என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி
- மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலியானார்
- அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
புதுக்கோட்டை
விராலிமலை தாலுகா வடுகப்பட்டி பூங்கா நகரை சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவருடைய 3-வது மகன் பொன் ஆதவன் (வயது 15). இவர் விராலிமலை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்த தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். வேலூர் சாலையில் உள்ள திருமலை நகர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர கட்டிடத்தின் மீது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. மேலும், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த பொன் ஆதவனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சிறுவன் பொன் ஆதவன் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






