என் மலர்
புதுக்கோட்டை
- பனை மரங்கள் ஏற்றி சென்ற லாரிலை போலீசார் சிறை பிடித்தனர்
- அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.
ஆலங்குடி :புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மர்ம நபர்கள் சிலர் அரசு இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள பனை மரங்களை வெட்டி விற்பனை செய்து வருவதாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரிடம் முறையிட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு பனை மரங்களை வெட்டி லாரியில் மரங்களை ஏற்றிக் கொண்டு பனங்குளம் பாலம் பகுதியில் வந்தபோது அங்கு திரண்ட நாம் தமிழர் கட்சியினர் அந்த வாகனத்தை சிறைப்பிடித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குளமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் காவல் துறையினர் மரங்களை ஏற்றி வந்த வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.
- ரூ.10 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டனர்
- பக்தர்கள் கோயில் நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
கந்தர்வகோட்டை :புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நொடியூர் கிராமத்தில் உள்ள ஆதிநாதர் மற்றும் ஆதி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 152 ஏக்கர் நிலங்கள் பல ஆண்டுகளாக தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயில் நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். கோவில் நிலங்களை மீட்க ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி இயக்குனர் அனிதா அறிவுறுத்தலின்படி, புதுகை திருக்கோவில் நிர்வாக அலுவலர் சந்திரசேகரன், சரக அலுவலர் திவ்யபாரதி, சண்முகசுந்தரம், தனி தாசில்தார் ரத்னாவதி மற்றும் கோவில் அலுவலர்கள் அதிரடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள, 152 ஏக்கர் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத்துறை சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை நட்டனர்.
- பயிற்றுநர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி வேண்டுகோள்
- எழுத படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவை வழங்கிட புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தபட உள்ளது.
விராலிமலை :பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை கீரனூர் மற்றும் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் செயல்படுத்துவதற்கான மைய கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி கீரனூர் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. பயிற்சி மையத்தை பார்வையிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் பேசியதாவது: தமிழ்நாட்டில் 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கை அடிப்படையாகக் கொண்டு முதியோர்களுக்கான எழுத்தறிவையும் எண்ணறிவையும் வழங்கிட கற்போம் எழுதுவோம் இயக்கம் 2020-2022 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 394 கற்றல் மையங்களில் 7949 கற்போர் அடிப்படை எழுத்தறிவுக் கல்வியைப் பெற்று பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எண்ணறிவையும் எழுத்தறிவையும் வழங்கி மாநில எழுத்தறிவு விகிதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அடைந்திடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-2027 என்ற புதிய திட்டம் 5 ஆண்டுகள் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 13,680 கற்போர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் அனைவரும் எழுதப் படிக்கத் தெரியதவர்களுக்கு கையெழுத்து போடவும், மனு எழுதவும், கடிதம் எழுதவும், நாளிதழ்கள் படிக்கவும் கற்றுக் கொடுக்கவும் வேண்டும். அதே போல் தன்னார்வலர்களிடம் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் அரசுப் பணிக்கு வரலாம் என்றார். நிகழ்ச்சியில் பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மெஹராஜ் பானு, காந்திமதி, வட்டார வளமைய மேறபார்வையாளர் அனிதா, இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர். பயிற்சியின் கருத்தாளர்களாக சுரேஷ், அப்சரா பானு, மாரியம்மாள் ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநர்கள் மஞ்சு,சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
- 67 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8.52 லட்சத்தில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன
- கலெக்டர் கவிதா ராமு, பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.
