என் மலர்
நீங்கள் தேடியது "குருவளமைய பயிற்சி. MASTERY TRAINING"
- பட்டதாரி ஆசிரியர்களுக்கான குருவளமைய பயிற்சி கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை தொடர்ந்து ஆசிரியர்கள் வழங்கி வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
புதுக்கோட்டை,
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான குருவளமைய பயிற்சி கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில், கந்தர்வகோட்டை ஒன்றிய பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கலந்து கொண்டனர்.
பயிற்சி முகாமில் பாடப்பொருளை மாணவர்களுக்கு எளிமையாக கற்பிக்கும் யுத்திகள், அதற்கான கற்றல் உபகரணங்கள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல், மாணவர்கள் நிலை அறிந்து கற்பித்தல் போன்றவற்றில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இப் பயிற்சியினை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் பார்வையிட்டு ஆசிரியர்கள் கலந்துரையாடல் செய்த கருத்துக்களை வகுப்பறையில் பயன்படுத்த ஊக்குவித்து,
அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை தொடர்ந்து ஆசிரியர்கள் வழங்கி வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் வட்டார கல்வி அலுவலர்கள் நரசிம்மன், வெங்கடேஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கதுரை ஆகியோர் அனைத்து பாட ஆசிரியர்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தனர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மையம் மேற்பார்வையாளர் பிரகாஷ், ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ்குமார், சங்கிலி முத்து, பாரதிதாசன், ராஜேஸ்வரி, நந்தினி ஆகியோர் செய்திருந்தனர்.






