள்வதில்லை. மின்னல் வேகத்தில் கடக்கும் வாகனங்களால் பல சமயங்களில் விபத்துகளும் நடந்துள்ளன.

    எனவே மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்களின் நலன் கருதி மணமேல்குடி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி எதிரே அல்லது  அருகில்வேகக்கட்டுப் பாட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும். பள்ளி வகுப்பு கள் முடியும் நேரங்களில் ஊர்க்காவல் படை, போக்கு வரத்து காவல் துறையினரை கொண்டு மாணவிகள் எளி தில்  சாலையை கடக்க உதவிட  வேண்டும்  என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×