என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள சதிராட்ட கலைஞர் விராலிமலை முத்துகண்ணம்மாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்ப
    X
    பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள சதிராட்ட கலைஞர் விராலிமலை முத்துகண்ணம்மாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்ப

    பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள முத்துக்கண்ணம்மாளுக்கு பாராட்டு விழா

    பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள விராலிமலை முத்துக்கண்ணம்மாளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த 83 வயதான முத்துக்கண்ணம்மாள்  சதிராட்ட  கலைஞர். இவர் 2022-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
     
    தலைநகர் புதுடெல்லியில் வருகிற ஏப்ரல் மாதம் ராஷ்ட்ரபதி பவனில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதை  வழங்கி  அவரை கவுரவிக்க உள்ளார். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாராட்டு விழா விராலிமலை முருகன் மலைக்கோவில் மணிமண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவில் அறநிலையத்துறை தஞ்சை மண்டல இணை ஆணையர் தென்னரசு, அறங்காவலர் குழுத்தலைவர்  செந்தில்குமார், உதவி ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் சரவணன், இளநிலை  பொறியாளர் பாலசுப்பிரமணியன், இசை வேளாளர் அறக்கட்டளை தலைவர் பூபாலன், அறங்காவலர் குழு  உறுப்பினர் ஜனனி ராமச்சந்திரன், கோவில் சூப்பிரண்டு மாரிமுத்து,

    குருக்கள் கணேசன், சிவ மகாதேவன், மாமுண்டி உள்ளிட்ட   அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்று பத்ம ஸ்ரீ  விருதுக்கு தேர்வாகியுள்ள முத்துக்கண்ணம்மாளுக்கு பணமுடிப்பு மற்றும் சால்வை, மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
    Next Story
    ×