என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • லாரி மோதி சிறுமி பலியானார்
    • சாலையை கடக்க முயன்ற போது நடந்த சம்பவம்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சத்திரப்பட்டி கிரமத்தை சேர்ந்தவர் பாலு மகள் காயத்ரி (வயது13). இவர் தனது வீட்டிலிருந்து எதிரே உள்ள புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவத்தில் உடல் துண்டாகி காயத்ரி உயிரிழந்தார்.இதனைப் பார்த்து அதிர்ச்சி மற்றும் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் மரங்களை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த வல்லத்திராகோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். லாரி ஓட்டுனரான நல்லபுடையான்பட்டியை சேர்ந்த தங்கராசு என்பவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • வயிற்றுவலியால் அவதிபட்டு வந்தார்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்தி விடுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ராஜ்குமார் (வயது 24) இவர் வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவரது தந்தை உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். வயிற்று வலியும், தந்தை இறந்த சோகமும் இவரால் தாங்கமுடியாமல் மனவிரக்தியில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்பை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பட்டதாரி ஆசிரியர்களுக்கான குருவளமைய பயிற்சி கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை தொடர்ந்து ஆசிரியர்கள் வழங்கி வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    புதுக்கோட்டை,

    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான குருவளமைய பயிற்சி கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி முகாமில், கந்தர்வகோட்டை ஒன்றிய பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கலந்து கொண்டனர்.

    பயிற்சி முகாமில் பாடப்பொருளை மாணவர்களுக்கு எளிமையாக கற்பிக்கும் யுத்திகள், அதற்கான கற்றல் உபகரணங்கள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல், மாணவர்கள் நிலை அறிந்து கற்பித்தல் போன்றவற்றில் கலந்துரையாடல் நடைபெற்றது.

    இப் பயிற்சியினை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் பார்வையிட்டு ஆசிரியர்கள் கலந்துரையாடல் செய்த கருத்துக்களை வகுப்பறையில் பயன்படுத்த ஊக்குவித்து,

    அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை தொடர்ந்து ஆசிரியர்கள் வழங்கி வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    மேலும் வட்டார கல்வி அலுவலர்கள் நரசிம்மன், வெங்கடேஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கதுரை ஆகியோர் அனைத்து பாட ஆசிரியர்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தனர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மையம் மேற்பார்வையாளர் பிரகாஷ், ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ்குமார், சங்கிலி முத்து, பாரதிதாசன், ராஜேஸ்வரி, நந்தினி ஆகியோர் செய்திருந்தனர்.

    • மர்ம நபர் ஒருவர் சரண்யாவின் கைப்பையிலிருந்த ரூ.7 ஆயிரத்தை திருடிக்கொண்டு ஓட முயற்சித்துள்ளார்
    • அங்கிருந்தவர்கள் பணத்தை திருடிக்கொண்டு ஓட முயற்சித்த நபரை கையும் களவுமாக பிடித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்து ள்ளனர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது29) இவரும் இவரது கணவர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் அறந்தாங்கிக்கு வந்து அவர்களுக்கு தெரிந்த நபரிடம் ரூ.7 ஆயிரம் கைமாற்றாக பெற்றுக் கொண்டு ஊர் செல்லுவதற்காக அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏரி அமர்ந்துள்ளனர்.

    அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சரண்யாவின் கைப்பையிலிருந்த ரூ.7 ஆயிரத்தை திருடிக்கொண்டு ஓட முயற்சித்துள்ளார். சுதாரித்துக் கொண்ட சரண்யா தனது பணத்தை ஒருவர் திருடிவிட்டதாக கூச்சலிட்டுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பணத்தை திருடிக்கொண்டு ஓட முயற்சித்த நபரை கையும் களவுமாக பிடித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்து ள்ளனர்.

    அதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் இராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினம் பகுதியை சேர்ந்த சையது இப்ராஹிம் (30) என்பதும், இவர்மீது ஆவுடை யார்கோவில் ஏ.டி.எம். மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரி யவந்துள்ளது.அதனை தொடர்ந்து சையது இப்ராஹிம் சிறையிலடைத்தனர்.

    • ஒருங்கிணைந்த கல்வி குறித்தும் கல்வி சீர் வழங்கும் விழா சிறப்பாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
    • தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக மாணவர்களுக்கு கையேடு வழங்குதல் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை,

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் இலக்கிய தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முதல் பருவ தேர்ச்சி அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது.

    மாணவர்களின் ஆரோக்கியம் நலவாழ்வு குறித்தும் இடைநீற்றல், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்தும், இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்தும், ஒருங்கிணைந்த கல்வி குறித்தும் கல்வி சீர் வழங்கும் விழா சிறப்பாக நடத்துவது பற்றியும், சிறப்பு சீருடை வழங்குவது குறித்தும் தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக மாணவர்களுக்கு கையேடு வழங்குதல் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் சேர்க்கை, தக்க வைத்தல், குழுகற்றல் குழு' கட்டமைப்பு குழு, மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. விழாவில் ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரி சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், ஆசிரியர்கள் மணிமேகலை, ரகமத்துல்லா, ஆனந்தராஜ், நிவின், செல்விஜாய், தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    • பொன்னன்விடுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 94 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்
    • இந்தப் பள்ளியின் முகப்பு பகுதி நேற்று மாலை திடீரென்று பெயர்ந்து விழுந்தது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பொன்னன்விடுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் சுமார் 17 வருடங்களுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும்

    இப்பள்ளியில் 94 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் முகப்பு பகுதி நேற்று மாலை திடீரென்று பெயர்ந்து விழுந்தது. நேற்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. மேலும் இதேபோல் கறம்பக்குடி ஒன்றியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு களபம் அரசு பள்ளி இடிந்து விழுந்து மாணவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராங்கியன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது. இதேபோல் தொடர்ச்சியாக பள்ளி கட்டிடங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுவதால் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அச்சம டைந்துள்ளனர். எனவே தமிழக அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விரைவில் 50 படுக்கை வசதிகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை புதுக்கோட்டையில் அமைய உள்ளது.
    • ஒரே இடத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யோகா மருத்துவ பிரிவுகள் நவம்பர் 1 ம் தேதி முதல் பழைய மருத்துவ மனை வளாகத்தில் செயல்பட உள்ளது.

    புதுக்கோட்டை,

    மருத்துவ கடவுளாக வணங்கப்படும் தன்வந்திரி பிறந்த நாளான ஐப்பசி மாத திரியோதசி நட்சத்திரம் அன்று தேசிய ஆயுர்வேத தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை புதுக்கோட்டையில் மாபெரும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    இம் முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா கலந்துகொண்டு தலைமை தாங்கினார். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதை பித்தன், ஊரக நலத்துறை திட்ட அலுவலர் கருப்புசாமி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர். சிவகாமி, ரோட்டரி கிளப் சார்பாக மண்டல செயலாளர் சிவாஜி மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தனர்.

    முகாமில் மாவட்ட சித்த மருத்துவர் மருத்துவர் எஸ்.காமராஜ் எழுதிய நாள்பட்ட நோய்களுக்கு சித்த மருத்துவம் என்ற நூலை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா வெளியிட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதை பித்தன் பெற்றுக்கொண்டார். முன்னதாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பேசுகையில், முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.

