என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் புகார் அளிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிகளை அரசியல் கட்சியினர் மீறினால் புகார்கள் அளிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை, அறந்தாங்கி என இரு நகராட்சிகளும், அன்னவாசல், அரிமளம், ஆலங்குடி, இலுப்பூர், கறம்பக்குடி, கீரனூர், கீரமங்கலம் மற்றும் பொன்னமராவதி என 8 பேரூராட்சிகளும் ஆக மொத்தம் 10 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளது.
அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகளும், புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளும், ஆக மொத்தம் 69 வார்டுகள் உள்ளது. 8 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள் வீதம் 120 வார்டுகள் உள்ளது. ஆகக்கூடுதலாக 189 வார்டுகளில் எதிர்வரும் நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை நகராட்சி யில் மொத்தமுள்ள 42 வார் டுகளில், ஆதிதிராவிடர் (பொ) பிரிவிற்கு 2 வார்டுகளும், ஆதிதிராவிடர் (பெ) பிரிவிற்கு 3 வார்டுகளும், பெண் (பொ பிரிவிற்கு 18 வார்டுகளும் ஆக மொத்தம் 23 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 19 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறந்தாங்கி நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், ஆதிதிராவிடர் (பொ) பிரிவிற்கு 1 வார்டும், ஆதி திராவிடர் (பெ) பிரிவிற்கு 1 வார்டும், பெண் (பொ) பிரிவிற்கு 13 வார்டுகளும் ஆக மொத்தம் 15 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எட்டு பேரூராட்சிகளில் உள்ள 120 வார்டுகளில் ஆதி திராவிடர் (பெ) பிரிவிற்கு 11 வார்டுகளும், ஆதிதிராவிடர் (பொ) பிரிவிற்கு 6 வார்டுகளும், பெண் (பொ) பிரிவிற்கு 53 வார்டுகளும் ஆக மொத்தம் 70 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை நகராட்சியில் 63,739 ஆண் வாக்காளர்களும், 68,472 பெண் வாக்காளர்களும் 17 இதர வாக்காளர்களும், ஆக மொத்தம் 1,32,228 வாக்காளர்கள் உள்ளனர்.
அறந்தாங்கி நகராட்சியில் 17,090 ஆண் வாக்காளர்களும், 18,601 பெண் வாக்காளர்களும் 2 இதர வாக்காளர்களும், ஆக மொத்தம் 35,693 வாக்காளர்கள் உள்ளனர்.
8 பேரூராட்சிகளில் 39,663 ஆண் வாக்காளர்களும், 41,377 பெண் வாக்காளர்களும் 3 இதர வாக்காளர்களும், ஆக மொத்தம் 81,043 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 10 நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 1,20,492 ஆண் வாக்காளர்களும், 1,28,450 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர்களும், ஆக மொத்தம் 2,48,964 வாக்காளர்கள் உள்ளனர்.
26.01.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மாதிரி நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக புகார் அளிக்க ஏதுவாக 04322 221691 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மாதிரி நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக புகார்கள் ஏதுமிருப்பின் மேற்கூறிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Next Story