புதுக்கோட்டை :புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 15 பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் மூலமாக 52 பயனாளிகளுக்கு ரூ.7,02,000 மதிப்பில் நவீன செயற்கை கால், ஊன்றுகோல், கைதாங்கி, முழங்கைதாங்கி, காலிபர், கற்றல் உபகரணங்கள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைபேசி, சிறப்பு உபகரணங்கள் என மொத்தம் 67 பயனாளிகளுக்கு ரூ.8,52,000 மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், முடநீக்கியியல் வல்லுநர் ஜெகன் முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- மணல் ஏற்ற வந்த டிப்பர் லாரிகளை வழிமறித்து போராட்டம் நடத்தினர்
- வெள்ளாற்றுப் பகுதியில் மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது
அறந்தாங்கி:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பரமந்தூர் வெள்ளாற்றுப் பகுதியில் மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் நேரடியாக மணல்குவாரிக்கு சென்று மணல் அள்ளுவதற்கு பதிலாக, தனியார் அள்ளி வைக்கும் மணலை எடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே தனியார் அள்ளி வைக்கும் மணலில் தரம் இல்லை, இதனை மக்களிடம் விற்க முடியாது, அதற்கு பதிலாக தாங்களே நேரடியாக மணல் அள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வழியாக மணல் ஏற்ற வந்த டிப்பர் லாரிகளை வழிமறித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்த்துறையினர் ஆகியோர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி திருச்சியில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளோடு இரு தரப்பினரையும் வைத்து முடிவு எடுக்கலாம் என கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.
- பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு
- 2 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மன்னர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவிக்கு கவுர விரிவுரையாளர் முத்துக்குமரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முத்துக்குமரனை கல்லூரியில் மாணவர்கள் சிலர் தாக்க முயன்றதுடன், அவரது இருசக்கர வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் திருச்செல்வத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உதவி பேராசிரியர்கள் 6பேர் கொண்ட விசாரணை குழுவை கல்லூரி முதல்வர் அமைத்தார். அந்த குழு அளித்த விசாரணை அறிக்கையின்படி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் செயல்பட்டதாக கவுரவ விரிவுரையாளர்கள் முத்துக்குமரன், கலையரசன் ஆகியோரை கல்லூரி முதல்வர் திருச்செல்வம் பணி நீக்கம் செய்தார்.
- உடல் நிலை சரியாகவில்லை என்ற மன உளைச்சல்
- அரசு மருத்துவமனையில் பெண் தற்கொலை செய்து கொண்டார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டியை சேர்ந்தவர் முருகன் மனைவி அம்சவள்ளி (வயது52). இவர் உடல் நலக்குறைவுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக ேசர்ந்தார். 3-வது தளத்தில் உள்ள வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அம்சவள்ளி, அங்குள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் நிலை சரியாகவில்லை என்ற மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.
- தி.மு.க.-அ.தி.மு.க.விற்கு இணையாக பலத்தை நிருபிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
- 25 தொகுதிகளில் வெற்றி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைப்பெற்றது. கூட்டத்தில் மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துக் கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள், மாவட்ட அணி தலைவர்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தங்கள் உழைப்பை காட்ட வேண்டும். மூன்று மாதம் கெடு. உழைப்பில் திருப்தி இல்லையெனில் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள். பா.ஜ.க. கட்சியில் காங்கிரஸ் கட்சியை போன்று பொறுப்புகளை அள்ளி தெளிக்கமாட்டார்கள். நிர்வாகிகள் கட்சியையும் வளர்க்க வேண்டும், தங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கால் ரயிலில் இருக்க வேண்டும், ஒரு கால் ஜெயிலில் இருக்க வேண்டும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுபயணம் செய்வதை ரயில் குறிக்கும், மக்கள் போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறை செல்ல தயாராக இருக்க ஜெயில் குறிக்கும். வருகிற 2024 நாடாளுமன்ற ேதர்தலில் மாநில தலைவர் அண்ணாமலை கூறியது போல் 25 தொகுதிகளில் வெற்றி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அது சாத்தியமாகும் பட்சத்தில் 2026ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு இணையாக அல்லது கூடுதலாக பலத்தை நிரூபிக்க வேண்டும். வாக்கு சாவடி மையங்களில் பொறுப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகிகள் தங்கள் பொறுப்புகளை தக்க வைத்து கொள்ள உழைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில துணை பொது செயலாளர் புரட்சி கவிதாசன், அமைப்பு செயலாளர் செல்வம், மாவட்ட பொது செயலாளர்கள் கணேசன், குருஸ்ரீராம், மாவட்ட செயலாளர் சுந்தரவேல், மாவட்ட பொருளாளார் தொழிலதிபர் முருகானந்தம், ஒன்றிய தலைவர்கள், மாவட்ட அணி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மன விரக்தியில் விபரீத முடிவு
- கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
புதுக்கோட்டை :
பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டியைச் சேர்ந்தவர் சிங்காரம் மகன் சஞ்சய் (வயது22). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி சுந்தரி மற்றும் 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனவிரக்தியான சஞ்சய் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
- விராலிமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை விராலிமலை ஒன்றிய குழு தலைவர் காமு மணி, அட்மா சேர்மன் இளங்குமரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற தஞ்சாவூர் மீரா சந்தானம் கலைக்குழுவினர் மூலம் கரகாட்டம், எமன் வேடம் அணிந்து நாடகம் மற்றும் நாட்டுபுற பாடல் பாடியும் கலை நிகழ்ச்சி நடத்தினர். இதில் ரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்புகள், ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உணவு முறைகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்கள் புரிந்து கொள்ளும் விதமாக எளிதாக விளக்கப்பட்டது. நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பயணிகள் கண்டுகளித்தனர். மேலும் இரத்த சோகையை தடுப்பதற்காக பல்வேறு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் மேரி ஜெய பிரபா, மேற்பார்வையாளர் கோகிலம், ராஜாமணி, பர்வீன் பானு, ரோஸ்லின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குடியில் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது
- குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க தீர்மானம்
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் ஓய்வூதியர் தின விழா கிளை அலுவலகத்தில் நடை பெற்றது.கிளை தலைவரும், மாவட்ட செயலாளாருமா,சிதம்பரம், தலைமையில் நடைபெற்றது.மாவட்ட, பிராச்சார செயலாளர். கலியபெருமாள். மாநில செயற்குழு உறுப்பினர் உத்தமநாதன், வட்ட கிளை செயாளாலர், சிவானந்தம், பொருளாலர் அரங்குளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில்1.7.2022 முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கு வழங் கிய அகவிலைப்படியினை உடனடியாக வழங்கிவும், நிலுவையில் உள்ள குடும்ப பாதுகாப்பு நிதியினை கால தாமதமின்றி வழங்கிட வேண்டிம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இவ்விழாவில், ஓய்வூதியம், சட்டபூர்வமாக (17.12.1982) ல் வாங்கி கொ டுத்த, டிஎஸ் நகரா அவர்களையும் மற்றும் ஓய்வூதியம் சங்க நிறுவ னத் தலைவர் நாராயணராவ், (லேட்) அவர்களின் படத்திற்கு மலர்தூ வி அஞ்சலி செலுத்தப்பட்டது.
- மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
- தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் மின் சேமிப்பு வார விழா ஆலங்குடியில் நடந்தது.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் மின் சேமிப்பு வார விழா ஆலங்குடியில் நடந்தது.மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆலங்குடி செயற்பொறியாளர் நடராஜன் பஸ் ஸ்டாண்டிலிருந்து தலைமையேற்று கொடிய சைத்து துவக்கி வைத்தார். ஆலங்குடி நகரம் உதவி செயற்பொறியாளர் பிருந்தாவனன் முன்னிலையில் வகித்தார்.மின்சாரத்தை அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம் சூரிய ஒளி இருக்க மின் ஒளி எதற்கு மின்சாரம் நாட்டின் ஆதாரம் மின்சாரம் தேவை.மின்நிலையம் தவிர்த்து மின்தேவையை குறைப்போம் மின் உபகரணங்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப் போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஒலிபெருக்கி மூலம் காமராஜர் சிலை அரசமரம் பஸ் ஸ்டாப் வடகாடு முக்கம் சந்தைப்பேட்டை வரை சென்றடைந்தது.மின்வாரிய ஊழியர்கள் கடைகள் பொதுமக்களிடையே மின்சிக்கன ம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வினியோகத்தினர். மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்பு ணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.