    மேலும் விரைவில் 50 படுக்கை வசதிகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை புதுக்கோட்டையில் அமைய இருப்பதாகவும், மேலும் ஒரே இடத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யோகா மருத்துவ பிரிவுகள் நவம்பர் 1 ம் தேதி முதல் பழைய மருத்துவ மனை வளாகத்தில் செயல்பட இருப்பதாகவும்,

    உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க 20 படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன எனவும் , இம் மருத்துவ வசதிகளை புதுக்கோட்டை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் பேசினார். முகாமிற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் சுயமரியாதை, அமுதமீனா, சத்தியவாணி, ரஞ்சனி, ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலியானார்
    • அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    புதுக்கோட்டை

    விராலிமலை தாலுகா வடுகப்பட்டி பூங்கா நகரை சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவருடைய 3-வது மகன் பொன் ஆதவன் (வயது 15). இவர் விராலிமலை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்த தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். வேலூர் சாலையில் உள்ள திருமலை நகர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர கட்டிடத்தின் மீது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. மேலும், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த பொன் ஆதவனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சிறுவன் பொன் ஆதவன் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரசியலாக்க கூடாது என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
    • யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடியில் அருகே ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறும் போது,

    பத்திரிகையாளர்களை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்ச்சை க்குரிய வகையில் பேசியது கண்டனத்துக்கு ரியது, அரசியல் கட்சித் தலைவருக்கு இது அழகல்ல. பத்திரிகையாளர்களை மதிக்கும் பண்பை முதலில் அவர் கற்றுக் கொள்ள வேண்டும் .

    கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தி ல் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக ளை கண்டறிந்தது, அதே வேளையில் இந்த சம்பவத்தில் தேசிய மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ப தால் தான் இந்த வழக்கை என்ஐ ஏ விற்கு மாற்ற தமிழக முதல்வர் பரிந்துரை செய்துள்ளார்,

    இந்த பிரச்சனையில் முறையான விசார ணை நடந்து கொண்டிருக்கும்போது தேவையில்லாத கருத்துக்க ளை அரசியல் தலைவர்கள் சொல்ல வேண்டியதில்லை,

    திருமாவளவன் வைகோ உள்ளிட்டவர்கள் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என ஹெச். ராஜா சொல்லி இருப்பது நகைச்சுவையாக உள்ளது, ஹெச்.ராஜா கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை,

    கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரசியலாக்க கூடாது, இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்,

    ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவிற்கு வயதாகி விட்டாலும் உணர்ச்சி வேகம் இன்னும் குறையவில்லை,அவர் இன்று வரை களத்தில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார், அவரின் வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது
    • ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே கல்லாலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள் ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியர் விஜயகுமாரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் கவிதா மற்றும் கருத்தாளர் கோமதி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் அடிப்படை தேவைகள் மற்றும் பள்ளிசெல்லா குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பது பள்ளிக்கு தேவையான கட்டிட வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர், கருத்தாளர் கோமதி, தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • மீன் வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படும்
    • கலெக்டர் கவிதா ராமு தகவல்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியமும், பெண் பயனாளிகளுக்கு மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60சதவீதம் மானியமும் கூடிய ஏழு புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு, சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் (குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம்) இருத்தல் வேண்டும். மீன்வளர்ப்பு, மீன்குஞ்சு வளர்ப்பிற்கு ஏற்ற நீர் ஆதாரம் இருத்தல் வேண்டும். கடந்த 2018-19 முதல் 2020-21 முடிய உள்ள ஆண்டு வரை உள்ள கால கட்டத்தில் மத்தியஃமாநில அரசிடமிருந்து உள்ளீட்டு மானியம் பெற்ற மீன் வளர்ப்பு விவசாயிகள் இம்மானியம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

    மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை வரும் 15-ந் தேதி க்குள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அளிக்குமாறு அல்லது தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    மேலும் அலுவலக முகவரி, மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பிளாட் எண்.1 டவுன் நகரளவு எண்.233ஃ1, அன்னை நகர், நிஜாம் காலனி விஸ்தரிப்பு, புதுக்கோட்டை, தொலைபேசி எண் 04322 266994, அலைபேசி எண் 93848 24268 ஆகும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது
    • இதனால் மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெரியோர்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    எனவே இந்த மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் மருத்துவக் குழுவினருடன் சேர்ந்து ஆலங்குடி பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×